No icon

C.S.I ஆயர் தர்மராஜ்

வெளிநாடு செல்ல கேரள C.S.I ஆயருக்குத் தடை

தென்னிந்தியாவைச் சேர்ந்த புராட்டஸ்டன்ட் ஆயர் தர்மராஜ் ரசாலம், பண மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, அவர் வெளிநாடு செல்வதற்கு பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் அரசுத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். C.S.I ஆயர் தர்மராஜ் ரசாலம் பண மோசடியில் ஈடுபட்டுவிட்டு, நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, ஜூலை 26 ஆம் தேதி, கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்டார்.

C.S.I திருஅவையினால் நடத்தப்படும் காரக்கோணம் டாக்டர் சோமர்வெல் மெமோரியல் சி. எஸ். . மருத்துவ கல்லூரியில், பல்வேறு மருத்துவ மேற்படிப்புக்களை கற்க இடம் வாங்கித்தருவதாக சொல்லி, பலரிடம் பணம் பெற்றதாகவும், பணம் பெற்ற பின்னர் அளித்த வாக்குறுதியின்படி மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தரவில்லை என்றும் பல விண்ணப்பதாரர்கள் ஆயர் தர்மராஜ் ரசாலம் மீது புகார் அளித்ததை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மறைமாவட்டத்தின் கல்வி வாரியத்தின் இயக்குனர் தந்தை C.R. காட்வின், "தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆயர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்க மறைமாவட்டத்திடம் அனைத்து ஆவணங்களும் உள்ளனஎன்று கூறினார்.

"இவை சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், இவற்றில் எந்த உண்மையும் இல்லை. ஆயர் மற்றும் பிற அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டு பொய்யானது. அவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்து, வெளியே வருவார்கள்" என்று C.S.I திருஅவையின் செய்தித் தொடர்பாளர் தந்தை ஜெயராஜ், செய்தியாளர்களிடம் கூறினார்.

"எங்கள் மருத்துவக் கல்லூரி இது போன்ற குற்றசாட்டுக்களை எதிர்கொள்வது புதிதல்ல. மருத்துவக் கல்லூரியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக சுயனலவாதிகள் இதுபோன்ற கதைகளை அவ்வப்போது உருவாக்கி, பரப்பி வருகின்றனர். ஆனால் உண்மை என்ன என்பது மக்களுக்கு தெரியும்" என்று மருத்துவக் கல்லூரியின் ஊழியர் ஒருவர் கூறினார்.

பொருளாதார குற்றங்களை கையாளும் கூட்டாட்சி அமைப்பான E.D, ஆயர் ரசலாம் உள்ளிட்ட ஒரு சில அதிகாரிகளின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் பணமோசடி செய்ததாக சோதனை நடத்தியது. ஆனால் சோதனையில் எந்த குற்றசாட்டும் நிரூபிக்கப்படவில்லை.

Comment