Namvazhvu
நானும் வருவேன்!
Thursday, 20 Jun 2024 11:31 am
Namvazhvu

Namvazhvu

அது ஒரு பொம்மைக் கடை. மக்கள் ஆரவாரமாகக் கடந்து செல்லும் பாங்காக் சந்தையில் அந்தப் பொம்மைக் கடைக்கு நிறைய வரவேற்பு.

வாடிக்கையாளர்களில் பலர் சுற்றுலாப் பயணிகள். சுற்றுலாப் பயணியாகச் சென்றாள் மீரா. தாய்லாந்து பொம்மை ஒன்றைத் தன் நாட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவளுடைய விருப்பம். மீராவைக் கண்ட பொம்மைகளுக்குள் ஒரே சலசலப்பு. ‘என்னைப் பார்! என்னைப் பார்!’ என்று பொம்மைகள் தன்னை அழைப்பதாக நினைத்தாள் மீரா.

பல பொம்மைகளைக் கடந்த மீராவின் கண்கள் ஒரு ஜோடி பொம்மைமேல் விழுந்தது.

நாம் புத்தகத்தைத் தேர்ந்தெடுப்பதில்லை. புத்தகம்தான் நம்மைத் தேர்ந்தெடுக்கிறதுஎன்று கல்லூரி வகுப்பறையில் தனக்குப் பேராசிரியர் சொன்ன சொற்கள் ஏதோ நினைவுக்கு வந்தன.

பொம்மைகளை நாம் தேர்ந்தெடுப்பதில்லை; பொம்மைகளே நம்மைத் தேர்ந்தெடுக்கின்றனஎன்று தனக்கு ஏற்றாற்போல மாற்றிச் சொல்லிக் கொண்டாள்.

பில் போடுவதற்கான வரிசையில் தான் எடுத்த ஜோடி பொம்மையுடன் போய் நின்றாள். பொம்மைகளுக்குத் தன் தாய்மொழியில் பெயர் வைப்பதைவிட, தான் இப்போது நிற்கிறதாய்மொழியில் பெயர் வைப்போம் என நினைத்தவள் தன் ஸ்மார்ட் போனை எடுத்து, சாட்ஜிபிடி திறந்து, ‘தாய் மொழியில் ஆண்-பெண் பொம்மைகளுக்கான பெயர்களைப் பரிந்துரை!’ எனப்ராம்ப்ட்கொடுத்தாள். வரிசையாக வந்து நின்றன 18 பெயர்கள்!

அனாங்’(‘அழகு’) என பெண் பொம்மையையும், ‘அர்தித்’(‘சூரியன்’) என ஆண் பொம்மையையும் அழைப்பதாக முடிவு செய்வதற்குள் பில் போடும் நேரம் வந்தது.

ஒரு ஜோடி பொம்மை வாங்கினால், இன்னொரு ஜோடி பொம்மைக்கு 50 பர்சென்ட் டிஸ்கவுன்ட்என்றாள் கடைக்கார இளவல். ஒரு நொடி தன் பர்ஸில் இருந்த தாய் பாத்களை எண்ணியவள், மறு நொடி லக்கேஜில் இடம் இல்லை என்பதைச்சட்டென உணர்ந்தவளாய், ‘இது போதும்!’ என்றாள் தன் தாய் மொழியில்!

கடையின் படிக்கட்டுகளில் இறங்கும்போது என்னவோ அவளுடைய கண்கள் மற்ற பொம்மைகளைத் திரும்பிப் பார்த்தன. ‘நானும் வருவேன்!’ என்று அவை தன்னிடம் சொல்வது போல உணர்ந்தவள், சற்றே நின்று அவற்றைப் பார்த்து, ‘நானும் வருவேன்என்று சொல்லி விட்டுத் தன் வழி நடந்தாள்.