No icon

ஜூலை 05

புனித அந்தோனி மரிய சக்கரியா

புனித அந்தோனி மரிய சக்கரியா 1502 ஆம் ஆண்டு இத்தா­லியில் பிறந்தார். தாயன்பிலும், இறைபக்தியிலும் வளர்ந்து கல்வி கற்றார். ஏழைகளிடத்தில் அன்பு, இரக்கம் கொண்டவர். 22 ஆம் வயதில் மருத்துவரானார். இறையியல் கற்று நம்பிக்கையும், இறைபற்றும் தனதாக்கி, 1528 ஆம் ஆண்டு குருவானார். நோயாளிகளுக்கு மருத்துவம் செய்து, ஆறுதல்கூறி அன்பு செய்தார். சிறை கைதிகளுக்கு இறையன்பை பகர்ந்தார். மிலானில் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு, துயருற்றவர்களுக்கு உதவினார். மக்களின் ஆடம்பர வாழ்வு, ஏற்றத்தாழ்வுகள், அரசியல் கொள்கைகள், லூத்தர் போதனையால் திரு அவையில் பிளவுகள் ஏற்பட்ட நிலையை கண்டார். இந்நிலையில் மக்களுக்கு பணிசெய்ய, 5 சகோதரர்களுடன் துறவு சபை நிறுவினார். இறைவார்த்தை, திரு அவையின் விசுவாச உண்மைகளை போதித்தார். மக்கள் திருச்சிலுவை மீது அன்புகொண்டு, சிலுவையில் அடைக்கலம் தேடவும், நற்கருணை ஆராதனை செய்யவும் கற்பித்த சக்கரியா, 1539 ஆம் ஆண்டு, இறந்தார்.

Comment