Namvazhvu
தேர்தல் களம் பதிலடி கொடுக்கும் துடிப்பு
Thursday, 20 Jun 2019 08:47 am

Namvazhvu

"என்னுடைய மீனவ சகோதரர்
களுக்கு நான் ஒன்றைச் சொல்லுகின் றேன். முழு ஆய்வு அறிக்கை எடுக்கவிட மாட்டேன் என்று ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாகப் போராடினீர்கள். முழு
ஆய்வு அறிக்கை எடுத்து முடிக்கப்பட்டு
விட்டது. வரக்கூடாது என்று போராடினீர்
கள் துறைமுகம் வந்துவிட்டது. துவக்கக் கூடாது என்று சொல்லு
வீர்கள்; யார் தடுத்தாலும் நிற்கப்
போவதில்லை. தேர்தல் முடிந்த
உடனடியாகவே துறைமுகப் பணிகள் துவக்கப்பட
இருக்கிறது. எங்களை யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது. உங்களை அழிக்காமல் விடமாட்டோம்" என்று பாகிஸ்தான் தீவிரவாதி களுக்கு சவால் விடுவதுபோல் தன் சொந்தத் தொகுதி மக்களுக்கு சவால் விடுபவர் கன்னியா
குமரி நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய அமைச்சருமான மாண்புமிகு. பொன் இராதா கிருஷ்ணன் அவர்கள்.
மக்கள் வாழ்வதற்குப் பொருத்தமான  சொந்த மாவட்டம் கன்னியாகுமரியில் 600 சதுர கிலோ மீட்டர் பகுதியில் பாதிப்புகளை உருவாக்கி, குறிஞ்சி முல்லை - மருதம் - நெய்தல் என்ற வளமான நான்கு வகை நிலங்களை அழித்து, பன்னாட்டுக் கம்பெனிகளின் கொழுத்த லாபத்திற்காக பாலைவனமாக்குவதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறி இயற்கையையும் சுற்றுச்
சூழலையும், வருங்கால தலைமுறை யின் வளமான வாழ்வையும் காக்கப் போராடிக் கொண்டிருக் 
கும் மக்களைப் பார்த்துதான் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் அமைச்சர் ஒன்றுமில்லாமல் நிராயுதபாணியாக மக்கள் சக்தியை மட்டுமே நம்பி போராட்டக் களத்தில் நிற்கும் மக்களைப் பார்த்து ஒரு யுத்தத்திற்கு அழைப்பு விடுவதுபோல் இப்படி சவால் விடுகிறார்.
கடந்த ஐந்தாண்டு ஆட்சியில்
நாட்டு மக்கள் எந்த மதத்தில்
இருக்கவேண்டும்? எந்த மொழியை
பேசவேண்டும்? என்ன உணவை உண்ணவேண்டும்? என்று சுளுளு. சங்பரிவார் அமைப்புகள் முடிவு செய்கின்றன.பசுவைக்
காப்போம் என்ற பெயரில் 32 அப்பாவி இஸ்லாமியர்
களும், தலித்துகளும் கொல்லப்பட்டனர். 3000க்கும்
மேற்பட்ட மதக் கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கினர். விவசாயத்தை அழித்து, விவசாயி
களை நடுத்தெருவில் நிர்வாணமாக அலைய விட்டனர். தற்கொலைக்குத் தூண்டினர்.
கல்வியை வியாபாரமாக்கி ஏழை எளிய
மக்களுக்கு கல்வியை எட்டாக்கனியாக மாற்றி விட்டனர். பல்வேறு மொழி, கலாச்சாரம், பண்பாடு,
வாழ்க்கை முறையைக் கொண்டுவாழும் மக்களை
யெல்லாம் ஒரே தேசம், ஒரே மொழி, ஒற்றைக் கலாச்சாரம் என்ற ஒற்றைக்குள் கொண்டு வந்தனர்.
இந்தியா முழுவதும் உள்ள 12 பெருந்துறைமுகங்களை சாலை வழியாகவும், நீர் வழியாகவும், ரயில்வே வழியாகவும் இணைத்து பன்னாட்டு முதலாளிகளின் தொழில்கேந்திரமாக மாற்றி நாட்டு மக்களை வெளியேற்றி, இயற்கையை அழிக்கும் 8 லட்சம் கோடி ’சாகர் மாலா’ திட்டத்தைக் கொண்டுவந்தனர்.
பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி மூலம் ஒரே இரவில் நடுத்தர மற்றும் ஏழை மக்களை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து நிறுத்தினார்.
தமிழ்நாட்டில்...
வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் விவசாயத்தையும், சிறு தொழிற்
சாலைகளையும், சிறு தொழில் முனைவோரின் வர்த்தகத்தையும் முற்றிலுமாக ஒழித்துக் கட்டினார்.
சேலம், தர்மபுரி, கிருஷ்ண கிரி பகுதிகளில் விவசாய விளை நிலங்கள் வழியாக கெயில் எரி வாயுக் குழாய்கள் பதிக்கும் திட்டம், புதுக்கோட்டை நெடு
வாசல் ஹைட்ரோகார்பன் திட்டம்,
கதிராமங்கலத்தில் எரிவாய்வு ஆழ்துளை கிணறு தோண்டும்
திட்டம், கடலூரில் பெட்ரோ கெமிக்கல் திட்டம், தேனி பகுதியில் மலையைக் குடைந்து
நியூட்ரினோ திட்டம், வடமேற்கு
மாவட்டங்களில் எட்டுவழி பசுமைச் சாலைத் திட்டம், டெல்டா மாவட்டங்களின் விளை
நிலங்களை பெட்ரோலிய மண்டலங்
களாக அறிவிக்கும் முயற்சி என்று விவசாயத்தைக் கபளீகரம் செய்து கொண்டிருக்கின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலை மூலம்
தூத்துக்குடி நகரின் சுற்றுச் சூழலை அழிக்கின்றனர்; போராடி
னால் துப்பாக்கியால் சுடுகின்றனர்.
கன்னியாகுமரி தொகுதியில்
2014 நாடாளுமன்ற தேர் தலில் வெற்றி பெற்றதிலிருந்து பாரதிய ஜனதா கட்சி அழகிய கன்னியாகுமரி மாவட்டத்தையே சிதைக்கின்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஐந்து நிலங்களில், குமரி மாவட்டம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற வளமான நான்கு நிலங்களுடன் மக்கள் வாழும் புண்ணிய பூமியாக திகழ்கிறது. இங்கு மக்களுக்கு மேலும் மேலும் அடிப்படை வசதிகளையும், இயற்கையைக் காத்து, சுற்றுச் சூழலைப்பேணி எல்லா தலை முறையினரும் நன்றாக வாழும்
வழிமுறையையும் ஏற்படுத்துவ தற்குப் பதிலாக வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் நீர்நிலைகளை அழித்து, ஓங்கி வளர்ந்த மரங்களை வேரோடுப் பிடுங்கி, மலைகளை உடைத்து, கடலில் கொட்டி, காடுகளை மொட்டையடித்து, விவசாய விளை நிங்களை பாழ்படுத்தி, கடலை அழித்து பாலைவனமாக்கத் துடிக்கின்றனர்.
குமரி மாவட்டத்தில் அமைக்கப்படும் நான்கு
வழிச்சாலைத் திட்டத்தால் நீர்நிலைகள் எதுவும் பாதிக்கப்படக்கூடாது. குளங்கள், ஏரிகள் பாதிக்கப்படாமலிருக்கும் அந்த இடத்தில்
பாலங்களைக் கட்டவேண்டும். தேவையில்லாமல் மரங்களை வெட்டி
அழிக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டபிறகும் டு&கூ கம்பெனி யைக் கொண்டு இரண்டு லட்சம் மரங்கள் வெட்டி எறியப்பட்டன. 77 குளங்கள் மணலையும் கல்லையும் கொட்டி நிரப்பி நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. இப்படி குமரியை
மக்கள் வாழ்வதற்கு லாயக்கற்ற இடம் என்று மாற்றி கார்ப்பரேட்டு களுக்கு தாரைவார்க்கத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சாகர்மாலா திட்டத்தின் அங்கமான சரக்குப் பெட்டக மாற்று
முனையங்களைக் கொண்டுவந்து இந்திய நாட்டின் பெரும் துறைமுகங் களோடு சாலை வழியாகவும், ரயில்   வழித்
தடம் வழியாகவும், இணைத்து அதானிக்கும் அம்பானிக்கும் இண்டஸ்ட்ரியல் காரிடார் அமைக்க முற்படுகிறார்கள். சாலைகள், பாலங்
கள் என்று அமைத்து சின்னஞ்சிறு மாவட்டத்தை கட்டுமானங்களால் நிரப்பி சிறு, குறு வியாபாரிகளின் ஒட்டுமொத்த வர்த்தகத்தையும் அழித்துவிட்டனர்.
கடலில் இறங்கவிடாமல்...
72 கி. மீ. நீளமுள்ள குமரிக்கடலில் 600 சதுர கிலோ மீட்டரில் துறைமுகம் அமைத்து 40 கி.மீ. நீள 40 கடற்கரைக் கிராம மீனவ மக்களைக் கடலுக்குள் இறங்கவிடாமலும், கடற்கரையில் வாழவிடாமலும் குடியெழுப்பி இடம்பெயரச் செய்ய முயற்சி நடக்கிறது. இத்தனை பிரச்சினைகளுக்கும் 2019ல் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பதிலடி கொடுக்கும் துடிப்புடன் மீனவ மக்கள் இருக்கின்றனர்.
குமரி வேட்பாளர்கள்:
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலில் குமரியை அழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் திரு. ராதாகிருஷ்ணன் பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. கூட்டணி சார்பில் மீண்டும் களம் காண்கிறார். எதிர் அணியில் தி.மு.க., காங்கிரஸ், இடது சாரிகள், வி.சி.க. மதிமுக மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திரு. வசந்தகுமார் போட்டியில் இருக்கின்றார். நாம் தமிழர் கட்சியில் திரு. ஜெயன்றீன் என்ற மீனவரை எங்கிருந்தோ தேடிக் கண்டுபிடித்து நிறுத்தியிருக்கின்றனர். அமமுக சார்பில் மீனவ மருமகன் என்ற அடைமொழியோடு திரு. லட்சுமணன் என்பவரைக் களம் இறக்கியுள்ளனர். நடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீனவ வேட்பாளர் ஒருவரை சல்லடை போட்டுத் தேடியும் கிடைக்காததால் திரு. எபினேசர் என்பவரைக் களம் இறக்கியுள்ளனர்.
ஒக்கி புயல் நேரத்தில் சிக்கிச் சிதைந்த மீனவர்களை மீட்புப்படையை அனுப்பிக் காப்பாற்றுங் கள் என்று கதறியபோது, "கர்த்தரே எங்களைக் காப்பாற்றும், இயேசுவே எங்களை மீட்டருளும் என்று ஜெபம் செய்வீர்களே! இப்போது எங்களிடம் ஏன் கேட்கிறீர்கள்? உங்கள் இயேசு மீட்பாரா பார்ப்போம். அப்படியே கடலில் அமிழ்ந்து சாகுங்கடா" என்று பேசிய பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், பரிவாரங்களுடன் கிறிஸ்தவ ஆயர்களையும், குருக்களையும், பாஸ்டர்களையும் அவர்களின், (பாவாடை) அங்கியுடன் போட்டோ எடுத்தும் ஆசீர்வாதம் வாங்கியும், ஜெபிக்கச் சொல்லியும், கோயில்களில் சென்று இயேசுவே எங்களை மீட்டருளும் என்று தேர்தல் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கோட்டாறு ஆயர் நசரேன் சூசை அவர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதையும், குழித்துறை ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் அவர்களை உடல் நலம் விசாரிப்பதுபோல் சென்று சந்தித்து போட்டோ எடுத்துவிட்டு, அதையெல்லாம் பா.ஜ.க. வுக்கு ஆதரவு என்று பதிவிட்டு ஆசி வாங்குவதுபோல், காலில் விழுவதுபோல் பிரார்த்தனை செய்வதுபோல் விதவிதமாக போட்டோக்களையும் பதிவிட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். அ.தி.மு.க., பா.ஜ.க.வோடு கூட்டணி அமைத்ததை விரும்பாத அ.தி.மு.க. உள்ளூர் மீனவத் தலைவர்கள் தேர்தல் பணிகளிலிருந்து விலகியிருக்க மீனவர்களை கிறிஸ்தவர்களை அழிக்கத் துடிக்கும் பி.ஜே.பி-க்கு, பொன் ராதாகிருஷ்ணனுக்கு நாங்கள் ஆதரவளிக்க முடியாது; எங்கள் மக்களை அழிப்பவர்களுக்கு தேர்தல் பணி ஆற்ற முடியாது என்று விலகியிருந்த அ.தி.மு.க. மீனவத் தலைவர்களை உங்கள் ஆயரே ஆதரவளித்து விட்டார். நீங்கள் எப்படி விலகியிருக்க முடியும்? எங்களுக்கு ஆதரவாக களம் இறங்குங்கள் என்று நெருக்கடி கொடுக்கின்றனர்.
மீனவர் தேர்தல் வியூகம்
2014 முதல் 2019 வரையுள்ள ஐந்து ஆண்டுகளில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் மீனவர்களுக்குச் செய்த கொடுமைகள் இதோ...
1.        நீரோடி முதல் ராஜாக்கமங்கலம் துறை வரையுள்ள 40 கி.மீ. தூர கடற்கரை மக்களை வெளியேற்ற சரக்குப் பெட்டக மாற்றுமுனையத் துறைமுகம் கொண்டுவந்தது...
2.    மேற்குத் தொடர்ச்சி மலையை உடைத்து கடலுக்குள் 9 கி.மீ. நீளம் கற்களைக் கொட்டி இயற்கையை, சுற்றுச் சூழலை, வருங்காலத் தலைமுறையை அழிக்க நினைத்தது...
3.    என் உயிரைக் கொடுத்தாவது இனையம் துறைமுகத்தைக் கொண்டு வந்தே தீருவேன். முடியாவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பி.ஜே.பி. தொண்டர்களோடு சேர்ந்து போராடுவேன் என்று சூளுரைத்தது...
4.    கடலோர கூட்டுக் குடிநீர் திட்டத்தை, கடலோர மற்றும் வழியோர கூட்டுக்குடிநீர்த் திட்டம் என்று மாற்றி மீனவ மக்களுக்குக் குடிநீர் வழங்கவிடாமல் தடுத்தது...
5.    நீராதாரம் உள்ள நிலங்களை மீனவ மக்கள் தங்கள் சொந்தப் பணத்தில் வாங்கி, அதில் ஆழ்துளைக் கிணறு அமைத்துக் குழாய் மூலம் கடற்கரைக்குக் கொண்டு செல்வதை நேரடியாக வந்து நின்று தடுத்து நிறுத்தியது...
6.    மீனவர்களை பட்டியல் இனத்தில் சேர்ப்பதாகத் தங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்து விட்டு அதை நிறைவேற்ற விடாமல் தடுத்தது...
7.    மீன்பிடித் துறைமுகம், தூண்டில் வளைவு தடுப்புச் சுவர்களுக்கு மத்திய அரசு நிதியை குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுக்க விடாமல் தடுத்தது...
8.    நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் நான்கில் ஒரு பங்கை கடற்கரைக்கு ஒதுக்குவேன் என்று கூறிவிட்டு, 17 கோடியில் 4ஙூ கோடி செலவிட வேண்டியவர் வெறும் 38 லட்சம் மட்டும் ஒதுக்கீடு செய்து கடற்கரையைத் திட்டமிட்டு பழி தீர்த்தது.
9.    மீனவர்கள் கடலையும் கடற்கரையையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஆக்கிரமிப் பாளர்கள்; இந்த ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஆர்.எஸ் எஸ் கொள்கையை திட்டமிட்டு செயல் படுத்திக் கொண்டிருப்பது...
10.    தமிழக அரசால் மீனவர்களுக்கு வழங்கப்படும் திட்டங்களை இடையில் புகுந்து தடுப்பது...
11.    ஒக்கிப்புயல் அடிக்கும்போது தொகுதி மக்களோடு உடனிருக்காமல் நாட்டைவிட்டு ஓடிவிட்டுத் திரும்பிவந்து பாதிக்கப்பட்ட மக்களையும் உயிரிழந்த மீனவர் குடும்பங் களையும் சந்தித்து, ஆறுதல்கூட கூற வராமல் இருந்ததோடு எந்த உதவியும் மத்திய அரசிடமிருந்து கிடைக்கவிடாமல் தடுத்தது.
12.    ஒக்கி புயலில் உயிரிழந்த மீனவர்களின் வாரிசுகளுக்கு தமிழக அரசு 20 லட்சம் நிவாரணம் அறிவித்ததை மீனவர்களுக்கு வழங்கக் கூடாது என்று தன் கட்சியினரைத் தூண்டி விட்டு, பந்த் நடத்தி, 40 பஸ்களை அடித்து உடைத்தது.
13.    கடலை - இயற்கையை - சுற்றுச் சூழலைக் காக்க போராடிய மீனவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, பொய் வழக்குகள் புனைந்து ஒடுக்க நினைத்தது....
இன்னும் ஏராளம்... ஏராளம். இவருக்கு வாய்ப்பளித்து குமரி மாவட்டத்தைப் பாலைவனமாக்கப் போகிறோமா? சிந்திப்பீர் என மீனவ மக்கள் தன்னெழுச்சியாக துண்டுப் பிரசுரம் தயாரித்து ஊர்கள்தோறும் வீதிகள் தோறும், வீடுகள் தோறும் பிரச்சாரமும் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
தங்கள் ஊர்களின் பங்கேற்பு அமைப்புகளான பங்குப்பேரவை, அன்பியங்கள், பக்தசபைகள், இளைஞர் இயக்கங்கள், மீனவர் அமைப்புகள், சாந்திதான், தோழமை பெண்கள் அமைப்புகள் என்று அனைத்தின் மூல
மாகவும் இந்தத் தேர்தல் களத்தைத் தயார்படுத்தி வருகின்றனர்.
இன்னொரு முறை பா.ஜ.க. இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பேற்றால் இந்தியா என்று ஒரு நாடு இருக்குமா? இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இருக்குமா? சிறுபான்மையினர், தலித்து கள் இருக்கமுடியுமா?
இன்னொருமுறை திரு. ராதா கிருஷ்ணன் வெற்றிபெற்றால் குமரி மாவட்டம் என்று ஒன்று இருக்குமா? நாம் நிம்மதியாக சொந்த மண்ணில் வாழமுடியுமா? என்று ஒவ்வொருவரும் கேள்வி எழுப்பிக் கொண்டு தாங்களே
வேட்பாளராகப் போட்டி போடுவது
போல் களமாடு கின்றனர். அவர்களின் வேகத்தைப் பார்க்கும்போது இந்த மக்கள் விரோத அரசின் ஐந்து ஆண்டு கொடுமைகளுக்கு சேர்த்துவைத்து பதிலடி கொடுக்கும் துடிப்புத் தெரிகிறது. ஜனநாயகம் வென்று, மதச்சார்பின்மை நிலைக்கும்.