மணலி புதுநகர் அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின் 39 ஆம் ஆண்டுப் பெருவிழா மிகக் சிறப்பாக நடைபெற்றது. டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் திருக்கொடியேற்றி இத்திருவிழாவைத் தொடங்கி வைத்தார். ஆண்டின் முதல் வியாழக்கிழமையான ஜனவரி மாதம் 3 ஆம் தேதி குழந்தை இயேசு நவநாள் சிறப்புத் திருப்பலிகள் காலைமுதல் மாலைவரை நாள்முழுவதும் மிகச் சிறப்
பாக ஒப்புக்கொடுக்கப்பட்டன. மாலை5.30 மணி திருப்பலியை சென்னை-மயிலை உயர்மறைமாவட்டப் பேராயர்மேதகு ஜார்ஜ் அந்தோனிசாமி தலைமையேற்றுச் சிறப்பித்தார். அன்று 39ஆம் ஆண்டு பெருவிழா நினைவாக 60 அடி உயர கற்சிற்பத்தால் கட்டமைக்கப்
பட்ட புதிய கொடிமரம் மந்திரிக்கப்பட்டது. பிரான்ஸ் லூர்து அன்னை திருத்தலத்திலிருந்து சிறப்பாகத் தருவிக்கப்பட்ட புனித லூர்து அன்னை சுரூபத்துடன் கூடிய கெபி மந்திரிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. குழந்தை வரம் தேடி வருகிறவர்களுக்காக அற்புத குழந்தை இயேசு தொட்டில் நிர்மாணிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.
ஜனவரி மாதம் 5 ஆம் தேதி சென்னை - மயிலைமுன்னாள் பேராயர் மேதகு டாக்டர். ஹ.ஆ. சின்னப்பா அவர்களின் தலைமையில் தேர்த்திருவிழா நடைபெற்றது. 6 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை அற்புதக் குழந்தை இயேசுவின் ஆசீர்வாதத் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப் பட்டன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளி லிருந்தும் ஆந்திர மாநிலத்திலிருந்தும் அற்புத குழந்தை இயேசுவின் பக்தர்கள் கலந்து கொண்டு இவ்விழாவைச் சிறப்
பித்தனர். திருத்தல அதிபர் பேரருட்திரு.தாமஸ் இளங்கோ இவ்விழா விற்கான ஏற்பாட்டையும் கொடிமரம் மற்றும் கெபி கட்டுவதற்கும் இறைமக்களோடு இணைந்து மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். சென்னையின் பல்வேறு பகுதி களிலிருந்தும் இத்திருத்தலத்திற்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.