கொரோனா தொற்றுக்கிருமி நோயாளிகள் மற்றும், அவர்களைப் பராமரிக்கும் அனைவரையும் ஒவ்வொரு நாளும் நினைத்து செபித்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கிருமியின் பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் இத்தாலியின் பின்னரோலோ ( Pinerolo) மறைமாவட்டத்தின் ஆயர் டெரியோ ஓலிவரோ (Derio Olivero) அவர்களை, தொலைப்பேசியில் அழைத்து நலம் விசாரித்துள்ளார்.
திருத்தந்தை, தன்னை தொலைப்பேசியில் அழைத்துப் பேசியது குறித்து, அம்மறைமாவட்ட முதன்மை குரு குஸ்தாவோ பெர்த்தியா ( Gustavo Bertea) அவர்களிடம் தெரிவித்த ஆயர் டெரியோ ஓலிவரோ அவர்கள், ‘இந்நிகழ்வு, நம் சிறிய மறைமாவட்டத்திற்கு நல்ல செய்தி!’ என்று கூறினார்.
தான் சிகிச்சை பெற்றுவரும் ஆக்னெல்லி "Agnelli" மருத்துவமனைப் பற்றி திருத்தந்தையிடம் எடுத்துரைத்ததாகவும் ஆயர் டெரியோ ஓலிவரோ தெரிவித்தார்,.
கடந்த மார்ச் மாதம் 19ம் தேதியிலிருந்து, கொரோனா தொற்றுக்கிருமி பாதிப்பால் துன்புற்றுவரும் ஆயர் டெரியோ ஓலிவரோ அவர்கள், தற்போது குணமடைந்து வருகிறார் என்றும், மருத்துவர்கள் மற்றும் செவிலியருடன், ஆண்டவரும், அன்னை மரியாவும் புதுமையை ஆற்றுகின்றனர் என்றும், பின்னரோலோ மறைமாவட்ட இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.