No icon

Vatican News on HOLY WEEK

மக்களின் பங்கேற்பின்றி, நேரடி ஒளிபரப்பில் புனித வார நிகழ்வுகள்,

மார்ச் 15, ஞாயிறன்று, பாப்பிறை இல்லத்தின் நிர்வாக அலுவலகம் வெளியிட்ட ஓர் அறிவிப்பில், கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் உருவான நெருக்கடியைத் தொடர்ந்து, இவ்வாண்டு, வத்திக்கானில், புனித வார நிகழ்வுகள் மக்களின் பங்கேற்பின்றி நடைபெறும் என்றும், இவை, ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பையொட்டி, தன் கருத்துக் களைப் பகிர்ந்துகொண்ட, அருள்பணியாளர்கள் பேராயத்தின் தலைவர், கர்தினால் பெனியமின்னோ ஸ்டெல்லா, மக்கள் பங்கேற்கும் வழிபாடுகள் தடைசெய்யப்பட்டுள்ள சூழலில், நாம் சிறு, சிறு குடும்பங்களாக இறைவனை இன்னும் நெருங்கி வருவதற்கு இதை ஒரு வாய்ப்பாகக் கருதவேண்டும் என்று கூறினார்.

நேரடியான பங்கேற்பு இல்லாமல், ஊடக வழி பங்கேற்பிலும், தூய ஆவியார் நம்மை அடையக்கூடும் என்பதை நம்பவும், இக்கடினமான சூழல் வழியே கடவுள் நமக்குச் சொல்ல விழையும் செய்திகளை உள்ளத்தில் தியானிக்கவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கர்தினால் ஸ்டெல்லா தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

புனித வார நிகழ்வுகளில் மிக முக்கியமான நிகழ்வான, ஊருக்கும் உலகுக்கும்ருசbi நவ டிசbi’ செய்தியும், திருத்தந்தையின் சிறப்பு ஆசீரும், புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத வேளையில் நிகழ்வது, நினைத்துப் பார்க்கக் கடினமாக உள்ளது என்பதை, தன் பேட்டியில் சிறப்பாகக் குறிப்பிட்ட கர்தினால் ஸ்டெல்லா, நம் நம்பிக்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு சவாலாக இச்சூழலை நாம் எதிர்கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

செபம், தவம், நற்செயல்கள் என்ற உன்னத செயல்பாடுகளை ஊக்குவிக்கும் தவக்காலத்தில் நிகழ்ந்துள்ள இந்த நெருக்கடி, தனிமையில் நம்மை சிந்திக்கவும், செபிக்கவும், ஊடகக் கருவிகளின் உதவியின்றி, மற்றவர்களைச் சந்திக்கவும் நமக்கு வாய்ப்புக்களை வழங்குகிறது என்று, கர்தினால் ஸ்டெல்லா அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

Comment