Namvazhvu
AYUSH மருத்துவப் படிப்பிற்கு நீட் (NEET) தேர்வு உண்டா? இல்லையா?
Monday, 24 Jun 2019 12:10 pm

Namvazhvu

மத்திய அரசின் AYUSH அமைச்சகம் அனைத்து AYUSH மருத்துவ கல்லூரிகளுக்கும் கடந்த ஆண்டு முதல் நீட் (சூநுநுகூ) தேர்வின் அடிப்படையில் மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெறும் என சுற்றறிக்கை அனுப்பியது. ஆனால் தமிழ்நாட்டில் கடந்த 2018-2019 ஆம் ஆண்டு சேர்க்கையின்போது தமிழக அரசின் உத்தரவின்படி +2 மதிப்பெண் அடிப்படையிலேயே 33 அரசு மற்றும் தனியார் ஹலுருளுழ மருத்துவ கல்லூரிகளுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெற்றது.
இந்நிலையில் மத்திய அரசின் AYUSH அமைச்சகம் கடந்த 2018 டிசம்பர் மாதம் அனைத்து ஹலுருளுழ மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்ற சுற்றறிக்கை மற்றும் அரசிதழில் திருத்தங்கள் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெறும் என்று வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 2019 சுற்றறிக்கையின்படி இயற்கை மருத்துவம் மற்றும் யோகா (க்ஷசூலுளு) மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவையில்லை
என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்
ளது. ஆனால் மற்ற படிப்புகளான சித்தா (BSMS), ஹோமியோபதி (BHMS), ஆயுர்
வேதா (BAMS), யுனானி (BUMS), படிப்பு
களுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால் இந்த ஆண்டு, நீட் தேர்வு உண்டா? இல்லையா? என்பதைப் பற்றி தமிழக அரசு இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை.சென்ற ஆண்டு ஹலுருளுழ மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு இல்லையென்று தமிழக அரசு கால தாமதமாக அறிவிப்பு வெளியிட்டதனால் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கிட்டதட்ட 40 சதவீதம் மருத்துவ இடங்கள் காலியாகவே இருக்கின்றன.
ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வு மூலமே மாணவ மாணவியர் சேர்க்கை நடை பெறும் என்ற மத்திய அரசின் சுற்றறிக்கை இதுவரை தமிழகத்தில் விளம்பரப்படுத்தவில்லை. இதனால் நிறைய மாணவ மாணவியர்கள் AYUSH மருத்துவ படிப்புகளுக்கு சேரும் ஆர்வம் இருந்தும் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க இயலவில்லை.
எனவே, தமிழக அரசு உடனடியாக அறிவிப்பு வெளியிட்டால் மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழப்பம் தீர்ந்து தங்களுக்குத் தேவையான படிப்புகளில் சேரலாம். +2 தேர்வு மதிப்பெண்கள் மூலம் சேர்க்கை நடைபெற்றால் அனைத்து இடங்களும் நிரப்பப்பட வாய்ப்புள்ளது. இதனை நிறைவேற்ற தமிழக அரசு உடனடியாக ஆவண செய்ய வேண்டும் என்பது தமிழ்நாடு தனியார் கல்லூரி மருத்துவமனை நிர்வாகங்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரது விருப்பம். அரசு பரிசீலிக்குமா?