No icon

குவாலியெர் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் ஜோசப் தைக்காட்டில்

இந்தியாவின் குவாலியெர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி ஜோசப் தைக்காட்டில் அவர்களை, மே 31, வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார். கேரளாவின் எர்ணாகுளத்தில் 1952 ஆம் ஆண்டு பிறந்த இவர், 1988 ஆம் ஆண்டு ஆக்ரா உயர்மறைமாவட்டத்திற்கென அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். இவர் ஆக்ரா புனித பேதுரு கல்லூரியில் உதவித் தலைவராகவும் (1988-1990), ஆக்ரா பேராலய பங்குத்தந்தையாகவும் (1990-1999), பின்னர், சூடினைய பங்குத் தந்தையாகவும் (1999-2002). பணியாற்றியுள்ளார். 2012 ஆம் ஆண்டு முதல், ஆக்ரா உயர்மறைமாவட்டத்தின் முதன்மைக் குருவாகப் பணியாற்றிய, குவாலியெர் மறைமாவட்ட புதிய ஆயர் ஜோசப் தைக்காட்டில் அவர்கள், 2018 ஆம் ஆண்டுவரை பரத்பூர் புனித பேதுரு ஆலயப் பங்குத் தந்தையாகப் பணியாற்றினார். 

Comment