No icon

சென்னையில் சிறப்பாக நடைபெற்ற

இந்திய கத்தோலிக்க பத்திரிகையாளர் கூட்டமைப்பின் (ICPA) ஆண்டுக் கூட்டம்

இந்திய கத்தோலிக்க பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பின் 27வது தேசிய மாநாடும், 58வது ஆண்டுப் பொதுக்கூட்டமும்நம் வாழ்வுவார இதழ் மற்றும் நியூ லீடர்ஆகிய பத்திரிகைகளின் ஒருங்கிணைப்பில் சென்னை சலேசிய தலைமையகமான சிட்டாடலில் டிசம்பர் 10 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது. தேசிய அளவில் நூறுக்கும் அதிகமான புகழ்பெற்ற கத்தோலிக்கப் பத்திரிகையாளர்களும் சென்னை அளவில் இருநூறுக்கும் மேற்பட்ட பத்திரிகைத் துறையில் ஆர்வமிக்க இளம் மாணவர்களும் சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்று இவ்விழாவை ஒரு வரலாற்று நிகழ்வாக மாற்றினர்.

மாண்டோஸ் புயலின் காரணமாக டிசம்பர் 09 ஆம் தேதி சென்னை பாதிக்கப்பட்டிருந்தாலும் தேசிய அளவில் ஒரு வருடத்திற்கு முன்பே இவ்விழா திட்டமிடப்பட்டதால் விழா ஏற்பாட்டாளர்களானநம் வாழ்வுவார இதழ் ஆசிரியர் குடந்தை ஞானியும் நியு லீடர்ஆசிரியர் அருள்பணி. பங்கிராஸ் அவர்களும் திட்டமிட்டு மிகச் சிறப்பாக செய்து அனைவர் வியக்கும்படி பங்களித்திருந்தனர்.

தொலைக்காட்சி என்னும் காட்சி ஊடகத்தின் கவர்ச்சியில் கரைந்து போகாமல், வலிமையான சிந்தனையை பேனா முனையில் பதிந்து புரட்சி ஏற்படுத்தும் பத்திரிகையாளர்கள் - இறைவாக்குணர்வு மிகுந்த தொடர்பாளர்களாக அழைக்கப்பட்டவர்கள்என்ற தலைப்பில் இவ்வாண்டுக்கூட்டம் நடைபெற்றது. தொடக்க விழாவில் சென்னை - மயிலை பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் கிறிஸ்தவ பத்திரிகையாளராக இருப்பதென்பது  ஓர் இறையழைத்தல் என்று முத்தாய்ப்பாக எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினரான தமிழக சிறுபான்மை ஆணையத் தலைவர் உயர்திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள், ஒடுக்கப்பட்டு வரும் இந்திய ஜனநாயகக் சூழலில் பத்திரிகையாளராக பணியாற்ற வேண்டிய அழைப்பையும் துணிவையும் சவாலையும் பாங்குடன் எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து புகழ்பெற்ற வரலாற்றுத்துறை பேராசிரியரும் சிந்தனையாளருமான பேரா. முனைவர் பெர்னார்ட் டி சாமி அவர்களின் நெறிப்படுத்துதலில் சென்னை ஏசியன் காலேஜ் ஆப் ஜேர்னலிசம் என்ற கல்லூரியின் நிறுவனரும் சேர்மேனுமான முனைவர் சசிகுமார், சென்னை - மயிலை உயர் மறைமாவட்டத்தின் உயர்கல்வி அமைப்பான ஜே.டி அகாடமி இயக்குநர் அருள்முனைவர் A.L. செபாஸ்டியன், பாராளுமன்றத்தின் பதின்ம வயதில் உரையாற்றிய எக்மோர் டான்போஸ்கோ பள்ளி மாணவி ரியான் மரிய கிறிஸ்துஸ் ஆகியோர் தங்களின் அனுபவ ரீதியான, அறிவியல் ரீதியான கருத்துக்களால் எல்லார் உள்ளங்களையும் கொள்ளைக் கொண்டனர். ஓர் அறிவு விருந்தாகவே அவ்வமர்வு அனைவராலும் கொண்டாடப்பட்டது.

மதிய உணவுக்குப் பின் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி மேமிகு சந்துரு அவர்களின் தலைமையில் கத்தோலிக்கப் பத்திரிகையாளர்களுக்கு தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்றது. மூத்தப் பத்திரிகையாளரும் புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலருமான முனைவர் ஜான் தயாள் அவர்களுக்கு அருள்பணி. லூயிஸ் கரேனோ விருதும், தலித் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் கல்கத்தா சேசு சபை பணியாளர் இருதய ஜோதி அவர்களுக்கு விருதும் பாராட்டுப் பத்திரமும், இந்தி இலக்கியப் பங்களிப்பிற்காக சுவாமி தேவானந்த் சக்குங்கல் விருது அருள்சகோதரி கங்கா ராவாத் SSpS அவர்களுக்கும் மாண்புமிகு நீதிபதி சந்துரு அவர்கள் பரிசளித்து கௌரவித்தார். சென்னை லயோலா கல்லூரி முதல்வர் அருள்முனைவர் தாமஸ் சே. அவர்களும் நீதிபதி சந்துரு அவர்களின் எழுச்சிமிகுந்த பேச்சு பத்திரிகையாளர்களுக்கும் எதிர்கால சந்ததிக்கும் மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது.

இவ்விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள், பங்கேற்பாளர்கள், விருது வென்றவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், கருத்துரையாளர்கள் அனைவருக்கும் ஆங்கில மொழிபெயர்ப்போடு திருக்குறள் நூலும் பொன் பேனா வடிவிலான நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. சென்னை சலேசிய மாநிலத் தலைவர் பேரருள்திரு.கே.எம்.ஜோஸ் அவர்களும் துணைத் தலைவரும் தற்போதைய புதிய மாநிலத் தலைவருமான பேரருள்திரு.டான்போஸ்கோ அவர்களும் தாராள மனப்பான்மையுடன் இந்நிகழ்வு சலேசிய வளாகத்தில் கொண்டாடப்பட அனுமதித்ததோடன்றி, விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்று அனைத்து பத்திரிகையாளர்களையும் பெரிதும் ஊக்கப்படுத்தினர்இவ்விழாவில் இந்திய ஆயர் பேரவையின் சார்பில் முன்னாள் ஆயர்நிலை பிரதிநிதி ஆயர் சல்வதோரே லோபா அவர்களும் ஆயர் ஹென்றி டிசௌசா (பெல்லாரி மறைமாவட்டம்) அவர்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சி முழுவதும் உடனிருந்தது மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது.  

விழாவிற்கான ஏற்பாடுகளைச் மிகச் சிறப்பாக செய்தநம் வாழ்வுஆசிரியர் குடந்தை ஞானி அவர்களும், ‘நியு லீடர்ஆசிரியர் அருள்பணி. பங்கிராஸ் அவர்களும்அரும்புமாத இதழ்ஆசிரியர்  அருள்பணி. அமிர்தராஜ் சச அவர்களும் கௌரவிக்கப்பட்டனர். தேசிய கீதத்துடன் விழா இனிதே முடிவுற்றது.

அடுத்தநாள் ஆண்டுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் மீண்டும் தலைவராக திரு. இக்னேசியஸ் கொன்சால்வ்ஸ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக முதன்முறையாக அருள்சகோதரி டெசி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக  இந்தியன் கரண்ட்ஸ் ஆங்கில வார இதழின் ஆசிரியர் அருள்பணி. சுரேஷ் அவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தென் இந்திய உறுப்பினர் பிரதிநிதியாகநம் வாழ்வுஆசிரியர் குடந்தை ஞானி அவர்களும் நிறுவன உறுப்பினர்களின் பிரதிநிதியாக நியு லீடர் பத்திரிகையின் ஆசிரியர் அருள்பணி பங்கிராஸ் அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேசிய பத்திரிகையாளர்கள் அனைவரும் சென்னையில் உள்ள முக்கிய வரலாற்று இடங்களைக் கண்டு களித்தனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய கூட்டத்தில் சென்னை கூட்டம் அனைத்து நிலைகளிலும் தனித்துவமிக்கதாக உலகளாவிய தரத்துடன் அமைந்து அனைவரின் பாராட்டையும் பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை அரும்பு மாத இதழின் ஒத்துழைப்புடன்நம் வாழ்வுஆசிரியர் குடந்தை ஞானியும்நியு லீடர்பத்திரிகையின் ஆசிரியர் அருள்பணி. பங்கிராஸ் அவர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர். ‘நம் வாழ்வுதுணை ஆசிரியர் அருள்பணி. ஜான் பால் மற்றும் அலுவலக உடன் உழைப்பாளர்கள் இவ்விழா சிறப்பாக நடைபெற பேருதவி செய்தனர்.

Comment