Namvazhvu
இறை ஊழியர் லெவே அவர்களின் புனிதர் பட்டத் திருப்பணி
Wednesday, 17 Jul 2019 06:57 am

Namvazhvu

பிரான்ஸ் நாட்டில் 1884 ஆம் ஆண்டு பிறந்த இயேசு சபை இறை ஊழியர் லெவே, தமிழகத்தில் உள்ள  சிவகங்கை மறைமாவட்டத்தில் 52 ஆண்டுகள் உட்பட, இந்தியாவில் 65 ஆண்டு கள் மறைப்பணியாற்றியுள்ளார். ஏழைகளின் தோழர் என அழைக்கப் படும், இறை ஊழியர் லூயி மரி லெவே அவர்களின் வீரத்துவப் புண்ணிய வாழ்வு பற்றிய மறை மாவட்ட ஆய்வின் நிறைவு நிகழ்வு, ஜூன் 30, ஞாயிறன்று, சருகணியில் நடைபெற்றது.  அன்று  மாலை 5.30 மணிக்கு, சருகணி, திரு இருதயங் களின் ஆலயத்தில், சிவகங்கை மறைமாவட்ட ஆயர், மேதகு முனைவர் செ.சூசைமாணிக்கம்  இத்திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றினார்.
சிவகங்கை மறைமாவட்டத் தில் 52 ஆண்டுகள் மறைப்பணி யாற்றி, இறைமக்களின் உள்ளங் களில் நீங்கா இடம்பெற்று, சருகணியில் துயில் கொள்கிறார், இறை ஊழியர் லூயி மரி லெவே. அவரை அருளாளர் நிலைக்கு உயர்த்துவதற்குரிய திருப்பணி நடவடிக்கைகள், மறைமாவட்ட அளவில், 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கின. மறைமாவட்ட அளவிலான அத்திருப்பணியின் நிறைவு, ஜூன் 30 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது. திரளான எண்ணிக்கையில் இறைமக்களும் குருக்களும் அருள்பணியாளர்களும் இயேசு சபை அருள்பணியாளர்களும் கலந்து கொண்டனர்.  இறை ஊழியர் லூயி மரி லெவே அவர்கள், 1884 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதியன்று பிரான்ஸ் நாட்டிலுள்ள ரென் மறைமாவட்டத்தில் உள்ள லாலி என்ற ஊரில் பிறந்தவர். 1904 ஆம் ஆண்டில் இயேசு சபையில் சேர்ந்து, 1920 ஆம் ஆண்டு சனவரி மாதம் 13 ஆம் தேதியன்று, அருள்பணியாளராக அருள்பொழிவு பெற்றார். இவர், 1921 ஆம் ஆண்டு முதல் 1943 ஆம் ஆண்டு வரை ஆண்டாவூரணியிலும், 1943 ஆம் ஆண்டு முதல் 1956 ஆம் ஆண்டு வரை இராமநாதபுரத்திலும் பங்குபணியாற்றினார். பின்னர், 1956 ஆம் ஆண்டு முதல் 1973 ஆம் ஆண்டு வரை, அதாவது இறக்கும் வரை சருகணியில் ஆன்மீகக் குருவாகவும் இவர் பணியாற்றினார்.