Namvazhvu
தமிழ்நாட்டில் கிறிஸ்தவம் – 36
Thursday, 12 Sep 2024 05:17 am
Namvazhvu

Namvazhvu

சின்ன சவேரியார்மறைப்பணி!

சின்ன சவேரியார்எனப் போற்றப்பெறும் பிரெஞ்சு இயேசு சபைக் குரு தாமஸ் ஜேக்ஸ் தெ ரோசி  1736 -இல்  மறவ நாட்டில்  மறைப்பணியைத்  துவங்கினார்இராமநாதபுரம்சிவகங்கை, அறந்தாங்கி  மற்றும்  பட்டுக்கோட்டை  பகுதிகளில்  மறைப்பணியை  மேற்கொண்டு  ஓர் ஆண்டுக்குள்  740  பேர்களுக்குத்  திருமுழுக்களித்தார்மரியன்னையிடம்  பக்தி  கொண்டுபல இடங்களில்  புனிதமிக்க  கன்னி மரியாவுக்கு  ஆலயங்கள்  எழுப்பினார்பண்டாரத்தார் ஆளுகையான  பட்டுக் கோட்டையில்  புனித  சூசையப்பருக்கு  ஆலயம்  எழுப்பினார்புனித வியாகுல  அன்னைபுனித  சுவக்கின்புனித  சூசையப்பர்புனித  ஞானப் பிரகாசியார்புனித சவேரியார்அருளாளர்  அருளானந்தர்  பெயரால்  பல  புதுமைகளை  ஆற்றி  மக்களின் விசுவாசத்தைத்  தட்டி  எழுப்பினார்.  13  ஆண்டுகளுக்குள்  (1736-1748)  18,667  பேர்களுக்குத் திருமுழுக்களித்து ஆத்ம தாகத்துடன் பணியாற்றினார். எனவேதான் தந்தை ரோசி அவர்களைசின்ன  சவேரியார்’  என  அன்புடன்  அழைத்தனர்

1746  முதல்  தந்தை  ரோசி  இடைநிலைச் சாதி கிறிஸ்தவர்களையும்தந்தை  ஜோசப்  பெர்னார்டு  தலித்  கிறிஸ்தவர்களையும்  பராமரித்தனர். தந்தை  ரோசி  1748 -இல்  மரணியல்  என்ற  ஊரில்  புனித  வியாகுல  அன்னைக்கு  ஆலயம் எழுப்பினார். 38 ஆண்டுகள் மறவ நாட்டில் மறைப்பணியாற்றிய தந்தை ரோசி, 1774 அக்டோபர் 12 அன்று மறைந்தார். அவர் இம்மறைத்தளத்தைப் பற்றிப் பல மடல்கள் எழுதியுள்ளார். அந்த ஓலைச்சுவடிகள் சருகணியில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

சருகணியை  நடுவமாகக்  கொண்டு  தந்தை  ரோசி  1736  முதல்  1774 வரை பணியாற்றினார்.  18 -ஆம்  நூற்றாண்டின்  மத்தியில்  இப்பங்கில்  பல்வேறு சாதிப் பிரிவுகளைக்  கொண்ட  2600 கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர். சத்திய வேதபோதகர் என்ற பெயரில் முன்னாள் இயேசு சபைக் குரு ஜோசப் தெரேம் 1780-களில் இப்பகுதியில் பணியாற்றினார். சருகணியைப் போன்று சூராணம் புனித சந்தியாகப்பர் மறைத்தளமும் பழமையானது. 1730 -ஆம் ஆண்டு இயேசு சபை மடலின் மூலம் சூராணம் 170 கிறிஸ்தவக் கிராமங்களுக்குத் தலைமையிடமாகத் திகழ்ந்தது தெரிய வருகிறது. தந்தையர் ஜான் அலெக்சாண்டர், வியரா மற்றும் லியோனார்டு ஜோன்ஸ் இங்குப் பணியாற்றினர். பாம்பன், வேதாளை, வேம்பார் மற்றும் பெரியப்பட்டினம் பகுதியில் புனித சவேரியார், மறைச்சாட்சி கிரிமினாலினி  மற்றும்  தந்தை  பல்தசார்  தெ  கோஸ்தா  பணியாற்றியுள்ளனர்பாம்பன், வேர்க்கோட்டில் வாழும் 450 கிறிஸ்தவர்களுக்கு 1644 -இல் புனித சந்தியாகப்பருக்கு ஆலயம் எழுப்பப்பட்டதுஇராமநாதபுரம்  சேதுபதி  இவ்வாலயத்தில்  1715 -இல்  வழிபட்டார்கடல்  கலக்கும் முகத்துவாரத்தில்  அமைந்துள்ள  ஆற்றங்கரையில்  புனித  முடியப்பருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம்  இருந்ததை  1715  ஆண்டறிக்கை  குறிப்பிடுகிறது.  1644 -ஆம்  ஆண்டே  இங்குத் திருச்சிலுவைக்கு  எழுப்பப்பட்ட  ஆலயமும்,  80  கிறிஸ்தவர்களும்  இருந்தனர்சேதுபதி கட்டத்தேவன்  காலத்தில்  முத்துப்பேட்டையில்  புனித  பிரான்சிஸ்  சவேரியாருக்கு  ஆலயம் எழுப்பப்பட்டதுஇவ்வாறு  18 -ஆம்  நூற்றாண்டின்  இறுதியில்  கிறிஸ்தவம்  மறவநாடு  முழுவதும் பரவியது.

(தொடரும்)