புனித பிரான்சிஸ் மற்றும் ஜெசிந்தா போர்ச்சுக்கல் நாட்டில் பாத்திமா நகருக்கு அருகில் அல்ஜஸ்ட்ரல் கிராமத்தில் பிறந்தனர். குடும்ப செபத்தில் ஆர்வமுடன் பங்கேற்றார்கள். நற்செயல்களையும், ஒழுக்கத்தையும், ஆன்மீகத்தையும் பெற்றோரிடமிருந்து கற்றுக்கொண்டனர். தினந்தோறும் தவறாமல் செபமாலை செபம் செய்தனர். இயேசுவை இதயத்தில் சுமந்து, விசுவாசத்திலும், பிறரன்பிலும் வளர்ந்தனர். 1917 ஆம் ஆண்டு, மே 13 ஆம் நாள், பாத்திமா என்ற இடத்தில் பிரான்சிஸ், ஜெசிந்தா ஆடு மேய்த்தபோது, அன்னை மரியா ஒரு புதர் செடியின்மீது ஒளிமயமான மேகத்தின்மீது வந்திறங்கி, காட்சியளித்தார். மரியா: “நான் செபமாலையின் அன்னை” என்று தன்னை அறிமுகம் செய்தார். பிரான்சிஸ், ஜெசிந்தா தொற்றுக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டபோது, சிலுவையிலிருந்து சக்தியும், வல்லமையும் பெற்றனர். பிரான்சிஸ் 1919 ஆம் ஆண்டு, ஏப்ரல் 4 ஆம் நாளிலும், ஜெசிந்தா 1920 ஆம் ஆண்டு, பிப்ரவரி 20 ஆம் நாள் இறந்தனர்.