No icon

எல்லை கடந்த இறையாட்சி பணியில்

“உலகெங்கும் போய் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்”

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்என்ற தமிழ் உணர்வு பெற்றவர்கள் முத்துக்குளித்துறை மறைமாவட்ட மக்கள், உலக வாழ்விலும், உறவு வாழ்விலும், பொருள் வாழ்விலும் நாமும் வாழ வேண்டும், பிறரையும் வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். ஆன்ம வாழ்விலும், அருள் வாழ்விலும் இத்தகைய எண்ணத்தோடு இருப்பார்கள் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தாம் பெற்றுக்கொண்ட இறை நம்பிக்கையை, நற்செய்தியைப் பிறருக்கு அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருப்பவர்கள் என்பதைக் கடந்த கால வரலாற்றுப் பக்கங்கள் சரியாகவே பதிவு செய்துள்ளன.

உலகெங்கும் போய் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” (மத் 28:16, மாற்கு 16:15) எனும் இயேசு ஆண்டவரின் ஆணை ஏற்று பல நிலைகளில் இப்பணியை ஆற்ற சற்றும் தளராமல், தாராளமாக தங்களையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள் இம்மறைமாவட்ட மக்கள். அதுவும் இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம் காட்டிய ஒளியில் அனைத்துலகத் திருஅவைக்கு தம் பிள்ளைகளை, பணியினை, பொருளினை இம்மறைமாவட்டம் மிக்க வலுவுடனே ஆற்றி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1. முதல் தடம் பதித்தவர்

இரண்டாம் உலகப் போர் முடியும் காலத்தில் அருள்முனைவர் மேதகு தாமஸ் பர்னாந்து DD. DCL உரோமையில் முனைவர் பட்டம் படிக்கும் போதே இத்தாலியில் உள்ள இந்திய போராளிகளுக்கு பொறுப்பாளராக (Chaplain) (1940-1944) திருத்தந்தையால் நியமிக்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் உரோமையிலே பேராயர் மொந்தீனி (பின்னாள் திருத்தந்தை புனித 6 ஆம் பவுல்) உடன் இணைந்து அனைத்துலகத் திருஅவைக்கான பணிகளைச் செய்து முதல் தடம் பதித்து வைத்தார். அவரே நம் மறைமாவட்டத்தின் 2 ஆம் ஆயர்.

2. அயல் நாடுகளில் இறைப்பணி

நமது மறைமாவட்டம் தமது குருக்களில் பலரை, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, மலேசியா, ஆஸ்திரேலியா இன்னும் பிற நாடுகளுக்கு குறிப்பிட்ட கால அளவில் பணி செய்ய அனுப்பியுள்ளது, இன்னும் அனுப்பி வருகிறது.

நமது மறைமாவட்டத்தில் பிறந்து வளர்ந்து பல்வேறு துறவற சபைகளில் சேர்ந்து நூற்றுக்கணக்கான துறவற குருக்கள், சகோதரிகள், சகோதரர்கள் அரேபிய நாடுகள், தென்சூடான், கென்யா, பெனின் மால்டா, சிசிலி, பாப்புவா நிம்புகினி, நியுகலடோடையா, பெரு, பொலிவியா, இலங்கை, வியட்நாம், விராங்காய், பிலிப்பைன்ஸ் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் மறைத்தளப் பணியாற்றுவது கண்டு நம் மறைமாவட்ட அன்னை பெருமிதம் கொள்கிறாள்.

3. அயல் நாட்டில் அடைப்பட்ட ஜெபவாழ்வு பணி

இத்தாலி, கியெத்தி மறைமாவட்டத்தில் ஏரல் பங்கிலிருந்து அருட்சகோதரி ஜோஸ்பின், அருட்சகோதரி அல்போன்ஸா அங்குள்ள புனித கிளாரா அடைப்பட்ட மடத்தில் ஜெப அர்ப்பண வாழ்வை 30 ஆண்டுகளுக்கு மேலாக செய்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

4. கரம் கோர்க்கும் தோழமை சகோதரிகளாக

இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் வழிகாட்டலில் நின்று மறைமாவட்டங்களுக்கு இடையே உறவுத்தோழமை, பணித்தோழமை ஏற்படுத்தி அனைத்துலகத் திருஅவை கண்ணோட்டமும், கூட்டுப் பொறுப்பும் கொண்டு செயல்பட விடுக்கப்பட்ட அழைப்பினை நம் தூத்துக்குடி மறைமாவட்டம் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. Twinning/Gemellaggio என்ற இடத்திற்கு இந்த இணைந்த உறவினை ஐரோப்பாவின் மூன்று மறைமாவட்டங்களில் செயல்படுத்தி வருகிறது.

5. a. கியெத்தி - வாஸ்தோ (இத்தாலி)

1940 களில் அருட்தந்தை தாமஸ் பர்னாந்து (பின்னாளில் ஆயர்) அவர்கள் உரோமையில் படித்த காலத்தில் தொடங்கி 1960களில் அருட்தந்தை லாம்பர்ட் மிராண்டா உரோமையில் கற்ற காலத்தில் வளர்ந்து, 1975களில் இந்த மறைமாவட்டத்தோடு உள்ள உறவு புதுப்பிக்கப்பட்டது. நம் மறைமாவட்டத்தைச் சார்ந்த குருமாணவர்கள், அந்த மறைமாவட்டக் குருத்துவக் கல்லூரியில் பயின்று, அங்கே சில ஆண்டுகள் மறைப்பணியாற்ற வாய்ப்பு ஏற்பட்டது. தற்சமயம் நம் மறைமாவட்டத்தைச் சார்ந்த 11 குருக்கள் அங்கு பணியாற்றுகின்றனர். இந்த உறவில் தொடங்கிதான் திருச்சி அன்னாள் சபைக் கன்னியரும் அம்மறைமாவட்டத்தில் பணியாற்றுகின்றனர். நம் மறைமாவட்டத்தில் பணியாற்றுகின்றனர். நம் மறைமாவட்ட இயேசுவின் திருஇருதய சபைச் சகோதரிகளும் கியத்தி - வாஸ்தோ, பெஸ்காரா மறைமாவட்டங்களில் எல்லை கடந்து மறைப்பணியாற்ற நம் மறைமாவட்டம் தூண்டுகிறது.

5. b. பிஸா உயர் மறைமாவட்டம் (இத்தாலி):

2013 ஆம் ஆண்டு முதல் இந்த உயர் மறைமாவட்டத்துடனான பணித்தோழமை ஏற்படுத்தப்பட்டது.

5. c. டிஜோன், பிரான்ஸ்

டிஜோன் எனும் மறைமாவட்டங்களிலும் ஆயர் யுவான் அம்புரோஸ் தோழமை தொடர்ந்து இயங்குகிறது. நம் மறைமாவட்டக் குருக்கள் அங்கு பணியாற்றுகின்றனர்.

5. d. ஜெர்மனி

ஜெர்மனி நாட்டில் மறைமாவட்டத்துடனான தோழமை உருவாயிற்று. நம் மறைமாவட்டக் குருக்கள் இங்கும் பணியாற்றி வருகின்றனர்.

Comment