No icon

சமூகக் குரல்கள்

நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்காகக் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இருப்பினும், பெண்களுக்கான பாதுகாப்பின்மை சூழல் தொடர்வது துரதிருஷ்டவசமானது. பெண்களின் தொடர்ச்சியான போராட்டம், அவர்களைப் பலவீனமாகக் கருதும் குறுகிய மனப்பான்மை கொண்ட சமூகம் மற்றும் பழமைவாதத்திற்கு எதிரானது. சமுதாயத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும், ஆழமாக வேரூன்றிய சில பழமைவாதம், பெண்களின் சமத்துவத்திற்குத் தடையாக இருக்கிறது. எந்தவொரு தேசத்தின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் பெண்களின் பாதுகாப்பும், கண்ணியமும் முக்கியமானதாகும். நமது நாட்டில் உள்ள பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழி எடுக்க வேண்டும்.”

- இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

நூல்கள் நம்மை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் மிகச்சிறந்த ஆயுதம். வாசிப்பின் பயனை உணர்ந்து வாசித்தால் நமது வாழ்க்கை வளம் பெறும்.”

- திரு. மு.பெ. சாமிநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வரும் தனிநபர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு முதல்வரின்நீர்நிலைகள் பாதுகாவலர் விருதுவழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.”

- திரு. பி. செந்தில் குமார், சுற்றுச்சூழல், பருவநிலை மாறுபாடு மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர்

Comment