Namvazhvu
'தினமலர்' நாளிதழின் வக்கிரம் தந்தையே... இவர்கள் அறிந்தே செய்கிறார்கள்!
Monday, 24 Jun 2019 07:48 am

Namvazhvu

அண்டை நாடான இலங் கையில் உயிர்ப்புப் பெருவிழா நாளான 21.04.2019 ஞாயிறு கிறிஸ்தவத் தேவாலயங்களில் தொடர்
குண்டு வெடிப்பு நடந்ததும் முன்னூறுக்கும் மேற்பட்டோர் இறந்
திருப்பதும் ஐநூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதும், தேவால யங்கள் தரைமட்டமாகியிருப்பதும் அனைவரும் அறிந்ததே.
இச்செய்தியை தமிழகத்தி லிருந்து மதுரை பதிப்பாக வெளிவரும் தினமலர் நாளிதழ் ‘ஓ சேசப்பா’ என்ற தலைப்பில் முதல் பக்கச் செய்தியாக வெளியிட்டு தன்னுடைய நீண்ட நாளைய வக்கிரத்தை வெளிக் காட்டியுள்ளதையும் கிறிஸ்தவர் களாகிய நாம் தெரிந்திருக்க வேண்டும்.
பாசக அரசின் அடிமைகளாக வும், ஆர்.எஸ்.எஸ்-ன் அடிவருடி களாகவும், சிவசேனா தாக்கரேக் களின் கொள்கைகளைப் பரப்பும் கொள்ளை பரப்புச் செயலகமாகவும் செயல்படும் தினமலர் நிர்வாகம் - ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாக நமது கிறிஸ்தவ மதத்தை சீண்டிப்பார்க்கின்ற அளவிற்கு தலைப்பை வெளியிட்டுள்ளது.
‘ஓ சேசப்பா’ என்ற தலைப்பை ஆழ்ந்து சிந்தித்தால் ஓர் உண்மை புலப்படும். அதாவது கிறிஸ்தவத் தேவாலயங்களைத் தகர்த்து, வழி பாட்டுக்கு வரும் கிறிஸ்தவர்களின் உயிரைப் பறிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறிவிட்ட ஆனந்தத்தில் வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது.
உயிர்ப்புப் பெருவிழாவில் கிறிஸ்து இயேசு உயிர்க்கவில்லை. மாறாக கிறிஸ்தவர்கள் இறந்து விட்டார்கள் என்ற மாபெரும் மகிழ்ச்சியூட்டும் செய்தியை அகிலத்தில் பரப்புவதற்காகவே இம்
மாதிரியான தலைப்புச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இறந்த 300-க்கும் மேலான கிறிஸ்தவர்களும் புதைக்கப்படவில்லை; மாறாக விதைக்கப்பட்டிருக் கிறார்கள் என்பதை நினைக்க மறந்துவிட்டது.
நடுநிலை நாளேடாகத் திகழவேண்டிய தினமலர் ஊடக தர்மத்தை மீறி கிறிஸ்தவர்களின் உயிர் பலியில் உள்ளார்ந்த சுகம் தேடும் காவிக் கறைகளின் எண்ணத்தைத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது. தினமலரின் மதவெறியை மதம் கொண்டு வெளிக்காட்டியுள்ளது.
கிறிஸ்தவர்களால் என்ன செய்யமுடியும்? கிறிஸ்தவர்கள் அமைதியாக வாழ்பவர்கள், சாதி அடிப்படையில் பிரிந்திருக் கிறார்கள்.
இவர்கள் ஒன்றுசேர முடியாது. அதனால் இவர்களைச் சீண்டிப் பார்க்கலாம்; நம்மை தீண்டவா போகிறார்கள்
என்ற தவறான கண்ணோட் டத்தில் தலைப்புச் செய்தி வெளியிட்டிருக்கிறது தினமலர்.
‘தினமலர்’ என்ற ஒற்றைச் சொல்லை
மற்ற எழுத்துக்களால் பலவிதங்களில் எங்களால் இழிவுபடுத்த முடியும். அப்படிப்பட்ட கீழ்த்தர எண்ணத்தில் நாங்கள் வளரவுமில்லை. கிறிஸ்தவர் எங்களை வளர்க்கவும் இல்லை என்பதை தினமலர் நிர்வாகம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
நல்ல பாம்பு தீண்டியவுடன் மனிதன் இறந்து விடுகிறான். ஏன் தெரியுமா? அதன் விஷம் மனிதனின் உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தி உயிரைப் பறித்து விடுகிறது. அதுபோல கிறிஸ்தவர்கள் அமைதியாக வாழக் கூடியவர்கள் என்று நினைக்கிறீர்களா?... எங்கள் அமைதி பாம்பின் விஷத்தைவிட கொடூரமானது என்பதை தினமலர் நிர்வாகம் தன் எண்ணத்தில் கொள்ள வேண்டும்.
உன்னைப்போல் உன் அயலானையும் நேசி என்று போதித்த கிறிஸ்தவம்தான், “இவ்வுலகில் தீயை மூட்டவே வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டும் என விரும்புகிறேன்“ என்றும் பயிற்றுவித்துள்ளது. ‘தீ’ என்ற ஒற்றை எழுத்துக்கு ஓராயிரம் அர்த்தம் உள்ளது என்பதை மட்டும் தினமலர் நினைவில் கொள்ள வேண்டும்.
தினமலர் நிர்வாகமே கிறிஸ்தவர்களை சிறுபான்மையினர் என்று நினைத்திட வேண்டாம். அன்பில், அறிவில், ஆற்றலில், வீரத்தில், தீரத்தில், திறத்தில், சிந்தனையில் பெரும்பான்மையான வர்கள். கடல் அமைதியாகத்தான் இருப்பதாகத் தெரியும். பொங்கி எழுந்தால் சுனாமியாக மாறுவதும் புரியும்.
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
மதவெறி கொண்ட தினமலரை
நிதமும் மன்னிப்போம்.