அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திற்கு அருகில் உள்ள நடுவலூர் கிராமத்தில் இந்து கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், யாரும் எதிர்பார்க்காத நெகிழ்ச்சியான நிகழ்வு நடந்தது. புனித சூசையப்பர் ஆலயத்தில் பணிபுரியும் அருள்பணியாளர்கள் இராபர்ட், ஜோசப் ஆகிய இருவரும் அதில் கலந்துகொண்டு கோவிலுக்குத் தங்கள் காணிக்கைகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்வு இணையத்தில் மிகவும் வேகமாகப் பரவியது. மதம் கடந்து மனிதநேயத்தோடு இருப்பது தமிழ்ப் பண்பாட்டின் எடுத்துக்காட்டாக இருந்தது. இதுபோல திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மல்வார்பட்டியில் விநாயகர், காளியம்மன், பகவதி அம்மன், பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் மாரம்பாடி புனித பெரிய அந்தோணியார் ஆலயத்திலிருந்து அருள்பணியாளர்கள், ஆலய நிர்வாகிகள் என்று பலர் கலந்து கொண்டார்கள். சமய ஒற்றுமைக்கு அருள்பணியாளர்கள் ஆர்வமாகவும், எடுத்துக்காட்டாகவும் இருப்பது போற்றுதலுக்குரியது.