Namvazhvu
கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை அதிகரிப்பு
Thursday, 04 Jan 2024 05:51 am
Namvazhvu

Namvazhvu

ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் கிறிஸ்தவ ஐக்கிய மன்றம் எனும் குழுவானது கட்டாய மதமாற்றம் எனும் பெயரில் தாக்கப்படும் அப்பாவிக் கிறிஸ்தவர்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதன்படி இவ்வாண்டிற்கான பட்டியலையும் இவ்வமைப்பானது வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை ஏறக்குறைய 687 வன்முறை நிகழ்வுகள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இந்தியாவின் 23 மாநிலங்களில் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இம்மன்றத்தின் உறுப்பினரான A.C. மைக்கேல், ‘இந்தியாவில் ஒரு நாளைக்கு இரண்டு கிறிஸ்தவர்கள் வன்முறைத் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். உலக அளவில் இத்தகைய தாக்குதல்களில் இந்தியா பதினொன்றாம் இடத்தில் உள்ளது. கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் உயர்ந்து கொண்டே செல்கிறதே தவிர, குறையவில்லைஎன்று கூறினார். இந்த அமைப்பின் அறிக்கையின்படி 2020-இல் 279, 2021-இல் 505, 2022-இல் 599, 2023-இல் 687 வன்முறை நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. உச்சக்கட்ட வன்முறைக்குச் சான்றாக  மணிப்பூர் கலவரத்தை எடுத்துக்கொள்ளலாம்.