No icon

டுவிட்டர் செய்திகள்

‘மத்தியதரைக்கடல் பதட்ட நிலைகள் குறித்து கவலையுடன் கவனித்து வரும் அதேவேளை, அப்பகுதி மக்களின் அமைதியை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மோதல்களுக்குத் தீர்வுகாண, அனைத்துலக சட்டங்களை மதிப் பதுடன் கூடிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற வேண்டும் என விண்ணப்பிக்கிறேன்”.

பேதுருவுக்கும் ஏனைய சீடர்களுக்கும், ஏன், நமக்கும், சிலுவை என்பது, பெரிய இடையூறாகத் தோன்றலாம், ஆனால்,  இயேசுவுக்கோ, அது சிலுவையிலிருந்து தப்பிச் செல்வதைக் குறிக்கும். ஏனெனில், சிலுவையை இடை யூறாக நோக்குவது, நம் மீட்புக்காக, இறைவன்,இயேசுவிடம் ஒப்படைத்த பணியை, அதாவது இறைவிருப்பத்தை தவிர்ப்பதைக் குறிப்பதாகும்’

“கிறிஸ்துவின் பாஸ்கா பேருண்மையை, நம் வாழ்வின் மையமாக வைப்பது என்பது, சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவின் காயங்கள் பிரசன்னமாக இருக்கின்ற, போர்கள் வன்முறை, வாழ்வு மீது நடத்தப்படும் தாக்குதல்கள், சுற்றுச்சூழல் பேரிடர்கள், வறுமை ஆகியவற்றுக்குப் பலியாகும், ஏராளமான அப்பாவி மக்கள் மீது பரிவன்பு காட்டுவதாகும்” 

“ஆண்டவரில் நம்பிக்கை வைப்பதும், அவரது திட்டங்களில் நுழைவதற்கு முயற்சியை மேற்கொள்வதும், அவரது மீட்பு, நாம் எதிர் பார்ப்பதைவிட, மாறுபட்ட வழிகளில் நம்மை வந்தடையும் என்பதை ஏற்பதுமாகும்”

"இந்த நெருக்கடி நிலைக்குப்பின், சுற்றுச் சூழல், படைப்பு, நமது பொதுவான இல்லம் ஆகியவற்றைப் பற்றிய அக்கறை ஏதுமின்றி, பொருளாதார, சமுதாய அநீதிகளுடன் நம்வாழ்வைத் தொடரப்போகிறோமா? சிந்திப்போம்" 

"படைத்தவர் நமக்கு வழங்கியுள்ள நன்மை களை பேணிக் காத்தால், அனைவரும் குறை
யின்றி வாழும்வண்ணம், நம்மிடம் உள்ள வற்றை, பொதுநலனுக்கென வைத்தால், நலம் மிக்க, சமத்துவம் நிறைந்த உலகை நம்மால் மீண்டும் உருவாக்கமுடியும்"

Comment