Namvazhvu
சமூகக் குரல்கள்
Wednesday, 29 Nov 2023 04:24 am
Namvazhvu

Namvazhvu

நாட்டின் அனைத்துத் துறைகளிலும் நேர்மை அடிப்படையிலான போட்டியிடும் திறன் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். வளர்ச்சி என்ற தேசிய இலக்கை எட்டுவதில் உள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும். அதேவேளையில், நிதி விவகாரங்களில் நேர்மையான செயல்பாடு உறுதிப்படுத்தப்பட வேண்டும். நல்லாட்சி நடைபெற அனைத்து அமைப்புகளும், தனி நபர்களும் பங்களிக்க வேண்டும்.”

- மாண்புமிகு திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர்

ஊடகங்கள் உண்மையை மட்டும் தெரிவிக்க வேண்டியது அவற்றின் தார்மிகக் கடமை. நம்பகத்தன்மை, உறுதியான தகவல்களை ஊடகங்கள் அளிக்க வேண்டும். தெரிந்தே பொய்யான தகவல்களைச் செய்திகளாகப் பரப்பி நிதி ஆதாரங்களுக்காகவும், அதிகார மையங்களுக்கு ஆதரவாகவும் செயல்படும் ஊடகங்கள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர். நம்பகத்தன்மையான செய்திகளை அளிப்பதுதான் ஊடகங்களுக்குப் பெரும் சவாலாக உள்ளன. பொய், போலியான தகவல்களை முன்கூட்டியே களைய வேண்டியது செய்தி ஆசிரியர்களின் பணியாகும். ஆகவே, ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.”

- மாண்புமிகு. ஜகதீப் தன்கர், குடியரசுத் துணைத் தலைவர்

உண்மையான ஊடகவியலே துடிப்பான மக்களாட்சியின் கண்காணிப்பாளர். ஆகவே, ஊடகத்தின் ஆற்றலையும், பொறுப்பையும் நாம் உணர்த்துவோம். அரசியல் அழுத்தங்களுக்குச் சிலர் அடிபணியும் இந்தக் காலத்தில், சாய்வற்ற, நேர்மையான ஊடகவியலை முன்னெடுப்போம். சுதந்திரமான ஊடகத்தின் அடிப்படை மாண்புகளை நாம் உயர்த்திப் பிடிப்போம்.”

- மாண்புமிகு. மு.. ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்