Namvazhvu
எதிரிக்கு எதிரி நண்பன் இலங்கைத் துயரம் - மறுபார்வை
Monday, 24 Jun 2019 10:31 am

Namvazhvu

செய்தி 1: இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை அன்று தமிழர்கள் அதுவும் கிறிஸ்த
வர்களைக் குறிவைத்து 350க்
கும் மேற்பட்டவர்கள் படு கொலை செய்யப்படுகின்ற குண்டு வெடிப்பு நடைபெறு கிறது.
செய்தி 2: இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு குறித்து முன்பே இந்திய உளவுத்துறை, இலங்கையை எச்சரித்தது என்று செய்தித்
தாளில் செய்தி வெளியிடப் படுகிறது.
செய்தி 3: குண்டுவெடிப்பு நிகழ்ந்த அடுத்த நிமிடமே சுப்ரமணியசாமி அறிக்கை. இந்தியாவில் இதுபோன்ற குண்டுவெடிப்புகள் நிகழக் கூடாது என்றால், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவேண் டும் என்று கூறுகிறார்.
செய்தி 4: இன்னும் நடக்க விருக்கின்ற 4 கட்ட தேர்தல்
களில் நாட்டின் பிரதமர் இலங்கைக் குண்டு வெடிப்பைச் சுட்டிக்காட்டி, இதுபோன்று நடக்கக் கூடாது என்றால் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் எனப் பரப்புரை செய்கிறார்.
செய்தி 5: 23.04.2019 தினத்
தந்தி செய்தித்தாளில் தமிழகத்
திலும் இப்படி நடக்க வாய்ப்
புள்ளது என செய்தி வெளி யிடப்படுகிறது. இப்போது எளிய மக்களின் மனதில் எழும் கேள்விகள்.
கேள்வி 1: வெளிநாடாகிய இலங்கையில் நடக்கவிருக் கும் குண்டுவெடிப்பு குறித்து
முன்பே எச்சரித்த இந்திய உளவுத்துறை, நமது நாட்டில் பலத்த பாதுகாப்பும் கண்காணிப்பும் மிக்க காஷ் மீரில் 44 இராணுவ வீரர்களை பலிகொண்ட தீவிரவாதத் தாக்குதலைப் பற்றி ஏன் முன்பே எச்சரிக்கவில்லை.
கேள்வி 2: அப்படி எச்சரித் திருந்தால் அதை ஏற்று ஏன் முன்னெச்சரிக்கை நட
வடிக்கைகள் எடுக்கவில் லை? எடுக்கவில்லை என்ப
தால் அது யாருடைய தவறு?
அவர்கள் ஏன் இன்னும் சட்டத்தின் முன்பு நிறுத்தப் படவில்லை.
கேள்வி 3: இலங்கையில் தமிழர்கள் அதுவும் கிறித்தவர் கள் மீது இப்படித் திட்டமிட்டு தாக்குதலை நடத்துவதன் மூலம் இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் சொல்லப் படும் செய்தி என்ன?
கேள்வி 4: இலங்கையில் அதிபராக இருப்பவரின் செல்
வாக்கு சரிந்து வருவதால், அடுத்து வரும் தேர்தல்களில் சிங்கள இனவாதத்தை மீண்டும் முன்னெடுக்க இந்தத் தமிழர் மீதான தாக்குதல்கள் அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்படுகின்றனவா?
கேள்வி 5: இலங்கை குண்டு வெடிப்பு நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே சுப்ரமணிசாமியும், நாட்டின் பிரதமரும் அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைக்கூட சொல்லாமல் இந்தியா 4 கட்ட தேர்தலுக்கு முன்பு இதைப்போன்று நடக்காமல் இருக்க வேண்டுமானால், பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பரப்புரரை செய்வதன் காரணம் என்ன?
கேள்வி 6: குண்டுவெடிப்பு நடந்த சில நாள்கள் கழித்து தமிழகத்திலும் இப்படி குண்டுவெடிப்பு நடைபெற வாய்ப்புகள் உள்ளன என்ற செய்தியை கசியவிடுவதன் காரணம் என்ன?
தற்போதைய சூழல்...
பாஜக ஆட்சியின் அனைத்து வகையான மக்கள் விரோத செயல்களும் அம்பலப்பட்டு போனது தமிழர்களால் மட்டும்தான்.
தேர்தலில் எப்படியாவது வெற்றி பெறு
வதற்கு எதையும் செய்யத் தயங்காதவர்களின்
முயற்சிகள் உள்நாட்டில் தோல்வியடைந்த தால், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற
அடிப்படையில் இலங்கை ஆட்சியாளர் களிடம் இரகசியமாக கைகோர்த்துக் கொண்டு தமிழரையும் வஞ்சிக்க வேண்டும். மாற்று மதத்தவரையும் அச்சத்திற்குள்ளாக்க வேண்டும். இந்தியத் தேர்தலிலும் இதை பரப்புரை செய்ய வேண்டும் என்று ஒரே கல்லில் பல மாங்காய்களை அறுவடை செய்யும் நோக்கமா?
இந்தச் செய்திகளும் கேள்விகளும் எளிய மக்களின் மனங்களில் எழுகின்றன. விடை
தான் தெரியவில்லை. இதுகுறித்து ஒட்டு மொத்த இந்திய மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவது அறிவார்ந்த
சமூகத்தின் கடமையாகும்.