Namvazhvu
திருத்தந்தையின் முழக்கம் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்
Wednesday, 15 May 2024 07:26 am
Namvazhvu

Namvazhvu

நல்ல உறவுகளே நமது மனித மற்றும் கிறிஸ்தவ வளர்ச்சிக்கும், முதிர்ச்சிக்கும் உயர் பாதை.”

- மே 6, சுவிஸ் மெய்க்காப்பாளர்களுக்கான செய்தி

இயேசு நமக்காக எளிதில் உடைபடக்கூடியவராக இருக்கிறார். பாசாங்குத்தனம் இல்லாத நட்பை நமக்கு வெளிப்படுத்துவார்; ஏனென்றால், அவர் நம்மை அன்புகூர்கின்றார். அவர் நமது நன்மைத்தனங்களை விரும்புகிறார் என்பது மட்டுமன்றி, அவருடைய நன்மைத்தனங்களில் நாமும் பங்குகொள்ள விருப்பம் கொள்கின்றார்.”

- மே 5, ஞாயிறு மறையுரை

நிர்ப்பந்தம் இல்லாத உண்மையான நட்பு நமது பொதுவான மனித நேயத்தை அங்கீகரிக்கிறது. நமது நட்பு உண்மையானதாக இருக்கும்போது, அது துரோகத்தின் முகத்தில் கூட தோல்வி அடையாது.”

- மே 5, மூவேளைச் செபவுரை

சரிசெய்ய முடியாததைச் சரிசெய்வதற்கு முதலில் நாம் நம் பாவங்களை ஏற்றுகொள்பவர்களாகவும், செய்த பாவங்களுக்கு மன்னிப்பை இறைஞ்சுபவர்களாகவும் இருத்தல் அவசியம்.”

- மே 4, உரோம் கருத்தரங்கில் ஆற்றிய உரை

பத்திரிகைச் சுதந்திரம் என்பது தவறான கருத்தியல்களைத் தவிர்த்து, நீதிக்காகவும், அமைதிக்காகவும், படைப்பைப் பாதுகாப்பதற்காகவும் உழைக்க நமக்கு உதவுகிறது.”

- மே 3, திருத்தந்தையின்டுவிட்டர்குறுஞ்செய்தி