No icon

ஆயர், தனது மந்தையை தோளில் சுமக்க வேண்டும்

வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் ஜூன் 29 ஆம் தேதி நிறைவேற்றிய திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாத் திருப்பலியில் ஆற்றிய மறையுரையில், பேராயர்கள் அணியும், பால்யம் என்ற கழுத்துப்பட்டையின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கினார். ஆயர், தனது மந்தையை தோளில் சுமக்க வேண்டும் என்பதையும் ஆயர்கள் தங்களுக்காக வாழாமல், தனது மந்தைக்காக வாழ வேண்டும் என்பதையும், வாழ்வைப் பெறும்பொருட்டு, அதை இழக்க வேண்டும் என்பதையும், பால்யம் நினைவுறுத்துகின்றது என்று திருத்தந்தை கூறினார்.  
இத்திருப்பலியில், இந்தியாவின் நாக்பூர் பேராயர் ஜோசப் கொன்சால்வெஸ் அவர்கள் உட்பட, பல்வேறு நாடுகளின் 31 பேராயர்களுக்கு பால்யங்களை திருத்தந்தை பிரான்சிஸ் அணிவித்தார். கடந்த ஆண்டில் பேராயர்களாக நியமனம் பெற்ற இந்த 31 பேராயர்களில், நான்குபேர்  மியான்மர், வியட்நாம், இந்தோனேசியா, இந்தியா ஆகிய ஆசிய நாடுகளையும், ஒருவர், ஓசியானியாவையும், எட்டுப் பேர் ஆப்ரிக்காவையும் சேர்ந்தவர்கள்.

Comment