No icon

19.05.2019 பாஸ்கா காலம் 5ஆம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை
கிறிஸ்துவில் அன்பார்ந்த வர்களே, பாஸ்கா கால 5 ஆம் ஞாயிறாகிய இன்று நம் அன்னையாம் திருஅவை நமக்கு ஆண்டவர் இயேசு வழங்கிய அன்புக் கட்டளையைக் கடை பிடிப்பதன் வழியாக நாம் அவரது சீடர்கள் என்பதை அறிக்கையிட அழைப்புக் கொடுக்கிறது. அந்த அன்பின் மேலீட்டால்தான் திருத்
தூதர் பவுலும் அவருடன் இணைந்து பணியாற்றும் அன்பர்
களும் சென்று நற்செய்தியை அறிவித்து, திருஅவைகளை உருவாக்கி இயேசுவின் சீடர்
களது எண்ணிக்கையைப் பெருக் கிக் கொண்டிருக்கிறார்கள்.
திருமுழுக்குப் பெற்ற அனைவரது வாழ்வும் பணியும் கடவுளையும் அவரது மகனாகிய இயேசு கிறிஸ்துவையும் மாட்சிப்
படுத்துவதாக அமைய வேண்டும்.
கடவுள் தம் மகனைச் சாவி லிருந்து உயிருடன் எழுப்பி, தம் வலப்பக்கத்தில் அமர்த்தி மாட்சிப்படுத்தியதைப் போல அவரிடம் நம்பிக்கை கொள்ளும் நம்மையும் மாட்சிப்படுத்துவார். எனவே நமது சொற்கள், செயல் கள் அனைத்தும் இயேசுவின் வழியாகத் தந்தையை மாட்சிப் படுத்தும் விதத்தில் அமைய, நமது குடும்பங்கள் ஒளிபெற இத்திருப்பலியில் உருக்கமாக வேண்டுவோம்.
முதல் வாசக முன்னுரை திருத்தூதர் பணிகள் 14: 21-27
திருத்தூதர் பவுல் தாம் அமைத்த திருஅவையைச் சேர்ந்தவர்கள் இறையாட்சிக்கு உட்படும்போது எதிர்கொள்ளும் வேதனைகளில் அவர்களை ஊக்குவித்து அவர்களது நம்பிக்
கையை உறுதிப்படுத்தும் பணியைச் செய்கிறார். அப்போது
குறிப்பாக பிற இனத்தவர் ஆண்டவர் மீது நம்பிக்கைகொள் ளும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இவற்றை விளக்கும் வாசகத் தைக் கேட்போம்.
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 145:8-9, 10-11, 12-13
பல்லவி: என் கடவுளே உம்மைப்
புகழ்ந்தேத்துவேன்
இரண்டாம் வாசக முன்னுரை: திருவெளிப்பாடு 21: 1-5
பழையன கழிதலும் புதியன மலர்
தலும் இயற்கையின் நியதி.
புதியன கடவுளின் உறை விடத்தை உணர்த்துகின்றன. எக்குறையும் இல்லாத எத்துன்ப
மும் அணுகாத புதிய எருசலேம்
மலர்ந்துள்ளதை திருத்தூதர் யோவான் காண்கின்றார். அதிலி ருந்து தோன்றிய அரியணையில் வீற்றிருப்பவர் உண்மையானவர், நம்பத் தகுந்தவர் என்பதை உணர்த்தும் இரண்டாம் வாசகத் தைக் கேட்போம்.
நற்செய்தி:
யோவான் 13: 31-33, 34-35
 மன்றாட்டுகள்
1. அன்புத் தந்தையே இறைவா!
  எங்கள் திருஅவைப் பணி யாளர்களான திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்
கள், துறவிகள் மற்றும் திரு நிலையினர் அனைவரும்
தங்களை முன் மாதிரியாகக் காட்டி, அன்பு செய்ய முன்
வரவேண்டுமென்று உம்மை மன்றாடு கிறோம்.
2. ஆற்றல் அனைத்திற்கும் ஊற்றே இறைவா
  எங்கள் இந்திய நாட்டிற்கு ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்க நடைபெற்று வரும் தேர்தல் வழியாக நல்ல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப் படவும், அவர்கள் தங்கள்
ஆற்றல்களை பயன்படுத்தி எங்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, தொழில்வளம், பொருளாதார மேம்பாடு, தொடர் பாதுகாப்பு ஆகிய
வற்றைப் பெற்றுத்தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. புதுப்படைப்பாக்கும் இறைவா!
  எங்களது சிந்தனைகளைப் புதுப்பித்தருளும். எங்கள் வாழ்வாதாரங்கள், தொழில் நுட்பக் கருவிகள், நீர் நிலைகள்
ஆகிய இயற்கைச் சூழல்கள்
அனைத்தும் புதுப்பிக்கப் பட்டு அதன் வழியாக எங் களது வாழ்வு அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் காணத் துணை நிற்கும்படி
உம்மை மன்றாடுகிறோம்.
4.  நலம் வழங்கும் இறைவா!
  எங்களை உம் உள்ளங்கை களில் பொறித்துவைத்து வழி
நடத்தி வருகின்ற நீர், எங்களுக்கு உடல், உள்ள நலன்களை வழங்கவும் நாங்
களும் பிறர் நலனில் அக்கறை கொண்டு, உடல் உறுப்புகள், இரத்தம் ஆகியவற்றைத் தானமாக வழங்கி உதவ முன்வரவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. உலகின் ஒளியே உன்னத இறைவா!
  உமது ஆட்சிப் பணிகள் செம்மையாக நடைபெற மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுள் ஒன்றாக திருஅவையில் பணித்தள மாற்றங்கள் இடம் பெறுகின்
றன.  அவை உண்மையான தேவையின் அடிப்படை யில் வழங்கப் படவும், உமது இனிய வழி நடத்துதலால் பணியாளர்கள் புதிய பணித் தளங்களில் வெற்றிக் கொடி
நாட்டும் விதத்தில் செயல் படவும் அருள்புரிய வேண்டு
மென்று உம்மை மன்றாடு கிறோம்.

Comment