ஆசிய திரு அவைச் செய்தி
ஆப்கான் அகதிகளுக்கு உரோமையில் புனர்வாழ்வு
ஜூலை 20, வியாழன் அன்று 22 ஆப்கான் அகதிகளை உரோம் நகரில் சான் எஜிதியோ கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு வரவேற்று அவர்களுக்குப் புனர்வாழ்வு வழங்கியுள்ளது. மேலும், 20 ஆப்கான் அகதிகள், பாகிஸ்தான் முகாம்களில் இருந்து விரைவில் உரோம் நகர் வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தாலியின் உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்களின் உதவியுடன் இந்த மனிதாபிமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவர்கள் இத்தாலியின் பல்வேறு மாவட்டங்களில் குடியமர்த்தப்பட்டு முதலில் இத்தாலிய மொழி கற்றுக்கொடுக்கப்படுவர். போராலும், பல்வேறு இடர்ப்பாடுகளாலும் துயர்களை அனுபவித்து, ஏழை நாடுகளில் இருந்து வெளியேறும் அகதிகளுக்கு இத்தாலிய மக்களின் தாராளமான நிதியுதவியுடன் நடத்தப்படும் திட்டத்தின் கீழ், இதுவரை 5400 அகதிகள் இத்தாலிக்குள் அடைக்கலம் தேடியுள்ளனர். இதில் 800 பேர் ஆப்கான் நாட்டவர்.
Comment