Namvazhvu
திருத்தந்தையின் முழக்கம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்:
Tuesday, 17 Sep 2024 09:27 am
Namvazhvu

Namvazhvu

இறைவார்த்தை காயங்களுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில், வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் திறன் கொண்டது.”

- செப்டம்பர் 5, இந்தோனேசியாவின் திறந்தவெளி அரங்கில் வழங்கிய மறையுரை

அழகு என்பது பெரிய நிகழ்வுகளிலும் வெற்றியின் தருணங்களிலும் அதிகம் அனுபவிக்கப்படுவதில்லை. மாறாக, நாம் ஒவ்வொரு நாளும் ஒன்றித்து வளர முயற்சிக்கும் நம்பிக்கையிலும் அன்பிலும்தான் அனுபவிக்கப்படுகிறது.”

- செப்டம்பர் 7, பாப்புவா நியூ கினியின் திரு அவை பணியாளருக்கான அருளுரை

நாம் வாழும் இடத்தில் மறைப்பணியாளர்களாக வாழ வேண்டும். அதாவது இல்லத்தில், பள்ளியில், பணியிடத்தில், இயற்கையில், கிராமங்களில், நகரங்களில் என எல்லா இடங்களிலும் மறைப்பணியாளர்களாகத் திகழ்ந்திட வேண்டும்.”

- செப்டம்பர் 8, பாப்புவா நியூ கினி நாட்டியிலுள்ள வனிமோ மறைமாவட்டத்தின் நம்பிக்கையாளர்களுக்கு வழங்கிய அருளுரை

பெண்கள் திரு அவையில் மிக முக்கியமான நபர்கள்! ஏனென்றால், அவர்கள் மிகவும் தேவைப்படுபவர்களைக் கவனித்துக்கொள்கிறார்கள்.”

- செப்டம்பர் 9, அல்மா சகோதரிகளால் நடத்தப்படும் ஊனமுற்ற குழந்தைகளுக்கான செய்தி