அன்பிற்குரிய பேராயர்களே/ ஆயர்களே/ குருக்களே/ இருபால் துறவியரே,
ஆண்டவர் இயேசுவின் அன்பும் அமைதியும்!
கொரோனா வைரஸின் பாதிப்புமிக்க இக்காலகட்டத்தில் மக்களுக்கு நீங்கள் செய்துவரும் அளப்பரிய பணிகளுக்காக மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.
கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து நாம் அனைவரும் விடுபடவும், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் விரைவில் நலம் பெறவும், நாம் தொடர்ந்து செபித்தும், பிறரன்பு பணிகளுக்கு ஈடுபட்டும் வருகிறோம். இதன் தொடர்ச்சியாக கடந்த 3-ஆம் தேதி ஞாயிற்று கிழமை நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள செய்தியில், உலகம் முழுவதும் உள்ள அனைத்து மத மக்களும் வருகிற 14 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ஆன்மிக வழியில் ஒன்றுபட்டு செபம், விரதம், மற்றும் பிறரன்பு காரியங்களை ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்கள்.
மே 14, செபம், உண்ணா நோன்பு, மற்றும், பிறரன்பின் நாள்- திருத்தந்தை அழைப்பு
திருத்தந்தை அவர்களின் வேண்டுகோளை ஏற்று, நாம் பிற மத சகோதர சகோதரிகளுடன் இணைந்து அன்றைய தினத்தை செபம், விரதம் மற்றும் பிறரன்பு காரியங்களை ஈடுபட முன்வருவோம். மாநில பல்சமய உரையாடல் பணிக்குழுவின் வழிகாட்டுதல் மற்றும் அந்தந்த மறைமாவட்ட பல்சமய உரையாடல் பணிக்குழுவின் முன்முயற்சிகளுடன் இதனைச் செயல்படுத்தும்படி அன்புடன் வேண்டுகிறேன். இருபால் துறவியரும் தங்களால் இயன்ற விதத்தில் பிற சமயத்தினருடன் இணைந்து திருத்தந்தையின் வேண்டுகோளை நிறைவேற்றும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இறை இயேசுவில் அன்புடன்,
+ மேதகு அந்தோனி பாப்புசாமி
தலைவர், தமிழக ஆயர் பேரவை.
07.05.2020