No icon

SPECIAL NEWS

குழித்துறை மறைமாவட்ட மேதகு ஜெரோம் தாஸ் வறுவேல்..மீதான தாக்குதல். நடந்தது என்ன? - நேரடி ரிப்போர்ட்

குழித்துறை மறைமாவட்ட மேதகு ஜெரோம் தாஸ் வறுவேல்..மீதான தாக்குதல்.

நல்ல ஆயனுக்கு செவிமடுக்கா மந்தைகளின் இழிசெயல் கண்டனத்திற்குரியதே! 
குழித்துறை மறைமாவட்டம் உருவாக்கப் பட்டு சில வருடங்களேயானாலும் அதன் வளர்ச்சியும் எழுச்சியும், மக்களின் அக்கறையும் ஈடுபாடும், பொதுநிலையினரின் பங்கேற்பும் பங்களிப்பும், குருக்களின் அயரா உழைப்பும் அர்ப்பணமும், ஆன்மிக, சமூக ஈடுபாடும்… காலத்தின் அறிகுறிகளை உள்வாங்கிச் செயல் படும் திருஅவைகளுள் ஒன்று குழித்துறை மறைமாவட்டம் என்கிற பெருமைக்குரியது. இங்கு நடைபெறும் மாற்றங்களுக்கும் முன்னேற்றங்களுக்கும், திட்டங்களும் தீர்மானங்களும் சனநாயகம்உயிரோடு இருக்கின்றது என்பதனை பறைசாற்றும் கூட்டு முயற்சிகளே! பிரச்சினைகள் இல்லா வாழ்வில்லை. ஆகவே சவால்கள் வருகையில் பொதுநிலையினரும் துறவுநிலையினரும் இணைந்து கலந்துரையாடி முடிவுகளை எட்டுவதே இங்கு பெரும்பாலும் நடைமுறை விதியாக உள்ளது. இத்தகு அணுகுமுறைகளைக் கண்டு ஏனைய மறைமாவட்டங்கள் வியப்பதுகூட உண்டு.
நல்லாயன் வழியில்…
காலத்தின் அறிகுறிகளுக்கு ஏற்ப தன்னைப் புதுப்பிக்கும் குழித்துறை மறைமாவட்டம் ஓர் இறுக்கமான படிநிலை அமைப்பு அல்ல; இது ஓர் இறைமக்கள் சமூகம். இச்சமூகத்தில் உள்ள அனைவரும் கிறிஸ்துவின் குருத்துவத்தில் பங்கேற்று அவரது முப்பணிகளான - போதிக்கும் பணி, புனிதப்படுத்தும் பணி, வழிநடத்தும் பணி ஆகியவற்றைக் கூட்டுப்பொறுப்புடன் செயல்படுத்தி வருகின்றனர். மறைமாவட்டத்தை வழிநடத்தும் மேதகு ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் அவர்களும், “மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும், பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” (மாற் 10:45) என்கிற இயேசுவின் குருத்துவத்தில் தன்னை இணைத்துப் பணியாற்றி வருபவர்.எல்லாரோடும் அவர் எளிமையாகப் பழகும் விதமும், எவ்வேளையிலும் மக்கள் அணுகக்கூடிய நபராகச் செயல்படும் பாங்கும், அவர்மீது இறை மக்கள் கொண்டிருக்கும் பாசத்தின் விழுதுகளே!
தனது உடல்நலனில் சற்று தொய்வு இருந்தாலும் மறைமாவட்ட இறைமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அவர் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள், கியூரியாவைக் கலந்தா லோசித்து அவர் திட்டமிடும் காரியங்கள் அனைத்தும் பணிவாழ்வில் எதிர்வரும் சவால்களை வென்றெழுவதற்கான காரணிகள் என்றால் மிகையல்ல!


இத்தகு வளர்ச்சிப் பணிக்குத் தடங்கலாய்,குருத்துவத்தின் மகத்துவத்தை இழிவுபடுத்தும் விதமாய் கடந்த மார்ச் 10 ஆம் நாள் ஞாயிறு மறைமாவட்ட ஆயர் மீதும், ஆயர் இல்ல பாது காவலர் மீதான தாக்குதல்கள் வரலாற்றில் வடுவை ஏற்படுத்தியிருக்கும் கறுப்புதினம். இந்தஇழிசெயலில் ஈடுபட்டவர்கள் யாராயினும் அவர்கள் கண்டனத்திற்குரியவர்கள், தண்டனைக்குரிய வர்கள். ஆயர் இல்ல வளாகத்தில் நடந்த தாக்குதல் காட்டுத் தீ போல் எங்கும் பரவிட ஞாயிற்றுக்கிழமை பல பணி நெருக்கடிகள் மத்தியிலும் படையெடுத்து வந்த இறைமக்கள் மற்றும் குருக்களின் ஆதங்கமும் ஆத்திரமும் திருஅவை மணல்மீது கட்டப்பட்டதல்ல, பாறையின் மீதுஅடித்தளமிடப்பட்டது என்பதனை எடுத்துரைத்தது எனலாம். மோதல் போக்கு கொண்ட ஆயர் அல்ல, மிகவும் சாதுவானவர். இவர் மீது ஏன் இந்த கொலைவெறி, வயதில் முதியவர் என்றுகூட பார்க்காமல் இப்படியா நடந்து கொள்வது, ஓர் ஆயரை எப்படி அடிக்க மனம் தோன்றியது…இதுபோன்ற வார்த்தைகள்தான் மக்கள், குருக்கள், துறவியர் அனைவர் வாயிலிருந்தும் வெளிப்பட்டுக் கொண்டேயிருந்தன.
குற்றம் - நடந்தது என்ன??
அன்று நடந்த நிகழ்வினை அறிந்து கொள்வதற்கு முன் பிரச்சினையின் ஆணி வேரிலிருந்து துவங்குவது நல்லது. குழித்துறை மறை மாவட்டத்திற்கு உட்பட்ட தக்கலைக்கு அருகில் ஒரு கிலோ மீட்டருக் கும் குறைவான நிலப்பரப்பள
வைக் கொண்ட பகுதி அப்பட்டு விளை. இங்கு இரண்டு தேவாலயங்கள். ஒன்று புனித அந்தோணியார் ஆலயம், மற்றொன்று புனித சூசையப்பர் ஆலயம்.
புனித சூசையப்பர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தொடக்கப் பள்ளியும் அதை சுற்றியுள்ள இடமும் தங்களுக் குரியது என்று அப்பட்டுவிளை புனித அந்தோணியார் பங்கு இறைமக்கள் நீண்ட காலமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளி குழித்துறை மறைமாவட்ட கூட்டாண்மை மேலாளரால் வழி நடத்தப்பட்டு வருகின்றது. ஒரு பங்கையும் அதை
சுற்றியுள்ள இடத்தையும் நிறுவனத்தையும் வேறொரு பங்கிற்கு மாற்றி கொடுப்பது எளிதான
காரியமல்ல. இருதரப்பினரும் உரிமை கொண்டா டும் இந்தப் பிரச்சினைக்குரிய இடத்தால் மக்கள் மத்தியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது; உறவு நிலைகளில் பாதிப்பு விளைந்துள்ளது; ஊர் ஒற்றுமை சீர்குலைந்துள்ளது.
செயலின் வீரியம் அறிந்து பிரச்சினைக்கு 
சுமூகமாக தீர்வுகாண முந்தைய கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ்
அவர்கள்

இக்கட்டுரையைத் தொடர்ந்து படிக்க.. நம் வாழ்வு வாங்கிப் படியுங்கள்.. ப்ளிஸ்..
இனி நீங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நம் வாழ்வுக்கு உதவும்படியும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 
ஜஸ்ட் கிளிக்..bit.ly/2Fd2abf

https://www.namvazhvu.in/products

- ஆசிரியர்
 

Comment