Namvazhvu
இறை இரக்கம், நாம் நினைப்பதைவிட பெரியது
Thursday, 20 Jun 2019 06:52 am

Namvazhvu

இறைவனின் இரக்கம் மிக உயர்ந்தது, நாம் நினைப்பதைவிட மிகப் பெரியது என்பதை மனதில்கொண்டு ஒவ்வொருவரும் செயல்படுவோம் என மார்ச் 18 ஆம் தேதி, திங்கள் காலை திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு விடுத்தார்.
தீர்ப்பிடாதீர்கள், மன்னியுங்கள், இரக்க முள்ளவர்களாகச் செயல்படுங்கள் என இயேசு விண்ணப்பிப்பதை எடுத்துரைக்கும் இன்றைய நற்செய்தியின் அடிப்படையில், சாந்தா மார்த்தா இல்ல சிற்றாலயத் திருப்பலியில் மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரான்ஸ் நாட்டு  ஆர்ஸ் நகரப் பங்குதந்தை புனித ஜான் மரிய வியான்னி அவர்களின் வாழ்வில் இடம்பெற்ற ஒரு நிகழ்வை மேற்கோள்காட்டி, இறை இரக்கத்தின் மேன்மையைச் சுட்டிக்காட்டினார்.
பாலத்திலிருந்து குதித்து தற்கொலை புரிந்த தன் கணவர், தற்கொலையின் வழியாக மன்னிக்க முடியாத பெரிய பாவத்திற்கு உள்ளாகிவிட்டார் என அழுது புலம்பிய விதவைப்
பெண்ணை நோக்கி, ‘அந்த பாலத்திற்கும், அவர் விழுந்த ஆற்றிற்கும் இடையே இறைவனின் இரக்கம் இருந்தது’ என புனித ஜான் மரிய  வியான்னி கூறியதை எடுத்துரைத்தத் திருத் தந்தை, இறைவனிடம் திரும்பி வர, நம்மால் முடியாது என, எவரும் எண்ணமுடியாது என்று கூறினார்.
வாழ்வில் ஒவ்வொரு நாளும் மற்றவர்களை எத்தனைமுறை தீர்ப்பிடுகி றோம் என்பதை நமக்கு நாமே கேட்டுக் கொள்வோம், ஏனெனில், இந்தக் குண
மானது, நம் முழுக்கவன மின்றி, ஒரு தொடர் நிகழ் வாக மாறிவிடுகிறது எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார். 
மற்றவர்களுக்கு அளவின்றி வழங்கும்போது, நமக்கு, அது  நூறு மடங்காக, இறைவனால் வழங்கப்படும் எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை, பொருளுதவி மட்டுமல்ல, ஆலோசனை, புன்னகை என பல்வேறு வழிகளில் நாம் உதவமுடியும் எனவும் கூறினார்.