No icon

முனைவர் இ. தேவசகாயம்

தோற்கிறது இந்தியா! ஜெயிக்கிறது பாரதம்!

பாரத தேசம் என்பது, இந்துக்களின் தேசம். ராஷ்டிரம் என்பது, இந்து ராஷ்டிரமே. இந்த அரசியல் உண்மையை அறியாமல் சிலர் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த நடிப்புகளின் கற்பனையில் சிக்குவதற்கு டாக்டர் ஹெக்டேவர் தயாராக இல்லை. இதுதான் உண்மை. உண்மையை தெளிவாகவே சொல்கிறோம் கோல்வால்கர்.

(குறிப்பு: - டாக்டர் ஹெக்டேவர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தோற்றுவித்தவர். கோல்வால்கர் ஹெக்டேவருக்குப்பின் ஆர்.எஸ்.எஸ் யின் தலைமைப் பொறுப்பேற்றவர். இந்துத்துவா இயக்கத்திற்கு கருத்தியல் வடிவம் தந்தவர்)

இந்துத்துவா அல்லது இந்து என்பவர் யார்? என்ற கேள்வியை எழுப்பிய சவார்க்கர்தனது பித்ரு பூமியை (தந்தையர் பூமியாக) புண்ணிய பூமியாக எவர் கருதுகிறாரோ அவரே இந்து என்ற பதிலைத் தருகிறார். மண்ணுக்குள்ளேயே தனது மதத் தோற்றத்தையும் எவர் காண்கின்றனரோ அவர் மட்டுமே இந்துக்கள். அதாவது, தங்களது புண்ணிய பூமியை மெக்காவாகக் கருதும் இசுலாமியரும், பெத்லகேமைப் புண்ணிய பூமியாகக் கருதும் கிறிஸ்தவர்களும் இந்து அல்லாதவர்கள் மட்டுமல்ல; இந்திய நாட்டை தங்கள் நாட்டைத் தங்கள் பித்ரு பூமியாகச் சொல்வதற்கும் அருகதையற்ற அந்நியர் (Gloens)

ஆர்.எஸ்.எஸ் தோற்றுநரும் இந்து மகா சபையின் சவார்க்கரும் நாளும் உயிர்ப்பிக்க பெற்றுவரும் இந்து மக்களின் பாரத தேசத்தின் எழுச்சியில் பூரித்துக் கொண்டுதானிருப்பர்.

இந்து தேசக் கனவுமெய்ப்பட்டு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதனால் இக்கனவுக் கான ஆசான்கள் பெருமகிழ்வு கொள்வதில் வியப்பில்லையே!

இந்துத்துவம் கட்டமைக்க விரும்பிய இந்தியா வேறு; சுதந்திரம் பெறும் இந்தியாவைக் கட்டமைக்க விரும்பிய தேசியத்தலைமைகளின் இலக்கு வேறு. இப்படி வெவ்வேறாக இருந்த நிலையில், இந்துத்துவத்தின் பாரத தேச கட்டமைக்கு எதிராக நின்ற அண்ணல் காந்தி கொலை செய்யப்படுகிறார். பண்டித நேரு அவமானப்படுத்தப்படுகிறார். பன்மைக் கலாச்சாரத்தைக் கொண்ட, இந்தியாவை அரசியல் ரீதியாக ஒருங்கிணைத்து, இந்தியக் கனவை மெய்ப்படுத்திய தலைவர்கள், இக்கனவு மெய்ப்பட ஓர் அரசியலமைப்புச் சட்டத்தினையும் உருவாக்கி, சட்டபூர்வ அந்தஸ்தையும் வழங்கினர்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கான இலக்கணங்கள் சரியாகவே வகுக்கப்பட்டன. ஜனநாயகம் பரிந்துரைக்கும் தேர்தல் முறைகள், நீதிமன்றங்கள், சட்டத்தின் ஆட்சி முறைகளெல்லாம்இந்தியாஎன்ற நாட்டை முழுமையடைய உதவித்தான் வந்தன. எல்லாமிருந்தும், திட்டமிட்டு கட்டப்பட்ட இவ்வமைப்புகள் எப்படி வீழ்ந்தன?

ஊடுருவிய பாசிசம்

இரத்தம் கக்கும் கொடிய மிருகமாக இன்று வளர்ந்து நிற்கும் பாசிசக் குழந்தை, ‘நாடாளுமன்ற ஜனநாயகம்என்ற கருப்பையில் தான் உருவாகியது என்ற வரலாற்றை எவரும் மறந்திடலாகாது.

ஜனநாயகத்தையும், ஜனநாயகத்தின் உள்ளடக்கமாம் பன்மைப் பண்பையும், சமத்துவம் பேணும் பொதுவுடமை இயக்கங்களையும் எதிர்க் கோட்பாடாக, எதிரிகளாகக் கொண்ட பாசிசம், இன்று இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஊடுருவி, சிதைத்து வருகிறது. இனப்பெருமை பேசி, ஆட்சியைப் பிடித்த நாசியின் ஹிட்லர், தனதாட்சியின் மிகமுக்கியக் கோட்பாடாக தேசிய சோசியலிசத்தை முன்வைத்ததை எவரும் மறுக்க இயலாது.

நாசி வளர்த்தெடுக்கப்பட்ட முறைமையும், இந்திய இந்துத்துவப் பாசிச முறைமையும் ஒன்றுதான். நாசிசத்தின் ஒவ்வொரு போக்கும் பகையையும், வெறுப்பையும், கொலையையும் சமூகத்தின் பொதுப்பண்பாக வளர்த்தெடுத்து, அதையே இந்திய பாசிஸ்டுகள் ஒவ்வொரு நொடியும் செய்து வருகின்றன.

ஜனநாயகம் இப்போக்கை மௌனமாக அல்லது மறைமுகமாக வளர்த்தெடுக்க உதவி வருகின்றது. போற்றப்பெறும் வகையிலான ஜனநாயகம் மோடியின் பரிவாரங்களாலும், இவ்வாறு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த அரசியல் பண்பை மிகக் கவனமாகக் கவனித்து வர வேண்டுவது மிக அவசியமாகும்.

நாசியின் பாசிஸ்டுகள் ஒரு சில எதிர்ப்பலைகளால் தன் முடிவை எட்டவில்லை. எதிரியாகக் கட்டமைக்கப்பட்ட யூதர்களை கேவலமாகக் கொன்றொழித்த ஒரு கோர செயல் அந்த தேசத்தின் பெயரில் நிகழ்த்தப்பட்டது. அன்று மக்களிடம் தேங்கியிருந்த சிறிதளவு சமய நம்பிக்கையும், அடையாளமும் இக்கோரக் கொலையை கேள்வி கேட்கவில்லை.

ஒரு பதினொரு வயது சிறுவன் கத்தோலிக்கக் குடும்பத்தில் வளர்க்கப்பட்ட சிறுவன், முதன் முறையாக நற்கருணை விருந்தில் பங்குபெறாதவராகும் நிலையில், அக்குழந்தையிடம் அவன் வாழ்வின் நோக்கம் பற்றிய கேள்வி ஒன்றை எழுப்பிய போது, அவன் சொல்கிறான்என் வாழ்நாளில் நான் ஒரு யூதனையாவது கொல்ல வேண்டும்இந்த இளநெஞ்சில் விஷவிதை, பகை என்னும் நச்சுவிதையை விதைத்தது யார்? இக்குழந்தையின் நற்கருணையைத் தாண்டி விதைக்கப்பட்ட விஷம் எது?

இன்று, இச்சூழ்நிலையைத்தான் நம் இந்தியாவில் பார்க்கிறோம்.

உத்தரப் பிரதேசத்தின் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்த ஒருவர் என்ன சொல்கிறார்?

உத்தரப் பிரதேச ஆட்சி ஒடுக்கப்பட்டோருக்கான ஆட்சியாக இல்லை. இந்திய நிதி அத்யோகி உபி அரசு இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தில் தாழ்நிலையில் இருப்பதாக சொல்கிறது. இந்தியா முழுமைக்குமான வேலைவாய்ப்புத் திட்டத்தில் கடைசி இடம் பிடிக்கும் மாநிலம் உத்தரப் பிரதேசம்.

இம்மாநிலம் முழுவதும் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் 34 இடங்களில் இசுலாமியருக்கு எதிரான பகை பேச்சுகள் இடம் பெற்றன. பசுக்களை கடத்தியோர் என்றும், பசுக்களைக் கொன்றோர் என்றும் குற்றம் சாட்டப்பட்டோரின் எண்ணிக்கை அதிகம்.

இந்தியக் குடியுரிமை பாதுகாப்புச் சட்டங்கயை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்கள் ஏராளம்! வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிய வேளாண் குடிகள் ஏராளம்! அவ்வேளாண் குடிகளின் போராட்டத்தின்போது, லக்கிம்பூரில் அவர்கள் மீது வாகனத்தைக் கொண்டு மோதி, கொலை செய்த காட்சியும் இம்மாநிலத்தில்தான் நடந்தது. ஹத்ராஸ் பாலியல் கொலை வழக்கு நடந்த இடமும் இங்குதான்.

இத்தனை இருந்தும் ஏன் எப்படி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு வெற்றி பெறுகிறது? யோகியின் ஆட்சி அளித்த இலவசங்களாலா? நலஉதவி திட்டங்களாலா? எப்படி வெற்றி பெற்றது? ஏன் வெற்றி பெற்றது? இது என்ன வகையான அரசியல்?

இக்கேள்விகளுக்கு நாம் பதில் தேடியாக வேண்டிய கால கட்டம் இது. ஒரு தேர்தலில் வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கும் விஷயங்கள் எதுவுமே இங்கு முக்கியமில்லாத நிலையில் ஏன் இது நடந்தது? எப்படி யோகியால் .பி. யில் மீண்டும் ஆட்சிக்கு வர முடிந்தது?

ஒரு ஜனநாயக சமூகம் அல்லது அரசு எதையெல்லாம் கட்டிக் காக்க தவறுகின்ற நிலையிலும், தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவது எப்படி?

அவசர நிலை பிரகடனத்தின் போது, காங்கிரசின் இந்திரா காந்தியையும், அவர் மகன் சஞ்சய் காந்தியையும் தேர்தலில் தோல்விக் காணச் செய்யும் அளவுக்கு அரசியல் விழிப்புணர்வு பெற்ற .பி வாக்காளர்கள், பாசிஸ்டுகளின் மறுவடிவாம் யோகியையும், அவரின் தலைவர் மோடியையும் ஏற்றுக்கொண்டது எப்படி?

இந்திரா காந்தியின் எதேச்சதிகாரப்போக்கு தண்டனைக்குள்ளானது சரியா? யோகி எனும் மதத் துறவி இந்நாட்டில் ஏற்படுத்தப்போகும் அவலங்களுக்கு என்ன பதிலைத் தரப்போகிறோம்?

தேர்தல் முடிவுகள் தன் கட்சிக்கு சாதகமாக வெளிவந்த நிலையில் 80-20 என்று, யோகி காட்டிய கணக்குக்கு என்ன பொருள்?

இந்திய நாடு இந்துக்களின் நாடென்றும், இந்துக்களை உள்ளடக்கியது தேசம் ((Hindus constitute the Nation) என்றும், யோகியின் முன்னோர்கள் தந்த முழக்கத்திற்கும், யோகியின் 80-20 கணக்கிற்கும், என்ன வேறுபாடு?

இந்துக்களாகிய நாங்கள் 80 சதவீதமாக அணி திரண்டிருக்கிறோம். நீங்கள் வெறும் 20 சதவீதம். 80 சதவீத இந்துக்கள் வெறும் பெரும்பான்மையல்ல; இது அப்பட்டமான பாசிசம். பாசிசத்தின் பெரும்பான்மைவாதம்.

பெரும்பான்மைவாதம் எப்போதும் ஒதுக்கும், ஒடுக்கும் அல்லது ஒழிக்கும்.

2002 இல் குஜராத் கலவரத்தையொட்டி, இந்தியாவில் இன்னும் முதிர்ச்சியுறா பாசிசம் இந்தியாவில் புகுந்த ஆண்டை 2002 - ஆக அறிவித்த அருந்ததிராய், யோகியின் 80-20 எப்படி வர்ணிப்பார்?

பாராளுமன்ற ஜனநாயகத்துள் கள்ளத்தனமாகப் புகுந்து, ஜனநாயகச் சடங்குகளை குறைவில்லாமல் நிகழ்த்திகாட்டி, தான் நம்பாத அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது உறுதிமொழி ஏற்று, அதற்கு மேல் ஒருபடி மேலாக, அரசியல் அமைப்புச் சட்ட நாள் என்று ஒரு நாளை பொய்யாக அறிவித்து, தான் நம்பாத நாளை கொண்டாடும் கயமையை என்னவென்போம்?!

! நாம் கனவு காணும் இந்தியா, நம் கண்முன்னே நொறுங்கிக் கொண்டிருக்கிறது.

!சமத்துவத்தை தூக்கிப்பிடித்த அரசியல் சாசனம் தூக்கிலிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

! இல்லாத பாரதம் கட்டமைக்கப்படுகிறது.

பாரதம் ஒரு நாள் நனவாகும்என்ற நம்பிக்கையை எப்படி தகர்க்கப்போகிறோம்?. நாளும் கருத்தியல் ரீதியாகவும், நிறுவன ரீதியாகவும் வலுபெற்று வரும் இந்துத்துவம் அதனடிப்படையில் அமையவிருக்கும் அரசுமே இனி நிதர்சனம்.

திராவிடம் பேசும்தமிழகம்நம்பிக்கை தரும் ஒன்றுதான். ‘இந்துத்துவம்எனும் சித்தாந்தத்திற்கு, ‘தமிழகம்பெரியார் காலத்திலிருந்து மாற்றுச் சித்தாந்தத்தை சுமந்து வந்ததன் காரணமாக, இங்கு இன்னும் முழுமையாக இந்துப் பாசிசம் ஊடுருவவில்லை. எனினும், ‘திராவிடம்எனும் பெயரை பெயருக்கேனும் தாங்கிநிற்கும் தமிழகத்தின் அடிமைக்கட்சிகள் பாரதிய ஜனதாவின் வெற்றிக்கு வாழ்த்துப்பா பாடத்தான் செய்கின்றன. இந்தத் துதிக்கு என்ன காரணம் சொல்லப்போகிறோம்?

தமிழகத்தின்திராவிடம்இந்துத்துவ வேகத்தின் தடைக்கல்லாக திகழ்கிறது என்பதில் ஐயமில்லை. கேரளத்தின் இடதுகளும், கணிசமான எண்ணிக்கையுடைய மதச் சிறுபான்மையினரும் இந்துத்துவ வளர்ச்சிப் பாதையின் தடைகல்லாக நிற்கலாம்.

ஆனால், நாட்டின் பல பகுதிகளில் வீசும் இந்துத்துவ அலையை எதிர்கொள்ளும் அளவிற்கான வலுவான கருத்தியல் கொண்ட இயக்கங்கள் இல்லை. வலுவான சமூக மாற்றத்தை எதிர்கொள்வதற்கான சமய சார்பற்ற இயக்கங்கள் இல்லாமையே.

இந்துத்துவம் வளரவும், பாரதம் நிலைக்கவும் வழிகாணக் கிடைக்கிறது.

80 அணி சேர்த்தாகிவிட்ட நிலையில் 20 என்ன செய்யப்போகிறது? தொடர்ந்து பார்ப்போம். (தொடரும்)

Comment