“ஒரு மனிதனின் மீறமுடியாத மாண்புக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்காததினால்தான், நம் சமூகத்தில் முதுமையைச் சுமையாக நோக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் ‘நாம்’ என்பது மறைந்து, ‘நான்’ என்பது ஆதிக்கம் பெற்று வருவதும் முதியோர் ஒதுக்கப்படுவதற்கு ஒரு காரணம்.”
- மே 15, முதியோர் தினத்திற்கான செய்தி
“பல்வேறு வகைகளில் ஏழ்மை நிலையை அனுபவிக்கும் மக்களுடன் நாம் இதயத்தாலும், உடலாலும் நெருங்கியிருக்க வேண்டும் என்பதை மறைச்சாட்சிகளின் கொண்டாட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன.”
- மே 14, அர்ஜென்டினா இறைமக்களுக்கான செய்தி
“செயற்கை நுண்ணறிவு பெருகி ஊடுருவி வரும் இவ்வுலகில், இதயத்தின் ஞானத்தை ஒருபோதும் இழக்கக்கூடாது.”
- மே 12, 58வது உலகச் சமூகத் தொடர்பு தினத்திற்கான செய்தி
“இயேசுவின் விண்ணேற்றம் நமக்கான வழியைத் திறக்கிறது. இயேசு இறைத்தந்தையிடம் திரும்புவது ஒரு பிரிவாக அல்ல; மாறாக, நமது இறுதி இலக்கின் எதிர்பார்ப்பாகவே தோன்றுகிறது.”
- மே 12, ஞாயிறு மறையுரை
“உங்களுடைய துறவு வாழ்விலும், அப்போஸ்தலிக்கப் பணியிலும் உங்களைக் கடவுளுக்கான கொடையாக மாற்றுங்கள், கடவுளின் கொடையாக இருங்கள்.”
- மே 11, இத்தாலி நாட்டு துறவியருக்கான செய்தி