No icon

சமூகப்பணிக்காக டாசோஸ் நடத்திய கருத்துப்பட்டறை

தமிழக சமூகப்பணி மையம் 2019 மே மாதம் 07 ஆம் நாள் ‘கத்தோலிக்க சமூக போதனைகள்” குறித்த கருத்துப்பட்டறையை ஒருங்கிணைத்தது. இந்த கருத்துப்பட்டறையின் நோக்கமானது, தமிழக அளவிலான செயல் உத்திகளை வகுப்பதற்கான (நுஎடிடஎiபே சுநபiடியேட ளுவசயவநபiஉ ஞடயn) செயல் முறைகளில் கத்தோலிக்க சமூகப் போதனைகள் என்கிற கருப்பொருளை மையப்படுத்தி நடைபெற்றது. கருத்துப்பட்டறையில் பங்கேற்ற மறைமாவட்ட சமூகப்பணி மைய இயக்குநர்கள், அலுவலர்கள், இளைஞர்கள், பெண்கள், சமூகப்பணி குழுக்களின் (ஊடிஅஅளைளiடிளே in ளுடிஉயைட ஹஉவiடிn) செயலர்கள், அலுவலர்கள், ளுஊளுகூ பணிக்குழு, பொதுநிலையினர் பணிக்குழு, தமிழகப் பெண்கள் கூட்டமைப்பின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். நிகழ்விற்கு வந்தவர்களை டாசோஸ் மையத்தின் துணைத்தலைவர் அருட்பணி. ஆரோக்கியசாமி அவர்கள் வரவேற்றார். தமிழக அளவிலான சமூகப்பணிக்கான செயல் உத்திகளை வகுக்க வேண்டியதன் அவசியத்தை குறித்தும் அதனை உருவாக்க மறைமாவட்ட சமூகப்பணி மையங்களும், சமூகக் குழுக்களின் பிரதிநிதிகளும் ஆற்ற வேண்டிய பொறுப்புகளைக் குறித்தும் டாஸோஸின் இயக்குநர் அருட்பணி. ஆல்பர்ட் தம்பிதுரை அவர்கள் விளக்கினார். மேலும் ஐக்கிய நாடுகளின் நிலைத்த முன்னேற்ற குறிக்கோள்கள் 2030 க்கான கட்டமைப்பில் கத்தோலிக்க சமூக போதனைகளின் அடிப்படையுடன் திருஅவையின் தமிழக அளவிலான சமூகப்பணிக்கான செயல் உத்தியின் கருத்து ஒருமைப்பாடு மற்றும் சீரமைப்பின் தேவை குறித்தும் விளக்கினார். 
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு புதுச்சேரி கிறிஸ்தவ சமய நிறுவனங்களின் (கூசூஞஊசுஐ) செயலர் அருட்சகோதரி. சகாயராணி அவர்கள், புதுடெல்லி யிலுள்ள கத்தோலிக்க நிவாரண சேவைகள் (ஊசுளு. சூநற னுநடாi) அமைப்பின் ஆலோசகர் அருட்பணி. செலஸ்டின் அவர்கள், காரிதாஸ் இந்தியா அமைப்பி லிருந்து முனைவர். ஜான் ஆரோக்கியராஜ் அவர்கள் பங்கேற்றனர். கருத்துரை வழங்குவதற்கு கோட்டாறு மறைமாவட்டத்தின் சட்ட ஆலோசகரும், சிறந்த சமூக செயல்பாட்டாளரும், மனித உரிமைச் செயல் பாட்டாளருமான வழக்குரைஞர் அருட்பணி. கிறிஸ்து
ராஜமோனி அவர்கள் கிறிஸ்தவத்தின் இருநிலைகளாக
நிறுவன கிறிஸ்தவத்ததையும், இயங்கு கிறிஸ்தவத்தை யும் அதன் கொள்கைகள், அணுகுமுறைகள் மற்றும் மதிப்பீடுகள் சார்ந்து விளக்கினார். களத்தில் மாற்றத்தை முன்னெடுக்கும் அர்ப்பணிப்புடன் கத்தோலிக்க சமூக போதனைகளின் மதிப்பீடுகளை உள்வாங்கி, இயங்கு கிறிஸ்தவத்தில் நாம் எடுத்து செயல்படுத்த வேண்டிய முக்கிய கோட்பாடுகள் குறித்து விளக்கினார். குறிப்பாக, சமூகத்தில் நிலவும் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல், கலாச்சார, அரசியல், கல்வி மற்றும் சுகாதாரம் குறித்த தற்போதைய நிலமைகளை ஆதாரங்களோடும், புள்ளிவிவரங்களோடும் சுட்டிக்காட்டியதோடு  கிறிஸ்தவ சமய அமைப்புக்களும், தனிநபர்களும் அரசியல்படுத்தப்பட்டு முடிவெடுக்கும் தளங் களில்; பங்கேற்க வேண்டியதன் அவசியத்தை வலி யுறுத்தினார்.
புதுதில்லியிலுள்ள கத்தோலிக்க நிவாரண
வேவைகள் அமைப்பின் ஆலோசகர் அருட்பணி.
செலஸ்டின் அவர்கள் சுளுஞ யின் தேவையுணர்ந்து
இந்த கருத்துப்பட்டறையில் கலந்து கொண்ட அனைவரையும் பாராட்டியதோடு, அதனை உயிர்ப்புடன் தொடர்ச்சியாக செயல்படுத்த தேவைப்படும் செயல்பாடுகளைக் குறித்து சிந்திக்கவும், தேவையான நகர்வுகளை முன்னெடுக்கவும் வலியுறுத் தினார்.
சமூகப்பணியில் உள்ள திருஅவையின் அமைப்புகள் தங்களது சமூகப்பணியில் அடுத்த 5 ஆண்டு காலத்தில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்த குழுவிவாதம் செய்யப்பட்டது. அதனை வழிநடத்திய காரிதாஸ் அமைப்பின் முனைவர். ஜான் ஆரோக்கியராஜ் அவர்கள், காரிதாஸ் இந்தியாவின் 2018 - 2023-க்கான செயல் உத்திகள் குறித்து பகிர்ந்து கொண்டார். குறிப்பாக மக்களை ஒருங்கிணைத்து அமைப்பாக்குதல், உரையாடல், தன்னார்வலர்களை கட்டி எழுப்புதல், பகிர்ந்து கொள்ளும் சமூகங்களை உருவாக்குதல் என்றும் 4 தூண்களைக் குறித்து பகிர்ந்துகொண்டார்.
இறுதியாக, தலித் மற்றும் ஆதிவாசிகள் பணிக்குழு (கூசூக்ஷஊ ஊடிஅஅளைளiடிn கடிச ளுஊ/ளுகூ), தமிழக பெண்கள் கூட்டமைப்பு (கூயஅடை சூயனர றுடிஅநn குநனநசயவiடிn)  மற்றும் திருச்சி மண்டல பிரதிநிதிகள் தன்னார்வமாக மையக்குழுவில் இணைந்து கொள்ள சுளுஞ வகுப்பதற்கான செயல்பாடுகளைத் திட்டமிடவும், செயலூக்கப்படுத்தவும் மையக் குழுவானது  இறுதி செய்யப்பட்டது. தமிழக சமூகப்பணி மையத்தின் திட்ட அலுவலர் திருமிகு. மேரி நிர்மலா அவர்கள் நன்றிகூற கருத்துப்பட்டறை நிறைவுற்றது.

Comment