No icon

ஜூலை 21, 2019

பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை: கிறிஸ்து வில் பேரன்புக்குரிய சகோதர, சகோதரிகளே! பணிவும் பணி
விடையும் கடவுளின் வார்த்தை களில் மறைந்து கிடக்கும் உண்மைகள். இவற்றில் எது
நல்ல பங்கு என்பதைச் சிந்தித்து திருப்பலிக் கொண்டாட்டத்தில் இணைய இறைவன் நம்மை
அழைக்கிறார். இவை இரண்டுமே
ஆபிரகாமிடம் காணப்படுகின் றன. இவை கடவுளை மாட்சி
படுத்துகின்றன. இவையே அவருக்குக் கடவுளிடமிருந்து பரிசாகவும்  திரும்புகின்றன.
ஆனால் ஒரு மனிதனின் பணிவில் வெளிப்படும் எதார்த்தம் இருள் நிறைந்த உலகில் ஏளனமாகவே பார்க்கப்படுகிறது. பணிவிடையில் வெளிப்படும் பண்பு இன்றைய உலகில் சுயநலமாகவே பார்க்கப்படுகிறது. "காக்கா பிடிக்கிறான்" என்ற பட்டமும் தருகிறது. இப்பார்வை
யால்தான் சமுதாயத்தில் மனிதன்
பல நேரங்களில் துன்புற வேண்டிய நிலைக்கு தள்ளப்படு
கிறான். ஆனால் இறைவார்த் தையையே தம் வாழ்வாக அவன் மாற்றும்போது கடவுளின் அருள் அவனிடையே அவனின் பணிவையும், பணிவுடையையும் நிறைவு செய்யும். இதுபற்றிய சிந்தனையை இயேசு பல நேரங்களில் தம் சீடர்களுக்குப் புரிய வைக்க முயற்சிக்கிறார்.
கிறிஸ்து கொண்டு வந்த இறையாட்சி மீட்பின் மகுடமாகும். அது சமாதானத்தின் அடிப்படையில் இருந்தாலும் இறையரசின் அறிவிப்புப் பணி பெரும் பிரிவினைகளையும் கொண்டு வருகிறது. இருப்பினும் "அறிவிக்கும் பணி" என்பது நம்மீது சுமத்தப்பட்ட கடமை. நாம் செய்ய வேண்டிய தொண்டு என்பதை புரிந்துகொண்டு வாழவும் நல்ல பங்காம் இறை வார்த்தையை நமதாக்கிக் கொண்
நற்செய்திப் பணியாளராக வாழவும் அருள்புரியவேண்டுமென்று இத்திருப்பலியில் உருக்கமுடன் மன்றாடுவோம். 
முதல் வாசக முன்னுரை: தொநூ 18:1-10
ஆபிரகாமுக்கு வழங்கப்பட்ட ஆசிபோல் உலகில் யாருக்குமே வழங்கப் படவில்லை. கடவுளின் ஆசி மலடியான தன் மனைவிக்குக் குழந்தைப் பாக்கியம் கொடுத்த அளப்பறிய அன்பை எண்ணி எண்ணி வியந்து கொண்டிருந்த ஆபிரகாம் தூத்தில் நின்ற
மூவரிடம் இறைவனைக் காணும் பேற்றைப் பெற்று மகிழ்ந்து அவர்களுக்கு பணிந்து, பணி
விடை புரியும் அழகையும் அவர் உள்ளம் நிறைந்து மகிழ்ந்து உறவாடும் பாங்கையும் இந்த வாசகத்தின் வழியே உணர்ந்து மகிழ்வோம்.
பதிலுரைப்பாடல்: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிட தகுதியுள்ளவர் யார்?
திபா 15:2-3ஆ, 3இ-4அ,5
இரண்டாம் வாசக முன்னுரை: கொலோ 1:24:28
இறைவார்த்தை அறிவிப்புப் பணி மிகவும் கடினம் என்றாலும் காலத்தின் கட்டாயம் என்பதால் அல்ல
அது நமது கடமை அதனால் ஏற்படும் துன்பங் களை கூட சுகமான சுமையாக மாற்றிக் கொள்ளப்பட வேண்டியவை என்பதையும் கடவுளின் மீட்பு
திட்டத்தால் வாக்களிக்கப்பட்ட இயேசு கிறிஸ்து நம்மில் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கிடுவார் என்பதை இவ்வாசகத்தின் மூலம் புரிந்து கொள்வோம்.
நற்செய்தி: லூக்கா 10:38-42
நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுகள்:
1. பணியேற்க அல்ல பணி புரியவே வந்தேன் என்ற இறைவா!
எங்கள் திருந்தந்தை, ஆயர் பெருமக்கள். குருக்கள், துறவறத்தார் அனைவரும் தங்கள் பணி வாழ்வில் ஏற்படும்
சவால்களை ஞானத்தோடு சந்திக்க வேண்டிய ஆற்றலை அருளும்படி உம்மை மன்றாடு கின்றோம்.
2. ஆபிரகாமின் உபசரிப்பை அன்போடு ஏற்றுக் கொண்ட இறைவா!
எங்கள் தாய் திருஅவை யில் பணிபுரியும் எண்ணற்ற பக்த அமைப்புகள், பொதுநல சங்கங்கள், பள்ளிகள், மடங்கள் போன்ற அனைத்துப் பிரிவுகளிலும் செயல்படும் பணியாளர்கள் அனைவரும் தங்களின் பொறுப்பு
களை உணர்ந்து அமைப்பின் ஒழுங்கு முறைகளுக்கு கீழ்ப்
படிந்து, மகிழ்வோடு பிறரன் புடன் பணிபுரியத் தேவையான அருளைப் பொழிய வேண்டும் என்று உம்மை மன்றாடு கின்றோம். .
3. சுகமளிக்கும் ஆற்றல் கொண்ட இறைவா!
உலகில் மிகக் கொடுமை யான நோய்களான புற்றுநோய், மூளைவர்ச்சிக்குன்றிய நோய் போன்றவைகளால் பாதிக்கப் பட்ட நோயாளிகளை உமது கரத்தில் ஒப்படைக்கின்றோம். நோயின் வேதனைகளிலிருந் தும், துன்பத்திலிருந்து சுக மளித்துக் காத்தருள வேண்டும்
என்று உம்மை மன்றாடு கின்றோம்.
4. ’நல்ல பங்கு’ எது என்பதை உணர்த்திய இறைவா!
குடும்பங்களில், பணித்
தளங்களில், சமூக அமைப்பு களில், பள்ளிகளில், பணிபுரியும்
நாங்கள் எங்கள் செயல்பாடு களில் உண்மை, நேர்மை, அன்பு, பகிர்வு முதலிய பண்பு களை வெளிப்படுத்த எம்மிடம் விளங்கிட வேண்டும் என்றும் அதன்மூலம் நாங்கள் ’நல்ல பங்கை’க் கண்டடைந்து வாழ்கின்
றோம் என்ற மன அமைதியை அடையவும் அருள்புரிய வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.

Comment