மின் உற்பத்திக்காக நிறுவப்படும் அணு உலைகளில் பயன்படுத்தப்படும் எரிபொருள்களும் மிகவும் ஆபத்தானவை. அந்த எரிபொருளைப் பயன்படுத்தி, இயக்கப் படும் அணு உலைகளை ஆண்டிற்கு ஒருமுறை நிறுத்தி வைத்து, எரிக்கப்பட்ட பிறகு சேரும் அணுக்கழிவுகளை அகற்றி, புதிய எரிபொருள்களை நிரப்புவார்கள். இது உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிற நடைமுறை.
1. தற்காலிக அணுக்கழிவு மையம் (ஹறுசு-ஹறயல குசடிஅ சுநயஉவடிச)
அந்த அணு உலைக் கழிவுகளை கழிவுகளை, அணு
உலைக்கு கீழே உள்ள புதை குழிபோல உருவாக்கப்பட்ட பாது காப்பு அறையில் சேமிப்பார்கள். அங்கு எட்டு ஆண்டுகளுக்கு மட்டுமே சேமிக்க முடியும். இதில் உருவாகும் புளூட்டோனியம் கழிவு மிகவும் வீரியமானது. இதனை ரீஆக்டரிலிருந்து சற்றுத் தொலைவில் (ஹறுசு-ஹறயல குசடிஅ சுநயஉவடிச) அமைக்கப்படுவதால் தற்காலிக அணுக் கழிவு மையம் என்றழைப்பர். இது நிரந்தரத் தீர்வு அல்ல. இது ஒரு தற்காலிகத் தீர்வே. இது தற்காலிகமான ஓர் அணுக்கழிவு மையமே. இங்கு புதைகுழியின் ஆழம் அதிகமாக இருக்காது. ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்துவிட்டால் விளைவுகள் கொடூரமானதாக இருக்கும். உலகில் பல நாடுகளில் அணுக்கழிவுகள் அந்தந்த அணுஉலை வளாகத்துக்குள் சேமிக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. உதாரணமாக செர்னோபில் அணு உலை விபத்தும் (25-26 ஏப்ரல் 1986) புகுஷிமா அணு உலை விபத்தும் இதனை இந்த உலகிற்கு உணர்த்தியுள்ளன.
இன்றும் அந்த நாட்டு மக்கள் சொல்லொண்ணா வேதனையை அனுபவித்து வருகிறார்கள். ஜப்பான் நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட புகுஷிமா அணுஉலை விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளைவிட அதன் கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகள்தான் அதிகம் என்பது சிந்திக்கத் தக்கது.
2. ஆழ்நிலைக் கருவூலம்
அணுக்கழிவைச் சேமிப்பதற்கான இரண்டா
வது முறை ஆழ்நிலைக் கருவூல முறையாகும். அதாவது அணுக்கழிவை பூமிக்கடியில் பல கி.மீ ஆழத்தில் (னுநநயீ ழுநடிடடிபiஉயட சுநயீடிளவைடிசல) எனும் முறையில் நிரந்தரமாகச் சேமித்து வைப்பதுதான் முறையானது. இது நீண்டமுறையிலான தற்காலிகத் தீர்வாக கருதப்படுகிறது. இப்படிச் சேமிக்கப்படும் அணுக்
கழிவுகளும் மிகவும் ஆபத் தானவை. அணுக் கழிவுகளைத் தக்க முறையில் ஒரு குறிப்பிட்ட செல்சியஸ் நிலை
யில் குளிர்வித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது
தான் அவை உறக்க நிலையில்
இருக்கும். இவற்றைக் குளிர் விப்பது நிறுத்தப்பட்டு விட்டால் அவை விழித்துக்
கொள்ளும். வினைபுரிய ஆரம்பித்து கதிரியக்கத்தை பல மடங்கு அதிகரிக்கும். அப்போது நேரும் துயரங்கள்
ஆயிரம் மடங்கு கொடூர மானதாக இருக்கும். இந்த
அணுக்கழிவுகளில் உள்ள சீசியம் மற்றும் ஸ்ட்ரான்டியம் ஆகியவற்றைச் செயலிழக்க 30 ஆண்டு களுக்கு மேல் ஆகும். ஆனால் புளுட்டோனியம் பாதி செயலிழக்கவே 24 000 ஆண்டுகள் தேவை. அதுவரை அணுக்கழிவு மையத்தை எந்த ஒரு பேரிடரும் தாக்காமல் இருக்க
வேண்டும். 24000 ஆண்டுகள் அவற்றைப் பாதுகாப்பது
என்பது மிகவும் ஆபத்தானது. உலகம் முழுவதும் அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக வைக்கும் தொழில் நுட்பத்தை எந்த நாடும் இதுவரை கண்டு பிடிக்கவில்லை. அது பெரிய சவாலாக உள்ளது.
கூடங்குளம் அணுக்கழிவு மையம் கடந்து வந்த பாதை
கூடங்குளம் அணுஉலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் 2013-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்து அணுஉலை செயல்பட அனுமதித்தது. அதில் முக்கியமான நிபந்தனையானது அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பதற்கான அணுக்கழிவு மையத்தை (ஹறயல குசடிஅ சுநயஉவடிச) 5 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் என்பதுதான். கால அவகாசம் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய அணுமின் சக்திக் கழகம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அந்த மனுவில் ’இந்த அணுக்கழிவு மையத்தைக் கையாளும் தொழில்நுட்பம் எங்களிடம் இல்லை. இந்தியாவில் முதல்முறையாக இதைச் செய்யப்போகிறோம். அதனால்
இது மிகவும் சவாலானதாக இருக்கும். மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் தேவைப்படும்’ என்று குறிப்பிடப் பட்டிருந்தது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் 2022-ம் ஆண்டு வரைக்கும் கால அவகாசம் அளித்திருந்தது. இந்நிலையில் இம்
மையத்தை அமைப்பதற்கான பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம்
ஜூலை 10-ம் தேதி ராதாபுரத்தில் உள்ள என்.வி.சி. அரசுப் பள்ளியில் நடைபெறும் எனத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.