No icon

அன்னை வேளாங்கண்ணி

புதிய ஆலய புனிதப்படுத்தும் பெருவிழாவிற்கும் வெள்ளி விழாக் கொண்டாட்டத்திற்கும் கோவை ஆயரின் ஆசியுரை

இந்தக் கோவிலின் முன்னைய மாட்சியைவிடப் பின்னைய மாட்சி மிகுதியாய் இருக்கும்’ என்கிறார் படைகளின் ஆண்டவர். ‘இந்த இடத்தில் நான் நலம் நல்குவேன்’ என்கிறார் படைகளின் ஆண்டவர். - (ஆகாய் 2:9)

அன்புள்ள இறைமக்களுக்கும் ‘நம் வாழ்வு’ வாசகர்களுக்கும்,

கோவை மறைமாவட்ட ஆயரின் வாழ்த்துகளும் வணக்கங்களும்!

கோவை மறைமாவட்டம் பல்லடம் பங்கிலிருந்த பழைய ஆலயத்தின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா ஜூபிலிக் கொண்டாட்டமும், புதிய ஆலய அர்ச்சிப்பு விழாவும் நடைபெறுவதைக் குறித்து நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

கடந்த 25 ஆண்டுகளாக பல நன்மைகளை இறைவனுடைய கரங்களிலிருந்து  நமது ஆரோக்கிய அன்னை நிறைவாய் பெற்றுத் தந்திருக்கிறார். அதற்கு நன்றியாக புதிய ஆலயத்தை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வோம்!

அதேபோல கடந்த 25 ஆண்டுகளும் இறைவன் நமக்கு செய்த அனைத்து நன்மைகளுக்கும் நன்றி சொல்வோம்! புதிய ஆலயத்திலே தொடர்ந்து நமது அன்னையைப் போல இறைவனுக்கு விசுவாசமுள்ள சீடர்களாக வாழ முயற்சி எடுப்போம்! 

இந்த வேளையிலே இந்த ஆலயம் நல்ல முறையில் அமைய உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது இறை ஆசீர்! பங்குத்தந்தைக்கும் பங்குத்தந்தையோடு இணைந்து செயல்பட்ட அனைத்து இறைமக்களுக்கும் வாழ்த்துகள்! அனைத்து மக்களுக்கும் இறைவனுடைய ஆசீரும் அன்னையின் பரிந்துரையும் என்றும் நிறைவாய் இருப்பதாக !

என்றும் இறைபணியில்

மேதகு ஆயர் L. தாமஸ் அக்வினாஸ் D.D.,D.C.L.

 

‘நம் வாழ்வு’ வார இதழின் சார்பாக, பல்லடம் - செட்டிப்பாளையம் ரோடு அன்னை வேளாங்கண்ணி புதிய ஆலயம் புனிதப்படுத்தும் பெருவிழாவிற்கு, சிறப்பிதழ் வெளிவர உதவிய கோவை மறைமாவட்ட ஆயர், முதன்மை குரு, பங்குத்தந்தை மற்றும் அனைத்து விளம்பரதாரர்களுக்கும் கோவை மாவட்ட ‘நம் வாழ்வு’ பொறுப்பாளருக்கும் என் மனமார்ந்த நன்றி. அருள் விளங்கும் தலமாக அன்னை வேளாங்கண்ணி ஆலயம் விளங்க வாழ்த்துகிறேன்!. நன்றி!! - குடந்தை ஞானி.

Comment