Namvazhvu
20 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உறைவிடம் தூத்துக்குடி லூசியா இல்லத்தின் உதவிக்கரம்
Monday, 24 Jun 2019 10:25 am

Namvazhvu

மே மாதம்
ஒன்றாம் தேதி தூத்துக் குடி சில்வர்புரம் லூசியா மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு இல்லம் கட்டிய 20 புதிய வீடுகளை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அவர்கள் புனிதம் செய்து திறந்து வைத்தார்.
40 ஆண்டுகளுக்கு மேலாக நல்ல சமாரியன் பணியாற்றிவரும் லூசியா இல்லம் இதுவரை 58 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச சுயவரம் நிகழ்ச்சி நடத்தி, திருமணங்கள் நிறைவேற்றியுள்ளது. திருமணத்
தம்பதியர்களுக்கு தாலி, சேலை, சட்டை சீர்வரிசை களும், பண்ட, பாத்திரங்கள், அரிசி, மளிகைப் பொருள்களும், தாய் வீட்டுச் சீதனமாய் அளித்துள்ளது.
இவர்களில் இன்னும் ஏழ்மை நிலையில் இருப்பவர் களுக்கு இலவச இருப்பிட வசதி ஏற்படுத்தும் விதமாக, 20 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கியிருக்கிறது. தாராள மனதுடையோர்களின் நன்கொடைகளையும், தன்னார்வத் தொண்டர்களின் உழைப்புகளையும் திரட்டி, இல்ல இயக்குநர் அருட்பணி கிராசிஸ் மைக்கேல் அவர்கள் ஆற்றிய அயராத முயற்சியினால், இந்த இலவச உறைவிடத்திட்டம் உருப்பெற்று, சாத்தியமாயிற்று.
ஆயர் ஸ்டீபன் அவர்கள் முன்னதாக நடைபெற்ற நன்றித் திருப்பலியின் நிறைவில், இந்த துயர் துடைப்புப் பணியில் பங்கேற்ற இல்ல இயக்குநர், நன்கொடையாளர்கள், பொறியாளர், பணியாளர்கள், அனைவரையும் பாராட்டி, சால்வை அணிவித்தார்கள். முன்தினம் வருகை தந்த முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் அவர்கள் கட்டிட கட்டுமானப் பணி நிறைவினைப் பார்வையிட்டு வாழ்த்துக் கூறினார்கள். இந்த நிகழ்ச்சியில் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இல்லக் குழந்தைகள், இல்லப் பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகளின் கும்பத்தினர் மற்றும் உபகாரிகள், உழைப் பாளர்கள், இறைமக்கள் பகுதி வாழ் மக்கள் பங்கேற்று, சிறப்பித்தார்கள்.