Namvazhvu
திருத்தந்தையின் முழக்கம் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்
Tuesday, 02 Apr 2024 11:35 am
Namvazhvu

Namvazhvu

அருகிருப்பு, இரக்கம் மற்றும் மென்மை என்னும் கடவுளின் பண்புநலன் கொண்டவர்களாக நாம் வாழும்போது, சகோதர ஒன்றிப்பு மற்றும் நல்லிணக்கத்துடன் ஒன்றிணைந்து நாம் நடக்க முடியும்.”

- மார்ச் 26, நைஜீரியன் கத்தோலிக்கக் குழுமத்திற்கான செய்தி

கிறிஸ்து நம்மை எல்லையற்ற விதத்தில் அன்பு செய்கின்றார். அவரது அன்பு நமது தவறுகள் மற்றும் வீழ்ச்சிகளால் கட்டுப்படுத்தப்படாமல், நமக்காக தம் உயிரையே கொடுக்கும் அளவிற்கு உயர்ந்தது.”

- மார்ச் 25, அகில உலக இளையோருக்கான செய்தி

இயேசு தாழ்ச்சியுள்ள மற்றும் அமைதியுள்ள அரசராக எருசலேமிற்குள் நுழைந்தார். இரக்கமுள்ள அவரே நம் பாவங்களை மன்னிக்க வல்லவர். எனவே, அவருக்கு நம் இதயங்களைத் திறப்போம்.”

- மார்ச் 24, ஞாயிறு மூவேளை செபவுரை

ஊடகத்தின் பணி சிலருக்கானது அல்ல; அது அனைவரின் பொது நலனுக்கானது. கடைநிலையில் இருப்பவர்கள், ஏழைகள், குரலற்றவர்கள், ஒதுக்கப்பட்டவர்களுக்கான குரலாக அது இருக்கிறது.”

- மார்ச் 23, இத்தாலி ராய் ஊடகத்திற்கான நேர்காணல்

நம்மைக் குற்றவாளிகள் எனக் குறித்துக்காட்ட இயேசு தம் விரலை எப்போதும் நம்மை நோக்கி நீட்டுவதில்லை. மாறாக அவர் சிலுவையில் காட்டியது போல், நம்மை வாரி அணைத்துக்கொள்ள நம்மை நோக்கி தமது கரங்களை விரிக்கிறார்.”

- மார்ச் 22, திருத்தந்தையின் டுவிட்டர்’ குறுஞ்செய்தி