“நீட் தேர்வில் நிகழ்ந்துள்ள குளறுபடிகள், 24 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை நிலைகுலையச் செய்துள்ளது. ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள் முதலிடம் பெற்றதும், அவர்களைப் போல மேலும் பல மாணவர்கள் மதிப்பெண் பெற்றதும் உண்மையில் நடக்க வாய்ப்பில்லை. ஆனால், வினாத்தாள் கசிவை ஒன்றிய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில் நான் நாடாளுமன்றத்தில் மாணவர்களின் குரலாக இருப்பேன். அவர்களின் எதிர்காலத்துடன் தொடர்புள்ள விவகாரங்களை நாடாளுமன்றத்தில் வலுவாக எழுப்புவேன்.”
- திரு. இராகுல் காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ் கட்சி
“மீண்டும் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவர்களின் மனநிலை, உடல்நிலை ஆகியவற்றில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கவனம் செலுத்த வேண்டும். வாசிப்பிலும், விளையாட்டிலும் மாணவர்களை ஊக்கமூட்டி மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.”
- திரு. மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்
“அரசியல் உங்களைத் தாக்கும் முன், உங்கள் தாக்கம் அரசியலில் இருக்கட்டுமென இளையோரைத் தொடர்ந்து வலியுறுத்துகிறவன் நான். சனநாயகம் வலுப்பெற அரசியலில் புதிய குரல்களும், இளைஞர்களின் பங்களிப்பும் அதிகரித்தே ஆக வேண்டும்.”
- திரு. கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மையம்