No icon

ஏழைகளுக்கென நம் கதவுகள் எப்போதும் திறந்திருக்கட்டும் 

தங்கள் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் துன்புறுத்தப்படுவோர் குறித்தும், கொரோனா தொற்று நோயால் துன்புறுவோர் குறித்தும், நான்கு ஆண்டுகளுக்கு  முன்னர் ஆகஸ்ட் 24 ஆம் தேதி மத்திய இத்தாலியில் இடம்பெற்ற நிலஅதிர்வினால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்தும், ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் நினைவுபடுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்காகவும் செபிக்கும்படி அழைப்பு விடுத்தார்.


தாங்கள் கொண்டிருக்கும் மத நம்பிக்கை களின் அடிப்படையில் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்களை  நினைவுகூரும் அனைத்துலக நாள், ஆகஸ்ட் 22 ஆம் தேதி சனிக்கிழமை சிறப்பிக்கப் பட்டதையொட்டி, தன் ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின், இவர்களுக்காகச் செபிக்கும்படி அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொரோனா கொள்ளைநோய்க்கு பலியானவர்கள், மற்றும், வளமான வாழ்வு நோக்கிய பயணத்தில் உயிரிழந்த குடியேற்றத்தாரர் குறித்தும் அக்கறையை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார்.


இன்றைய உலகில் எண்ணற்றோர் தங்கள் மத நம்பிக்கையின் காரணமாக, வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்கிறது என்ற கவலையை வெளி யிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர் கள், அவர்களுக்காக செபிப்பது மற்றும், அவர்களுடன் ஒருமைப்பாட்டை அறிவிப்பதன் வழியாக, நம் ஆதரவை வெளி யிடுவோம் என கேட்டுக்கொண்டார்.


வளமான வாழ்வை நோக்கிய பயணத்தின் போது, தங்கள் உயிரை இழந்துள்ள ஏழை குடியேற்ற தாரர் குறித்து நம் ஒவ்வொருவரிடமும் இறைவன் கணக்கு கேட்பார் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் எச்சரித்தார்.
பல்வேறு நாடுகளில் இருந்து வளமான
வாழ்வைத்தேடி செல்லும் வழியில் மெக்சிகோவின் சான் பெர்னாண்டோ என்ற இடத்தில் 72 குடியேற்ற தாரர்கள், 10 ஆண்டுகளுக்கு முன்னர், ஆகஸ்ட் 24 ஆம் தேதி கொலைசெய்யப்பட்டதையொட்டி, குடியேற்ற தாரர் குறித்த தன் எண்ணங்களை திருத்தந்தை பிரான்சிஸ் பகிர்ந்துகொண்டார்.


ஏழ்மையால் வாடும் மக்களுக்கென நம் சமூகங்களின் கதவுகள் எப்போதும் திறந்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் திருத்தந்தை பிரான்சிஸ் சுட்டிக்காட்டினார்.


நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஆகஸ்ட் 24 ஆம் தேதி, மத்திய இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கம் குறித்தும் தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதனால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தன் ஒருமைப்பாட்டைத் தெரிவிப்பதுடன், பாதிப்பு களைச் சீரமைக்கும் பணிகள், விரைவில் நிறை வுறும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.


முவேளை செப உரை
நிறரன்பே,நிறைவான வாழ்வுக்கு உரியபாதை - தருத்தந்தை பிரான்சிஸ்
இயேசுவில் நம்பிக்கை வைப்பதும், தோழமை யுணர்வில் பிறரன்புச் செயல்களை ஆற்றுவதும், நிறைவாழ்வுக்கு வழி என, இயேசு நமக்குக் கூறுகிறார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ்  ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஞாயிறு, மூவேளை செப உரையில் கூறினார்.


“நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று, சீமோன் பேதுரு, இயேசுவில் தான் வைத்திருந்த நம்பிக்கையை அறிக்கை யிட்டது பற்றிக் கூறும், இஞ் ஞாயிறு நற்செய்தி வாசகத்தை (மத்.16:13-20) மையப்படுத்தி, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு, மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவில் நம்பிக்கை வைப்பது, பிறரன்புக்கு முழுமையான அர்த்தம் கொடுக்கிறது என்று கூறினார்.


இந்த நற்செய்தி பகுதி யில், இயேசு தம் சீடர்களிடம், தமது தனித்துவம் பற்றிக் கேட்டது, சீடர்களுக்கு, தம்மோடு உள்ள உறவை மேலும் வளர்ப் பதற்கு இட்டுச்சென்றது என்றுரைத்த திருத்தந்தை, உண்மையில், இயேசு, தம்மைப் பின்சென்றவர் களோடு, குறிப்பாக, பன்னிரு திருத்தூதர்களோடு மேற் கொண்ட பயணம், அவர்களுக்கு நம்பிக்கையைக் கற்றுக்கொடுத்த பயணமாகும் என்று விளக்கினார்.


பேருண்மையின் முன் தயக்கம்
இயேசு, தம் சீடரிடம், தன்னை மக்கள் யாரென்று சொல் கிறார்கள்? என முதலில் கேட்டார், அதற்குப்பின், நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டபோது, அவர்கள் வாழ்வின் மையத்தையே அவர் தொட்டார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நேரத்தில் மூவேளை செப உரையைக் கேட்டுக் கொண்டிருந்த மக்களிடம், நீங்கள் ஏன் இயேசுவைப் பின்பற்றுகிறீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள் என்று கூறினார்.


உறுதியான நம்பிக்கைக்கு பரிசு: பாறை
“நீர் மெசியா, வாழும் கடவு ளின் மகன்” என்று, இயேசுவின்
கேள்விக்கு, ஆழ்ந்த நம்பிக்கை யுடன், முழுமையான மற்றும், சந்தேகமின்றி பேதுரு அளித்த பதில், இறைத்தந்தையின் ஒரு குறிப்பிட்ட அருள்கொடையின் கனியாகும் என்று திருத்தந்தை கூறினார்.


பேதுரு உடனடியாக அளித்த இந்தப் பதில், விண்ணகக் கொடை என்பதை ஏற்ற இறை மகன் இயேசு, அவரின் நம்பிக் கையை, அசைக்கமுடியாத பாறை என்று பாராட்டி, இந்தப் பாறையின்மேல் தம் திருஅவையைக் கட்டுவற்கு, விரும்பினார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். எனக்கு கிறிஸ்து யார்? “நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்?” என்று இயேசு நம் ஒவ்வொருவரையும் பார்த்து கேட்கிறார், கருத்தியலின்படி பதில் அளிக்கும் கேள்வி அல்ல இது, மாறாக,  நம்பிக்கையை, அதாவது, வாழ்வை ஈடுபடுத்து வது, ஏனெனில், நம்பிக்கையே வாழ்வு என்று கூறியத் திருத் தந்தை, இயேசுவின் இந்தக் கேள்விக்கு நாம் பதில் அளிப் பதற்கு, நமக்குள் இருக்கும் இறைத் தந்தையின் குரலுக்குச் செவிசாய்க்கவேண்டியது அவசியம் என்றும் கூறினார்.
நம்பிக்கையில் பிறரன்பு 
கிறிஸ்து, நம் வாழ்வின் மையமாக இருந்தால், திருஅவைக்கும் சமுதாயத்திற்கும் நமது அர்ப் பணமே இலக்காக இருந்தால், நமக்கு கிறிஸ்து யார் என்பதைப் புரிந்துகொள்ளலாம் என்றுரைத்த திருத்தந்தை, பிறரன்புக்கும், இயேசுவில் நம்பிக்கை வைப்பதற்கும் இடையேயுள்ள உறவு குறித்தசிந்தனை களையும் வழங்கினார்.


பல்வேறு விதமான வறுமை மற்றும், நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மக்களுக்கு, கத்தோலிக்க சமுதாயங்கள், மேய்ப்புப்பணி அக்கறை காட்ட வேண்டும் என்றும், பிறரன்பே, நிறைவான வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் உயரிய பாதையாகும், அதேநேரம், தோழமையுணர்வில் ஆற்றப்படும் பணிகள், ஆண்டவர்இயேசுவோடு உறவு கொள்வதிலிருந்து நம்மை திசைதிருப்பக் கூடாது என்றும், திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.


கிறிஸ்தவப் பிறரன்பு என்பது, வெறும் சமுதாயத் தொண்டாக மட்டும் இருக்கக் கூடாது, மாறாக, அது, மற்றவரை, இயேசுவின் கண்களாலேயே பார்ப்ப தாகும், மற்றும், ஏழைகளின் முகத்தில் இயேசுவைப் பார்ப்பதா கும் என்றுரைத்த திருத்தந்தை, நம் கிறிஸ்தவப் பயணத்திற்கு, அன்னை மரியாவின் உதவியை நாடுவோம் என்று சொல்லி, ஆகஸ்ட் 23, ஞாயிறு, மூவேளை செப உரையை நிறைவுசெய்தார்.

மதங்களின் பெயரால்இடம்பெறும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் திருத்தந்தை பிரான்சிஸ்
வெறுப்பு, வன்முறை, பயங்கரவாதம், கண்மூடித்தன மான தீவிரவாதம் போன்ற அனைத்துவிதமான கொடூரங்களுக்கும், மதங்கள் பயன் படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 22 ஆம் தேதி சனிக்கிழமையன்று, உலகினர் அனைவரையும் கேட்டுக்கொண்டார். 


மதம் அல்லது மத நம்பிக்கையின் அடிப்படையில் இடம்பெறும் வன்முறைக்குப் பலியானவர்களை நினைவுகூரும் உலக நாள், ஆகஸ்ட் 22, இச்சனிக்கிழமையன்று கடைப் பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரு டுவிட்டர் செய்திகள் வழியாக, இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.


“எவராலும் பாதுகாக்கப்படவேண்டிய அவசியம், கட வுளுக்கு கிடையாது. அதேநேரம், மக்களை பயங்கரவாதத்தால் அச்சுறுத்துவதற்கு, தம் பெயர் பயன்படுத்தப்படுவதையும், அவர் விரும்பவில்லை, எனவே, வெறுப்பு, வன்முறை, பயங்கர வாதம், கண்மூடித்தனமான தீவிரவாதம் போன்றவற்றைத் தூண்டிவிடுவதற்கு, மதங்கள் பயன்படுத்தப்படுவது நிறுத்தப் படுமாறு, அனைவருக்கும் அழைப்புவிடுக்கிறோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில், மனித உடன்பிறந்தநிலை (#Human Fraternity) என்ற ஹாஷ் டாக்குடன் பதிவாகி யிருந்தன.


திருத்தந்தை வெளி யிட்டுள்ள இரண்டாவது டுவிட்டர்செய்தியில், “நீ நன்றாக நடந்துகொள் கிறாய் என்பதற்காக, கடவுள் உன்னைஅன்புகூர்வதில்லை. அவர், எவ்வித எதிர்பார்ப்புமின்றி, எளிமையாக உன்னை அன்புகூர்கிறார், அவரது அன்பு எல்லையற்றது, அது உன்னைச் சார்ந்து இருக்கவில்லை” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.


மேலும், மதக் குழுமங்கள், பொதுவான பாதுகாப்பிற்கும், தேசிய தனித்துவத்திற்கும் அச்சுறுத்தலாகஉள்ளன என்று பலநேரங்களில் சித்தரிக்கப்படும்வேளை, கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், அக்குழுமங் களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன என்றும், இதனை நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறும்,ஐ.நா. மனித உரிமை  வல்லுனர்கள் அரசுகளை வலியுறுத்தி யுள்ளனர்.


திருத்தந்தையின் மறைக்கல்வியுரை இக்காலம் கற்றுத்தந்துள்ள பாடம்
கோடை விடுமுறைக்குப்பின் ஆகஸ்ட் 5 ஆம் தேதி, தன் நூலக அறையிலிருந்து வழங்கிய மறைக்கல்வி உரையில்,  ’உலகை குணமாக்கும்’ என்ற தலைப்பில் புதிய ஒரு தொடரை ஆரம்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று, கொள்ளைநோய் காலத்தில் மனித மாண்பு குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். இவ்வாரம், அதாவது, ஆகஸ்ட் 19 ஆம் தேதியன்று, இந்நோய் நமக்கு கற்றுத்தந்துள்ள பாடம் என்ன என்பது குறித்து விளக்கினார். முதலில், புனித பவுல், கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் மடலிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது. அதன் பின் அவர் உரை தொடர்ந்தது.


சகோதர சகோதரிகளே, மாசிதோனியத் திருச் சபைகளுக் குக் கடவுள் கொடுத்த அருளைப் பற்றி உங்களுக்குத் தெரியப் படுத்த விரும்புகிறோம். அவர் களுக்கு ஏற்பட்ட இன்னல்களால் கடுமையாகச் சோதிக்கப்பட்ட போதும் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சிநிறைந்தவர்களாய் இருந்தார்கள். அவர்கள் வறுமையில் மூழ்கி இருந்தாலும் வள்ளன்மையோடு வாரி வழங்கினார்கள்.  நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந் திருக்கிறீர்களே! அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார் (2 கொரி  8,1-2.9).


"அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இவ்வுலகை ஆட்டிப்படைத்துவரும் இன்றைய கொள்ளைநோய் குறித்து சிந்தித்துவரும், மறைக்கல்வி தொடரில் நாம், இக்காலம் நமக்கு கற்றுத்தந்துள்ள மிகக் கொடிய கொள்ளைநோய்கள் குறித்து சிந்தித்து வந்துள்ளோம். ஆம், சமூக அநீதி, சரிசம வாய்ப்புக்கள் இன்மை, ஏழைகள் ஒதுக்கப்பட்ட நிலை ஆகியவை, இன்று, மிகப்பெரும் கொள்ளைநோய்களாக உள்ளன என்பதை உணர்ந்து வருகிறோம். இயேசுவின் உண்மை சீடர்களாக வாழவிரும்பினால்,  ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் அவரின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி நாம் செல்ல வேண்டியுள்ளது. கிறிஸ்தவப் பிறரன்பு என்பது, அவர்களுக்கு பொருளுதவி செய்வதையும் தாண்டி, அவர்களுக்கு செவிமடுப்பதற்கும், அவர்களின் பொருளாதார, மற்றும், ஆன்மீக வளர்சசிக்கு தடையாக இருப்பவைகளை நீக்குவதற்கு உழைக்கவும் அழைப்புவிடுக்கிறது. சுமுக நிலைக்கு திரும்புவதற்குரிய நம் ஆவல், பழைய நிலைகளான, சமூக அநீதிகள், மற்றும், சீர்திருத்தங்களை காலதாமதம் செய்தல் ஆகியவைகளை நோக்கித் திரும்புவதாக இருத்தல் கூடாது. பழையவைகளை மாற்றியமைப்பதற்கு நமக்கு தற்போது நல்லதொரு வாய்ப்பு கிட்டியுள்ளது. ஆம், ஏழைகளின் மனித மாண்பை மதித்து அங்கீகரிப்பதாக, அவர்களை மையம் கொண்டதாக, நன்னெறியுடன் கூடிய பொருளாதாரத்தை உருவாக்க, இது ஒரு நல்ல வாய்ப்பு. எடுத்துக்காட்டாக, கோவிட்-19 தடுப்பு மருந்துகள், பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு, ஏழைகளுக்கும், அதிகம் தேவைப்படுபவர்களுக்கும் கிடைக் காமல் போனால், அது எவ்வளவு சோகம் நிறைந்ததாக இருக்கும்? காயம்பட்ட இவ்வுலகை குணப்படுத்தவும், மனித குலமனைத்தின் உண்மை நலனை ஊக்குவிக்கவும், விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் வேரூன்றியவர்களாக, பிறரன்பை செயல்படுத்தும் வழிகளை நாம் கண்டுகொள்ள, இயேசுவின் நற்செய்தி நமக்கு தூண்டுதலாக இருப்பதாக".


இவ்வாறு, தன் புதன் மறைக் கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  ஆகஸ்ட் 20, வியாழனன்று திருஅவையில் சிறப்பிக்கப்படும் புனித பெர்னார்ட் அவர்களின் திருவிழா பற்றி எடுத்துரைத்து, மறை வல்லுனர் புனித பெர்னார்டு அவர்கள், அன்னைமரி மீது கொண்டிருந்த பக்தி ஈடுபாடு நமக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருப்பதாக என வேண்டினார். இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க  ஆசீரையும் அளித்தார்.

Comment