No icon

23.06.2019 இயேசுவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா

திருப்பலி முன்னுரை :
கிறிஸ்து இயேசுவில் பேரன்புக்குரியவர்களே, இன்று நமது அன்னையாம் திருஅவை இயேசுவினுடைய திருவுடல், திருஇரத்தம் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. ஆன்றோரும் சான்றோரும் அன்பை மூன்று நிலைகளில்
வகைப்படுத்தி விளக்குகின்றனர். முதலாவது, தன்னிடம் உள்ள
வற்றில் சிலவற்றைப் பிறருக்கு வழங்குதல், இரண்டாவது,
தன்னிடம் உள்ள அனைத்தை யும் பிறருக்கு வழங்குதல். மூன்றாவது தன்னிடம் உள்ள
அனைத்தையும் பிறருக்கு வழங்கிவிட்டு தன்னையும் அவருக்கே வழங்குதல். இதில்
மூன்றாவது நிலையே முழுமை யானதும் ஈடிணையற்றதும் ஆகும். இதற்குப் பேரிலக்கணமாக விளங்குபவர் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துதான்.    
தமக்குரியோர் மேல் இறுதி
வரை அன்புகாட்டிய இயேசு,
தன் உடலையும் இரத்தத்தை யும் அவர்களுக்கு நிலைவாழ்வு
தரும் உணவாக வழங்கினார். அந்த இயேசுவையே நாம் திருமுழுக்கு வழியாக மீட்பரும் ஆண்டவருமாக நமது மாபெரும்
கொடையாகப் பெற்றுள்ளோம். அழியா வாழ்வாகவும் நம்வாழ்வுக்கு
ஆற்றல் தரும் அருமருந்
தாகவும் இயேசுவின் உடலும் இரத்தமும் இருந்து நம்மை தந்தையோடு இணைக்கும் அரும்
பணியை ஆற்றுகின்றன. தம் திருவுடல் திருஇரத்தத்தை நற்கருணை என்ற பெயரில் அருளடையாளமாக இயேசு உயர்த்தினார். அது நம் வாழ்வை வளப்படுத்தும் கருவூலமாக இருக்
கிறது. நற்கருணைத் திருவிருந்தில் தகுதியோடு பங்கேற்கவும் அதன் வழியாக நடமாடும் நற்கருணைப் பேழையாக இருந்து நம் இல்லங் கள், நிறுவனங்கள் மற்றும் பங்கில் செயல்பாட்டாளர்களாக விளங்கவும் இத்திருப்பலியில் அருள்வேண்டுவோம்.
முதல் வாசக முன்னுரை: தொடக்க நூல் 14:18-20
வெற்றியுடன் திரும்பிய ஆபிராமின் நெற்றியில் திலகமிட்டு
வாழ்த்துவதுபோல உன்னத கடவு ளின் அர்ச்சகர் மெல்கிசெதேக்கு ஆபிராமுக்கு கடவுளின் ஆசிகளை வழங்கினார். அவற்றை ஏற்றுக் கொண்ட ஆபிராம் அவருக்கு வெகுமதியளித்தார். வாழ்வின் எல்லாநிலைகளிலும் கடவுளின் உடனிருப்பு நம்மைத் தொடரும் என குறிப்பால் உணர்த்தும் முதல்வாசகத்தைக் கேட்போம்.
பதிலுரைப்பாடல் : திருப்பாடல் 110: 1,2,3,4
பல்லவி: மெல்கிசெதேக்கின் முறைப் படி நீர் என்றென்றும் குருவே.
இரண்டாம் வாசக முன்னுரை: 1கொரிந்தியர் 11:23-26
விருந்துகளுக்கெல்லாம் மாபெரும் விருந்தாகத் திகழ்வது ஆண்டவர் நமக்கு வழங்கிய தம் உடல், இரத்தம் ஆகிய நற்
கருணைப் பெருவிருந்து, அதனை
ஆண்டவர் இயேசு நிறுவிய முறையையும் அதனை உண்ணும்
நாம் ஆண்டவர் இயேசுவின் சாவை அறிவிக்கும் கடமையையும் திருத்தூதர் பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் விளக்கு
கிறார். இதற்குச் சீரிய செம்மனத்து டன் செவிசாய்ப்போம். 
நற்செய்தி: லூக்கா 9:11-17
நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுகள்
1. பகிர்ந்திடத் தூண்டும் பரம்பொருளே இறைவா!
எம் திருத்தந்தை பிரான்சிஸ்,
ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் திருநிலையினர் அனை வரும் பகிர்தலின் மேன்மையை எமக்கு ஏற்ற முறையில் எடுத்து ரைத்து தாங்களும் சான்று காட்டி கடைபிடிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. ஒன்றிணைக்கும் உன்னத இறைவா!
எம் நாட்டுத் தலைவர்களும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் எமது நாடு சந்திக்கும் சவால்களான பெரும்பான்மைவாதம், சமத்துவமின்மை, வன்முறை, மத-மொழி-மாநில அடிப்படையிலான பிரி
வினைவாதம் ஆகியவற்றால் உருவா
கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக நீதியான முறையில் தீர்வுகள் மேற்
கொள்ளவும் எல்லாரும் விரும்பித் தேடும் நல்லாட்சியை வழங்கும்  முயற்சியில் எல்லாரும் ஈடுபடவும் வேண்டுமென்று உம்மை மன்றாடு கிறோம்.
3. நிறைவு நோக்கி எம்மை வழிநடத்தும் இறைவா!
அருள்வாக்கினாலும் அருளடையாளங்களாலும் எம்வாழ்வில் நெருங்கி வந்து, எம்மை நெறிப்படுத்தி, நாங்கள் நிறைவு காணும் விதத்தில் பயணிக்கத் துணையிருந்து, நாள்தோறும் நாங்கள் விரும்பித்தேடும் வானக விருந்தில் தகுதியுடன் பங்கேற்கச் செய்து எம்வாழ்வில் நிறைவுகாண துணைநிற்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். 
4. ஆசிகள் வழங்கும் அன்புத் தந்தையே இறைவா!
திருமுழுக்கு வழியாகப் பொதுக் குருத்துவத்தில் பங்கு பெற்றுள்ள உம் சுவிகாரப் பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் மெல்கிசெதேக்கின் முறைமைப்படி தலைமைக் குருவாக விளங்கும் ஆண்டவர் இயேசு வழியாக உமது ஆசிகளைப் பெற்று அவற்றைப் பிறரோடு பகிர்ந்து வாழ முன்வர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. தேவைகளை அறிந்து வழங்கி எம்மைத் தினமும் காக்கும் இறைவா!
நாங்கள் நடத்தும் நற்கருணைக் கொண்டாட்டங்கள், பவனிகள், பக்தி
முயற்சிகள், பயிலரங்குகள் அனைத்தி லும் நாங்கள் கற்பிக்கும் நற்கருணைப் பண்புகளான: ஒன்றிணைதல், நன்றி
கூறல், பகிர்ந்து பராமரித்தல் ஆகிய வற்றை எங்கள் வாழ்வில் பின்பற்றி ஏழ்மை, வறுமை, தனிமை, நோய், புறக்கணிக்கப்படும் போக்கு, சமத்துவ மற்ற நிலை ஆகியவற்றை அறவே போக்கும் உள்ள உறுதிபெற்று வாழ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். 

Comment