தமிழக ஆயர் பேரவையின் SC/ST பணிக்குழுவின் முப்பெரும் நிகழ்வாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறப்பு விழாவை முன்னிட்டு புதுப் பொலிவுடன் மீண்டுமாய் உரிமை மாத இதழ் வெளியீடு & பணிக்குழுவின் வலை தளம் தொடக்கவிழா 10.04.2019 மாநில அலுவலகத்தில் பணிக்குழுத் தலைவர் மேதகு ஆயர் தாமஸ் பால் சாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வட மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு பாபு வரவேற்பு நல்க, மாநில செயலர் பணி. குழந்தை நாதன் உரிமை மாத இதழின் அறிமுக நோக்கவுரை நிகழ்த்தி பணிக்குழுவின் முன் முயற்சிகளை விளக்கினார். சிறப்பு அழைப்பாளராக முற்போக்கு சமூக எழுத்தாளர் சிந்தனையாளர் தோழர் வே. மதி மாறன் சமூக மாற்றத்திற்கான சிந்தனைகளை விதைத்து மிகச் சிறப்பு. உரிமை மாத இதழினை ஆயர் வெளியிட முதல் பிரதியை சிறப்பு அழைப்பாளர் பெற்றார். தொடர்ந்து திருச்சி மறைமாவட்ட SC/ST பணிக்குழுவின் செயலர் பணி. அந்துவான் பெற்றுக் கொண்டார்.
பின்பு பொதுக்குழு உறுப்பினர், பெண்கள் மன்ற பொறுப்பாளர், போராசிரியர் சுவக்கின் உள்ளிட்ட பிரதிநிதிகள் உரிமை இதழின் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர். உரிமையும் புரட்சியாளர் அம்பேத்கரும் என்னும் மையப் பொருளில் நடு மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. சின்னப்பன் எழுச்சி உரையாற்றினார். மாநிலப் பணிக்குழுவின் வலை தளம் அறிமுக நிகழ்வை தேசிய, மாநில முன்னாள் செயலரும் இந்நாள் பொதுநிலையினர் பணிக் குழுவின் மாநில செயலருமான பேரருள்திரு. பூபதி லூர்துசாமி தொடங்கிவைத்து வாழ்த்துரையாற்றினார்
உரிமை மாத இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர்கள் திரு. வே.விஜயகுமார் (சிவகங்கை), திரு. வ.எலியாசு ராஜா (மதுரை) ஆகியோரை மாநில செயலர் பாராட்டி ஊக்கப்படுத்த ஆயர் அவர்கள்
நூலாடைப் போர்த்தி சிறப்பு செய்து தலைமையுரை யாற்றினார். இறுதியில் செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் நீதி நாதன் அவர்கள் மாநிலச் செயலர் பணி குழந்தை நாதன் அவர்களின் தொடர் செயல்
முயற்சிகளையும் பணியாளர்களின் உழைப்பினை யும் அங்கீகரித்து வாழ்த்தினார்.
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு ஜார்ஜ் அவர்கள் நன்றி கூற, இந்நிகழ்வு இனிதாய் நிறைவு பெற்றது. இம் முப்பெரும் நிகழ்வினை கிழக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு வே.விஜயகுமார் அவர்கள் நெறிப்படுத்தி தொகுத்து வழங்கியது சிறப்பிற்குரியது.