தமிழகத்திலுள்ள அனைத்து மறைமாவட்டங் களின் முதன்மைக் குருக்கள் மறைமாவட்டங்களில் ஒன்று சேர்ந்து, தங்களது பணிகளைப் பகிர்ந்து கொள்ளுதல், அறிமுகம் செய்து கொள்ளுதல், பேராலயம், திருத்தலங்களில் திருப்பலி நிறைவேற்றுதல் போன்றவைகள் நடைபெறும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு மார்ச் 10, 11 தேதிகளில் சிவகங்கை வியான்னி அருட்பணி மையத்தில் சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு செ. சூசைமாணிக்கம் அவர்களின் நல்லாசியுடன் மறைமாவட்ட முதன்மைக் குரு அவர்களின் ஏற்பாட்டில் தமிழக முதன்மைக் குருக்களின் ஒன்றுகூடுகைக் கூட்டம் நடைபெற்றது.
10 ஆம் தேதி மாலை 6.15 மணியளவில் சிவகங்கை அலங்கார அன்னைப் பேராலயத்தில் சேலம் மறைமாவட்ட முதன்மைக் குரு (குருத்துவ பொன்விழா நாயகர்) தலைமையில் தமிழக முதன்மை குருக்களின் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. சிவகங்கை மறைமாவட்ட முதன்மைக்குரு பேரருள்திரு. ஜோசப் லூர்துராஜா முன்னுரை நிகழ்த்தினார். முதன்மை குருக்களின் ஒருங்கிணைப்பாளர் உதகை மறைமாவட்ட முதன்மைக் குரு பேரருள்திரு. கிறிஸ்தோபர் லாரன்ஸ் முதன்மைக் குருக்களின் சிறப்பியல்புகளை உள்ளடக்கி மறையுரை ஆற்றினார். திருப்பலிக்குப்பின் சிவகங்கை மறைவட்ட அதிபர் பேரருள்திரு. மரியடெல்லஸ் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி சிறப்புப் பரிசினை வழங்கினார். 11 ஆம் தேதி காலை 11 மணியளவில் இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் திருத்தலத்தில் முதன்மைக் குருக்கள் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர்.
ஒன்று கூடுகை கூட்டத்தில் முதன்மைக் குருக்களின் ஒருங்கிணைப்பாளர் உதகை மறைமாவட்ட முதன்மைக்குரு பேரருள்திரு. கிறிஸ்தோபர் லாரன்ஸ் சிவகங்கை மறைமாவட்ட முதன்மைக்குரு பேரருள் திரு. ஜோசப் லூர்துராஜா, சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட முதன்மைக் குரு பேரருள் திரு.மரிய அமல்ராஜ், புதுவை - கடலூர் உயர் மறைமாவட்ட முதன்மைக்குரு பேரருள்திரு. அருளானந்தம், சேலம் மறைமாவட்ட முதன்மைக்குரு பேரருள்திரு. ஜான் ஜோசப், தஞ்சாவூர் மறைமாவட்ட முதன்மைக்குரு பேரருள்திரு. ஞானபிரகாசம், செங்கல்பட்டு மறைமாவட்ட முதன்மைக்குரு பேரருள்திரு. பாக்கியரெஜிஸ், திண்டுக்கல் மறைமாவட்ட முதன்மைக் குரு பேரருள்திரு. பீட்டர்ராஜ், கோயம்புத்தூர் மறை மாவட்ட முதன்மைக்குரு பேரருள்திரு. ஜான் ஜோசப், கோட்டார் மறைமாவட்ட முதன்மை குரு பேரருள்திரு. கில்லாரியஸ், குழித்துறை மறைமாவட்ட முதன்மைக்குரு பேரருள்திரு. சேசு ரெத்தினம், தர்மபுரி மறைமாவட்ட முதன்மைக்குரு பேரருள்திரு. அம்புரோஸ், கும்பகோணம் மறைமாவட்ட முதன்மைக்குரு பேரருள்திரு. அமிர்தசாமி, வேலூர் மறைமாவட்ட முதன்மைக்குரு பேரருள்திரு. ஜான் ராபர்ட், தக்கலை (சிரியன்) மறைமாவட்ட முதன்மைக்குரு பேரருள்திரு.தாமஸ் பவுந்திஸ்பரம்பில், மார்த்தாண்டம் (சிரியன்) மறை மாவட்ட முதன்மைக்குரு பேரருள்திரு. வரஜியஸ் ஆகிய 17 மறைமாவட்டங்களின் முதன்மைக் குருக்கள் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை பேரருள்திரு. ஜோசப் லூர்து ராஜா மற்றும் வியான்னி அருட்பணியை இயக்குநர் பணி. அமலன் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்