No icon

தமிழர் திருநாள் வாழ்த்துகள்

மகிழ்ச்சியூட்டும் மண்கல(ங்கள)ப் பொங்கல்!!

கனியரும் பயன்

புதுமண் பானை, புத்தரிசி-நெய்-பால் இஞ்சி, ஏலம், மஞ்சள், முந்திரி, திராட்சை என, பழவகைகள், மணக்கும் - செங்கரும்பின் சிதறும் தோகை கற்பகத்தரு பனையின் ஓலையும், பனை மட்டையும் பொங்கல் வைக்க உதவும் எரிபொருள். பனையின் கருப்பட்டியே சுவையூட்டும் அரும் பொருள். பனை ஓலையால் பால்பொங்கும், அதன் பின் பனை மட்டையே பொங்கவைக்கும் எரிபொருள். இன்று மண் (பூமி) தாயின் பானையும் இல்லை- இயற்கையின் எரிபொருளும் இல்லை. மண்கல(ங்கள்) பொங்கலா, அது வெண்கல பாத்திரப் பொங்கல்.

நகரில் இருந்தாலும் கிராமத்தில் வாழ்ந்தாலும் சரி, நம் தேசத்தின் நம் தமிழனின் ஆதரிசன சக்தி உழவு. வேளாண்மையும் அது சார்ந்த தொழில்களுமே. அதனைப் பேணி வளர்க்கவே பொங்கல் விழாக் கொண்டாடப் படுகிறது. அதற்குரிய கால்நடைகளைப் பேணுவதும், போற்றுவதும் தமிழன் சிறப்பு. “மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாள்இறுதிநாள் போகிப்பண்டிகை”. பரங்கி, பூசணி போன்ற தாவரங்களில் பிஞ்சுடன் சேர்ந்தே பூ மலரும். கன்னிமையும் தாய்மையும் பூவும் கனியும் இணைந்து இருப்பது போல் (“கன்னிமரியும் அவள் தாய்மையும்) இணைந்து இருந்தது. இதை திருக்காவலூர் கலம்பகம்கனியரும் பயனொடு கலந்த பூவினை நனியருள கன்னியும் தாயுமாயினைஎன்று பாடும். ஆம், மார்கழித்திங்கள் முழுதும் நோன்பிருக்கும் பெண்கள் வீட்டில் கோலமிட்டு, பூசணிப் பூவை சாணத்தில் பிடித்து, முன் வாசலில் வைப்பர். வேறு பூவினை வையார். காரணம் தாய்மையின்தாய்மையின்சிறப்பு கருதி இப்படி மார்கழி மாதம் வைத்து, சேர்த்த அவற்றை மார்கழி இறுதிநாளில் எரித்து விடுவர். அத்துடன் வீட்டினைத் தூய்மை செய்து, அழுக்கினை போக்கி (போகி) நாள் என்பர். மார்கழி நோன்பு நற்கணவனை அடைதல் குறித்தே. “தை பிறந்தால் வழி பிறக்கும்இயற்கைக்கு நன்றி பொதுவான சூரியனை வழிபடுவர். சூரிய பூமிக்கோளத்தின் வடபகுதிக்கு பயணமாவதை உத்தராயணம் என்பர். மகராசிக்கு பெயரும் மகரசங்கராந்தி என்றுபொங்கல்வைத்து மகிழ்வர். மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் தெரிந்ததே நமக்கு.

பொங்கல்

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. கூட்டுக் குடும்பம் தொலைத்துவிட்டு தொலைக்காட்சியில், திரையில் (சின்னத்) மூழ்கிடும் இக்காலத்தில்சுற்றத்தின் அழகு சூழ இருத்தல்” (ஒளவை) வேண்டும். குடும்பம் குடும்பமாக அம்மா-அப்பா, தாத்தா-பாட்டி, அண்ணன்-அண்ணி, அக்காள்-தங்கை, பேரன்-பேத்தி இதுபோன்ற 21 வகை உறவுகள் மகிழ்ந்து இருந்து, கொண்டாடும் பொங்கல் தோழமைப்பொங்கல். முதியோர் மட்டும் வீட்டில் (முதியோர் இல்லத்தில்) பிள்ளைகள் ஓரிடம், பேரப்பிள்ளைகள் ஓரிடம் இப்படி வாழ்ந்தால் தோழமை உறவுப் பொங்கல் இனிக்குமா?

இல்லற வாழ்வில் முதன்முதல் அடியெடுத்து வைத்த தம்பதியர் முதலாம் ஆண்டு பொங்கல் நாளில், மகள் பிறந்த இடத்திலிருந்து, மகள் புகுந்த வீட்டுக்குதலைச்சீர்பழவகை, கனிவகை, பொங்கல் இடவேண்டிய அனைத்துப்பொருள், தங்க, வெள்ளி, செம்பு பாத்திரம், செங்கரும்புக் கட்டுடன் உறவுகள் சூழ சென்று கொண்டாடும் தலை(சீர்) பொங்கலே இனிது.

மணமாகா கன்னிப் பெண்கள் நல்வரன் வேண்டி, நோன்பு இருந்தவர்கள், காதல் இனியர், காதல் இனியள் போல வேட்டி, சேலை அணிந்து, காதல் கதை, பாட்டு, ஆட்டம்-பாட்டம், கும்மி என பொங்கலிட்டு, மலைச்சாரல், ஆற்றுப்படுகை, குளத்துக்கரையில் கொண்டாடும் பொங்கல் காதல் பொங்கல், கன்னியர் பொங்கல்.

வேளாண்மைத் தொழிலில் நண்பர் காளைகள்- பசுக்கள் - கால் நடைகள், சேவல்கள் அவைகளைக் குளிப்பாட்டி, அழகுசீர்படுத்திகோமாதா எம் குலமாதாபுகழ்பாடி, திடல், மைதானத்துக்கு அழைத்துச் சென்று, அவற்றின் கழுத்தில் வேட்டி, துண்டு, பரிசு பொருள் கட்டி, கொம்பூத, சங்கொலிக்க குரவை ஒலி எழுப்ப, மாடுகளை மொத்தமாக (தனித்தனி) அவிழ்த்து விடுவது மாட்டுப்பொங்கல். இந்த மாட்டுப் பொங்கல் பெரும்பாலும் தை மாதம் 2 ஆம் நாளில் நடைபெறும். ஆனாலும், தமிழ்மண் கலாச்சாரம்ஜல்லிக்கட்டு ஒரு மல்லுகட்டுவீரத்தின் விளைநிலம் தமிழ்மண் என்பதனைக் காட்ட 3 வகையாக நடத்தப்பெறும். “ஏறுதழுவுதல்தமிழ் இலக்கியங்களில் நிறையக் காணலாம். காளைகளை ஒரு, பல தொழுவத்து நிறுத்தி, வாடிவாசல் வழியாக காளைகளை திறந்து அவிழ்த்து விடப்படும். சீறிஎழும் காளையை ஒரு வீரர் மட்டுமே தாவி அதன் திமிலைப் பிடித்து இருகைகோர்த்து, குறிப்பிட்ட தூரம் சென்று விடுவர். அவரே வெற்றியாளர். பரிசு உண்டு - இது வாடி மஞ்சுவிரட்டு (ஜல்லிக்கட்டு). திறந்த பொட்டல், மைதானவெளியில் காளையின் மூக்கணாங்கயிறு உருவி விட்டு, எத்திசை நோக்கினும் பாயவிடுவர் - வீரர்கள் யாரேனும் ஒருவர் அதை பிடித்து, அடக்க வேண்டும். இதுவே வேலி மஞ்சு விரட்டு என்பர். வடம் என்பது கயிறு - 15(20) மீட்டர் நீளமுள்ளது. காளையின் கழுத்தில் கட்டி வட்டமாக, விட்டமாக நின்று 6(7) பேர் கொண்ட குழு அணியினர் அக்காளையை குறிப்பிட்ட நேரத்துக்குள் கட்டுப்படுத்த வேண்டும். இதுவே வட மாடு மஞ்சு விரட்டு என்பர். பொங்கல் நாட்களில்சேவற் சண்டை பொங்கல்நடைபெறும். ஜஸ்வந்த்சிங் பஞ்சாபியர் பன்மொழி வித்தகர். திருக்குறள்பால் அளவற்ற பற்றாளர். குறள் பாக்கள் 1330-ஐயிணையும் ஓலை சுவடிக்குள் பொறித்து (எழுத்தாணி கொண்டு) பொங்கல் அடுத்து வரும் திருவள்ளுவர் நாளன்று வள்ளுவருக்கு அர்ப்பணித்து, ஓலைச்சுவடி பொங்கல் கொண்டாடினார் (ஆதாரம் 14.1.2021- தினத்தந்தி).

விளையாட்டுகள்: 50 (60) 100 கிலோ கல்லினை ஒருவராக நெஞ்சுக்குமேல் தூக்கி விடும் இளவட்டக்கல் வீரர்; வழுக்கு கம்பு, மரம் இவற்றில் ஏறி நுனி தொடும் வீரர், அதுபோல் சருக்கு மரம் ஏறும் வீரர், பானை உடைத்தல் போன்ற வீர விளையாட்டுக்கள் பொங்கலன்று புதுமைகாட்டும் கிராமங்கள், நகரத்து தொலைக்காட்சியில் சிறைபிடிக்கப்பட்டு உள்ளன. கிராமங்களும் அடிமையாகி, பக்கத்தூர் விழாக்களில் ஆளில்லை.

இலக்கியப் பொங்கல்

தமிழ் இலக்கியங்கள் பொங்கல் விழா, தை நீராடல் ஏறுதழுவுதல், நெல், கரும்பு பற்றி பேசும் இடங்கள் பல உண்டு.

நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க, விளைக வயலே வருக இரவலர்

பால்பல ஊறுக பகடுபல சிறக்க" - ஓரம்போகியார் (ஐங்குறுநூறு)

பொலிக பொலிக போயிற்று வல்லுயிர் சாப நலியும் நாகமும்

நைந்த நமனுகிங் கியாதேறுமின்னே” - நம்மாழ்வார்

கள் ஆர் உவகைக் கலிமகிழ் உழவர் காஞ்சி அம் குறுந்தறி குத்தி, தீம்சுவை மென்கழைக் கரும்பின் நன் பல மிடைத்து பெருஞ்செய் நெல்லின் பாசவல் பொத்தி" (அகழ் நக்கீரர்)

கொல்லேற்று கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள்” (கலித்தொகை)

வயலே நெல்லின் வேலி, நீடிய கரும்பின் பின்பாத்தி பன் மலர் பூத்த” (அகம், கோவூர்கிழார்)

சீர் சான்ற உயர் நெல்லின் ஊர்கொண்ட உயர் கெற்றவர்” (மதுரை காஞ்சி)

நெல்லின் முத்தூறுதந்த கொற்ற” (புற நானூறு)

மதுக்குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செந்தீப் புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்" - சீவகசிந்தாமணி

தைத் திங்கள் தண்கயம் படியும்” (நற்றிணை), “நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும் தைஇத் தண்கயம் போல” (ஐங்குறுநூறு) தைத்திங்கள் தண்ணியம் தரினும் (நற்றிணை) “தையில் நிராடி தலைப் படு வாயோ” (கலித் தொகை) இங்கனம் பொங்கல் மாட்சி - தை நீராடலின் மாண்பு, நெல்லின் உயர்வு - தமிழ் நூல் காட்டுவன படித்துப் பாருங்கள். பழமொழிகள் பண்பாட்டு மரபுகள், தொன்மை சீர்வளங்கள், விழாவின் மேன்மை, குடும்ப உறவுகள் என பல பொங்கல் விழா தரும் மங்களங்கள்.

நற்செய்தி காட்டும் பொங்கல்

ஈசாக்கு அவன் நாட்டில் பயிரிட்டு, வேலைசெய்து அந்த வருடம் நூறு மடங்கு அறுவடை செய்தான். அந்த நாளில் மக்கள் தம் வயலில் உழவு செய்து வாழ்ந்தனர்

ரெபேக்கா அவள் தோழியர் ஒட்டகத்தில் பயணித்து தொழிலாளிகளுடன் வயல் காட்டில் வேலைசெய்தாள்” (தொநூ 24:60) தொடக்க நூலில் உழவு - கால்நடை வளர்ப்பு, சேமித்தல், உணவின் பழக்கம், வழக்கம் பற்றிய பல செய்திகள் உண்டு. “மிருகங்கள் பலியிடல்” (தொநூ 46:1) செய்திகளும் உண்டு.

அறுவடை திருவிழா - அது நன்றியின் விழா - மோசே காலத்திலே உருவானது. இன்று, உலக நாடுகளில் குறிப்பாக, தமிழர் வாழும் 113 நாடுகளில் சிறப்பாக பொங்கல் விழா என்ற பெயரில் நடைபெறுகிறது. இதிலிருந்து கி.பிக்கு முன்பு பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது என அறியலாம்.

நீ வயலில் விதைத்து உன் பயிர் வேலைகளின் முதற்பலனை... செலுத்துகிற அறுப்பு கால பண்டிகையை அனுசரிப்பாய்தொநூ கூற்று. “பூமியின் பயிர் முதிர்ந்து அறுக்கிற காலம் வந்தது”. புளியாத அப்பத் திருவிழா எனப்படும் பாஸ்கு விழா அறுவடை செய்த பார்லி கதிர்களை யாவே கடவுளுக்கு காணிக்கையாக்குவது (லேவி 23:1-14). வாரங்களின் விழா என்ற பெந்தகோஸ்து விழா விளைந்த கோதுமை அறுவடை திருவிழா. சுடப்பட்ட இரு கோதுமை அப்பங்களை சுட்டு கடவுளுக்கு காணிக்கையாக்குதல் (லேவி 23:22, எண் 23:26, இணை 6:10). * கூடாரத் திருவிழா எனப்படும் விவசாய விழா எனப்படும் திராட்சைப்பழ அறுவடை விழா. பேரிச்ச ஓலை, செடி, தளிர், மலர் இலைகளை ஆண்டவர்க்கு படைப்பது. ஏழு நாள் விழா வெளியில் (கொட்டகை) கூடாரம் அமைத்து தங்கி கொண்டாடப்படுவது. (லேவி 20:40, 23:33-36, 39:43, இணை 16:13, 31:10). இந்த விழா தமிழர் விழா. விழாவில் பொங்கல் வைக்கும்போது வைக்கும் பூங்கொத்து (பல

மூலிகை செடி, கூரைப்பூ என்ற பீளைப்பூ, வேப்பிலை, மாவிலை, வாழையிலை, ஆவாரைப்பூ, பிரண்டை, தும்பை என்ற கூரைப்பூங்கொத்து வைப்பர். அத்தனையும் நோய் போக்கும் தாவரங்கள் - நினைவு கொள்க. பனை ஓலை, பனை மட்டை, தேங்காய் கொட்டாங்குச்சியுடன் இணைத்த பனை மட்டையுடன் கூடிய அகப்பை தான் பயன்படுத்துவர். இன்று ஈய, பித்தளைக் கரண்டிதான் இன்று பயன் பாட்டில் உள்ளது தெரிக. செயற்கையின் வடிவம் இன்று.

தன்வயமான பொங்கல்

கிறித்தவம் தான் மறைப்பணியில் சென்றடைந்த நாட்டின், மக்களின் தனிப்பட்ட சிறந்த இயல்புக்கு ஏற்றவாறு அவர்கள் ஏற்று அவர்தம் ஞான வாழ்வு ஆக உருமாறும். இயேசு பெருமான் நிகழ்த்திய மறை உண்மைகள் ஏற்ற இடத்தில், பல நாடுகளில் ஒவ்வொருவரிடமும் நிகழ்தல் வேண்டும். இதுதான் "தழுவியமைத்தல்" என்பர். இக்கொள்கை இராபர்ட் தே நோபிலி அவர்கள் இப்பண்பாட்டு உருவாதம் என்பதை தமிழ் மண்ணில் புகுத்தினார். பல எதிர்ப்புகளை சந்தித்தார். அது வரலாறு. அப்படி உருவாக்கியது தான் கிறித்தவர் பொங்கலிடுவது ஆகும். கத்தோலிக்க கிறித்தவர் பிறப்பால் மொழியால், உணர்வால் தமிழன்தான்.தன்னுடன் வாழும் பிறசமயத்தினர் இயற்கையை வழிபட்டு, நன்றி கூறவும், அறுவடையின் பலன் நன்றி செலுத்தவும், திருமறை நற்செய்தியே அறுவடை திருவிழாக் கொண்டாடியதால் திருமறையினர் பொங்கல் வைக்க நோபிலி வலியுறுத்தினார். 375 ஆண்டுகளுக்கு முன் தே நோபிலி தம் சபை தலைவர் பணி. ஆல்பர்ட் லெயர் சியோவுக்கு கடிதம் எழுதியுள்ளார். வருட துவக்கத்தில் இந்து சமய சகோதரர்கள் பொங்கல் என்ற ஆடம்பர விழாவைக் கொண்டாடி, தம் தெய்வங்களுக்குப் படைக்கின்றனர். அவர்தம் தெய்வ உருவத்து முன் புதிய பொங்கலைப் படைக்கின்றனர். புதிய (நெல்) அரிசி, பால், நெய் கலந்து பொங்குகின்றனர். ஆகவே, கிறிஸ்தவர்களும் அது மாதிரி நடத்தவில்லை எனில் அது இழிவாகலாம் எனக்கருதிசிலுவையை நட்டு அதன் முன் பொங்கல் வைக்க அனுமதித்து நான் கூறி உள்ளேன். பொங்கலிடும் அரிசி, பிற பொருட்களை நானே மந்திரித்து கொடுக்கிறேன். மக்கள் மனமகிழ்ந்து உள்ளனர்” (சுமார் 70 ஆண்டுகளுக்கு முன், இன்றும் ஒருசிலர் ஊர்க்கோயில் தீர்த்தம் ஊற்றித்தான் பொங்கல் வைப்பர்). சிலுவையை நட்டு வைக்காத வீட்டில் பொங்கல் பொங்கவில்லை என்றும் மற்று இருவர் சிலுவை நட்டு பொங்கலிட பால் பொங்கிற்று என்ற செய்தியை கூறுகிறார். அமரர் சொல்லின் செல்வர் மரிய அருள் தம்புராசு (நம் வாழ்வு - முதல் ஆசிரியர்) தம் தலையங்க கடிதம் ஒன்றில் (ஆதாரம் நம் வாழ்வு).

வன. அந்தோனியார் பொங்கல்

இம்மண்ணில் நோபிலிக்குப்பின் பணிசெய்த வீரமா முனிவர் தொட்டு பல நூறு மறைப் பணியாளர்கள் பணி செய்தனர். ஜனவரி 17 ஆம் நாள் வன. அந்தோனியார் விழா வரும். அவர் இயற்கை ஆர்வலர், வனவாசி, கால்நடைகளின் பாதுகாவலர். எனவே, நம்முடன் வாழும் பிற சகோதர சமயத்தார் தைப்பொங்கலினை சூரியக்கடவுளைப் போற்றி வைப்பதால், நாம் வன. அந்தோனியார் நாளன்று பொங்கல் வைக்கும் பழக்கத்தைப் புகுத்தினர். நம் கிறிஸ்தவர்கள் அதை ஏற்று இன்றுவரை (ஒருசில ஊர்களில்) கொண்டாடி வருகின்றனர். தை 4 ஆம் இரவு பொங்கல், 5 ஆம் நாள் மாட்டுப்பொங்கல் என கொண்டாடுகின்றனர். “சிவகங்கை மறைமாவட்டத்தில் பல ஊர்கள் வன.அந்தோனியார் பொங்கலிட்டு, மஞ்சு விரட்டும், கன்று பட்டி (சாத்தரசன்பட்டி பங்கு) மாபெரும் ஜல்லிக்கட்டும் இன்றும் உண்டு. விருந்தோம்பு பண்பு சிகரம் அவ்வூர்.

நாமும் தமிழரே

சமய, சமூக நல்லிணக்கம் ஒருமைப்பாடு, உணர்வு மேலோங்கியதால் இன்று தமிழன் என்ற உணர்வு பொங்கி எழ, கிறிஸ்தவர்களும் தமிழரே! தமிழர் திருநாள் தைத்திங்கள் முதல்நாள் அன்று பல இடங்களில் ஊர்களில் பொங்கலிடல், மாட்டுப்பொங்கல், மஞ்சு விரட்டு, அருள்பணியாளர்களின் உந்துதலுடன் கிறித்தவ சமய எழுச்சியுடன் திருப்பலி - பொங்கல் அர்ச்சிப்பு என நடைபெறுகிறது. பங்கு ஆலயத்திலும்பொங்கல்சிறப்புற நடக்கிறது - இது போக, போஸ்கோ மையம் பங்கு பள்ளியத்தம்மம் கிராமத்தில் மூன்று ராசாக்கள் விழாவில் பொங்கல் 1000 கணக்கில் வைத்து நன்றி செய்தனர். (இன்று குறைவு). கால வளர்ச்சி, நம்பிக்கை எழுச்சி, நன்றி காணிக்கையாக, காது குத்து, பிள்ளைப் பேறு, கேட்டது பெற்றமை போன்றவர்க்கு (நாட்டார் சமயம்) நம் பிற சகோதரர்கள் சிறு தெய்வ வழிபாடுகளில் பொங்கல் வைப்பது போல், நம் கத்தோலிக்க கிறித்தவர்கள் நம் புனிதர்கள் திருக்கோயில்களில் பொங்கல் (பிற நாட்களில்) வைத்து நன்றி கூறுகின்றனர். அது வளர்ச்சி.

திருத்தந்தையர்கள் 6 ஆம் சின்னப்பர், 2 ஆம் அருள் சின்னப்பர், 1988 பிலிப்பன்ஸ் ஆயர்கள் மன்ற முடிவு - புரட்சித்திருத்தந்தை இந்நாள் பிரான்சிஸ் - அவர்கள் காட்டும் இயற்கையைப் பாதுகாப்போம் - நன்றி காட்டுவோம் என்ற கொள்கைக்கு பொங்கல் விழா ஒரு மாபெரும் கொடை - கொண்டாடுவோம்.

Comment