Namvazhvu
பா.ஜ.க.வுக்கு செக்மேட்
Monday, 16 Oct 2023 11:51 am
Namvazhvu

Namvazhvu

சதுரங்க விளையாட்டின்  முக்கியமான  நகர்வு செக்மேட். அரசன் தன் விளையாட்டை இழப்பதற்கும், அடுத்த நகர்வுக்குச் செல்லாமல் தடுப்பதே செக்மேட். மக்கள் விரோத, கார்ப்பரேட் ஒன்றிய அரசின் நாள்கள் எண்ணப்படுகின்றன என்பதே நடப்பு அரசியல்.

ஒன்றிய அரசின் அனைத்து  2024 தேர்தல்  நகர்வுகளும் முடக்கப்பட்டு விட்டன. மக்கள் விழித்து விட்டார்கள்! நாட்டில் தினம் தினம் நடக்கும் ஜனநாயகப் படுகொலைகள்  குறித்து விவாதிக்கிறார்கள்.

பா... என்பது தோற்கடிக்க முடியாத கட்சிஎன்ற பிம்பம் கர்நாடகா  தேர்தலில் உடைந்து நொறுங்கியது. பா... இல்லாத தென்னிந்தியா என்பது புது உருப்பெற்று விட்டதுஎதிர்க்கட்சிகள் 14 மாநிலங்களில் கோலோச்சுவது பா...வுக்குப் பெருந்தலை வலி. வலது சாரி, மதவாதச் சிந்தனையை முன்னிறுத்தும் என்.டி.. கூட்டணி தேசமெங்கும் பலம் பொருந்தியதாக இல்லை.

என்.டி.. கூட்டணியில் இருந்த ஒரே பெரிய கட்சி  .தி.மு.. வெளியே வந்து விட்டது. மூழ்கும் கப்பலில் பயணிக்க யார்தான் விரும்புவர்?

.தி.மு.என்.டி.. கூட்டணியில் மாநிலங்களில் இரட்டைப் பட இலக்க மக்கள் பிரதிநிதித்துவம் கொண்ட ஒரே கட்சி. மாநிலங்களவையிலும் நான்கு சீட் கொண்ட கட்சி. சிவசேனா தவிர பிற என்.டி.. கூட்டணிக் கட்சிகள், ஒற்றைப் படை மக்கள் பிரதிநிதித்துவமும், மக்கள் பிரதிநிதிகளே இல்லாத லெட்டர்பேடு கட்சிகள். கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் கட்சிகளைப் போன்றவர்கள்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் பற்றிப் பேசிய .தி.மு..வின் நாகரிக அரசியல் தலைவர் கே.. செங்கோட்டையன் கூறினார்: “எங்கள்  தொடர் தோல்விகளுக்குக் காரணம் பா... தான். அவர்களுடன் கூட்டணி வைப்பதால்  தொகுதிக்கு 50 ஆயிரம் சிறுபான்மையோரின் வாக்குகள் எங்களுக்குக் கிடைப்பது இல்லை.” இந்த உண்மையை உணர்ந்த நவீன் பட்நாய்க், ஜெகன் மோகன் ரெட்டி போன்ற தலைவர்கள் நடுநிலை என்ற புது நாடகம் போடுகிறார்கள்.

நடந்து முடிந்த பல மாநில இடைத்தேர்தல் முடிவுகள், ஆளும் ஒன்றிய அரசின்மீது மக்களின் கோபத்தை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன.

மக்களவைத் தேர்தலுக்குள்  வரும் நான்கு மாநிலத் தேர்தல்களிலும் பா... தோற்று விடும் என்பதே கணிப்பு.

விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டங்கள், உள்நாட்டு உற்பத்திக் குறைவு, பொதுத்துறை நிறுவனங்களை விற்றல், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு என  அடிப்படை தேசக் கட்டமைப்பு சிதைந்து உள்ளது.

ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே தேர்தல்என்ற பா...வின் சித்தாந்த அரசியல் மணிப்பூரில் தோல்வி அடைந்து  விட்டது. ஓராண்டை நெருங்கிய மணிப்பூர் கலவரங்கள் அடக்கப்படவில்லை. அடிப்படையான இன மோதலைத் தடுக்கத் தவறிய மணிப்பூர் பா... முதல்வர் மாற்றப்படவில்லைஇனக்கலவரம் பாதித்த பகுதியாக 6 மாதங்களுக்கு (மார்ச் 2024 வரை) அறிவிக்கப்படுகிறது.

இக்கட்டுரையைத் தட்டச்சு செய்யும்போது கூட கிறிஸ்தவத் தேவாலயங்கள் தீக்கிரையாவது குறித்த செய்திகள் தொலைக்காட்சிகளில் வெளியாகின்றன.

ஒன்றிய அரசு  ‘அமைதியை  ஏற்படுத்துகிறோம்என்ற பெயரில் ஜம்மு-காஷ்மீருக்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய 370வது பிரிவின் சிறப்பு அந்தஸ்தை 05.09.2019 அன்று எந்த விவாதமும் இல்லாமல், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மசோதாவாக நிறைவேற்றியது. இன்று வரை பிரிக்கப்பட்ட காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு மக்களாட்சி இல்லை. தேர்தல் இல்லை. வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வாய்தாவில் உள்ளது.

ஒன்றிய அரசு மாநிலங்களின் நலன், மாநில சுயாட்சி உரிமை குறித்து எந்த அக்கறையும் கொள்வதில்லை. அரசியல் சட்டத்தின் மாநிலங்களுக்கான தன்னாட்சி  உரிமையைப் பறித்து, மாநில அரசுகளைப் பஞ்சாயத்து அமைப்புகளாக மாற்றுவதே பா...வின் அரசியல்  தந்திரம். இதை  அனைத்துத் தேசிய, மாநிலக் கட்சிகளும் உணர்ந்த  காரணமே பா... தனிமை நிலைக்குத் தள்ளப்படுகிறது. பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கைக் கொள்ளாமல், ஒற்றைத் தலைவர், அதிபர் ஆட்சி முறைக்குத் தாவுகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தி, சமஸ்கிருதம் முன்னெடுக்கப்பட்டு, மாநிலங்களின் தாய் மொழிகள் அழிக்கப்படுகின்றன. மொழிவாரி மாநிலங்களின் தனித்த இறையாண்மை கேள்விக் குறியாகிறது.

ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையில், தங்கள் கட்சி ஆளும் மாநிலம், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலம் எனப் பிரித்துப் பார்க்கிறது. நிதி ஒதுக்கீடுகளை வழங்குகிறது. இது ஒன்றியத்தின் ஒற்றுமையைச் சீர்குலைப்பது என்றாலும், வாக்கு அரசியலே  காவிகளுக்குப் பிரதானம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் ஆளுநர்களால் அவதிப்படுவது அராஜகமானது. தில்லி, மேற்கு வங்காளம், கேரளா, தமிழ்நாடு போன்ற அரசுகள் நாளை என்ன நடக்குமோ என்ற ஐயத்தில் ஆட்சி செய்வது, ஜனநாயக மாண்பிற்கே சவால். ஒன்றியத்தின் அதிகாரக் குவிப்பு, மக்களாட்சித் தத்துவத்திற்கு விரோதமானது.

பா..ஆட்சி தேசத்தின் தன்னாட்சி  அமைப்புகளையும்  கையில் எடுத்துக்கொண்டு விட்டது. தேசியப் புலனாய்வு அமைப்பு, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சட்ட ஆணையம், தேர்தல் ஆணையம் போன்ற  அமைப்புகளை முடக்கி சர்வாதிகாரம் செய்கிறது. ‘எதைத்  தின்றால் பித்தம் தீரும்?’ என்ற பா...வின் பசிக்கு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கிடைத்தது. 2029 தேர்தலுக்கான இந்த இட  ஒதுக்கீடு என்ற  உண்மை  பா...வைத் திரும்பவும்  விழி பிதுங்க வைக்கிறது.

பத்து ஆண்டுகளில்சமயச் சார்பற்ற’  என்ற அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையை  மறந்துவிட்டு, சனாதனத்தை  மூலதனமாக்கிமாட்டு அரசியலை முன்னிறுத்திய வெறுப்பு அரசியல் முடிந்து  விட்டது என உணர்கிறார்கள். திரும்பிய திசையெல்லாம் எதிர்ப்புகள் எனவும் அறிகிறார்கள். கூடவே வரத் தகுந்த கூட்டாளிகளும் இல்லை; தன் பலமும் இல்லை.

பா...வின் குருபீடம் ஆர்.எஸ்.எஸ். எல்லாக்  கணக்குகளையும் போட்டுத்தோற்று விடுவோம்என்ற விடையை ஒன்றிய அரசிற்கு அறிவுரையாக  வழங்கி இருக்கும். அவர்கள் அதற்கான மாற்று வழியாக இன, மொழி, மதக் கலவரங்களைத் தூண்டலாமா? அல்லது தேசபக்தி நாடகம் போடலாமா? அல்லது ஜனவரியில் திறக்கவுள்ள இராமர் கோவில் வழி ஆதாயம் அடைய முடியுமா? எனக் காய்களை நகர்த்தலாம். ஆனால், நிகழ்கால அரசியல் தட்பவெப்பம் ராஜாவுக்கானசெக்மேட்என்பதே உண்மை!