Namvazhvu
திருத்தந்தை வாழ்க்கை என்பது மக்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பு
Thursday, 19 Jan 2023 10:50 am
Namvazhvu

Namvazhvu

வாழ்க்கை என்பது தனக்குள்ளிருந்து வெளியே சென்று கடவுளின் பெயரால் மக்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பு என்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினை  திருத்தந்தை  பிரான்சிஸ் பதிவிட்டுள்ளார்.

சனவரி 17 செவ்வாய், வாழ்க்கையை ஒரு வாய்ப்பாக பார்க்கவேண்டும் என்பதை வலியுறுத்தி பதிவிட்டுள்ள குறுஞ்செய்தியில் இவ்வாறுக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்க்கை என்பது அடுத்தவரைப் பார்த்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நேரமல்ல என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கடவுளின் வார்த்தையை நன்கு அறிந்தவர்கள், எது அடிப்படைத் தேவையோ அதைப்பற்றிய ஆரோக்கியமான பாடங்களை அனுபவங்களாகப் பெற்றுக் கொள்கின்றார்கள் என்றும், வாழ்க்கை என்பது அடுத்தவரைப் பார்த்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நேரமல்ல, மாறாக, தனக்குள்ளிருந்து வெளியே சென்று, கடவுளின் பெயரால் பிற மக்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பு என்றும் அச்செய்தியில் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.