‘கடவுளின் மக்களுக்கு’ ஆயர்கள் மாநாட்டின் 16-வது சாதாரண முதல் பொது அமர்வின் கடிதம்
16-வது ஆயர் மாநாட்டின் முதல் பொது அமர்வின் செயல்பாடுகள் நிறைவடையும் இந்நேரத்தில், இந்த அழகிய வளமூட்டும் அனுபவத்தில் நாம் வாழ்ந்ததை முன்னிட்டு, உங்கள் அனைவரோடும் இணைந்து கடவுளுக்கு நன்றி கூற விழைகின்றோம். இந்த ஆசீர்மிகு காலத்தை உங்களுடன் ஆழ்ந்திணைந்து வாழ்ந்தோம். உங்களது எதிர்பார்ப்புகள், கேள்விகள் மற்றும் பயங்கள் யாவற்றையும் பெற்றுள்ளோம். இரண்டு வருடங்களுக்கு முன் திருத்தந்தை பிரான்சிஸின் வேண்டுதலின் விளைவாக, தூய ஆவியாரின் வழிநடத்துதலில் ஒருவர் கூட விடுபடாமல், இறைமக்கள் அனைவரும் ‘இணைந்து பயணிக்க’ செவிசாய்த்தல் மற்றும் பகுத்தறிதல், உடனிணைந்த நீடிய செயல்முறைத் திட்டம் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் நற்செய்திப் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.
உரோம் நகரில் செப்டம்பர் 30-ஆம் நாள் முதல் நாம் கூடி வந்த அமர்வு இந்தச் செயல்முறையின் முக்கியக் கட்டம். பல வழிகளில் இது முன்பு எப்போதும் இல்லாத புதியதோர் அனுபவமாக அமைந்துள்ளது. திருத்தந்தை பிரான்சிஸின் அழைப்பிற்கிணங்கி முதன்முறையாக, ஆண்களும்- பெண்களும் தம் திருமுழுக்கின் வழியாகப் பெற்றிருக்கும் தகுதியை முன்னிட்டு, ஆயர்களின் மாமன்றத்துடன் ஒன்றாக அமர்ந்து மட்டுமன்றி, அவர்களோடு இணைந்து தேர்தல் செயல்முறைகளிலும் பங்குகொள்ள அழைக்கப்பட்டிருந்தனர்.
நமது இருவகை அழைப்பின் ஒற்றுமை நிறைவிலும், நமது தனிவரம் மற்றும் பணி செயல்பாடுகளிலும் நாம் இறைவார்த்தைக்கும், பிறரது அனுபவங்களுக்கும் இணைந்து செவிமடுத்துள்ளோம். தூய ஆவியாரில் உரையாடுதல் என்ற முறையில் நாம் உலகின் அனைத்துக் கண்டங்களிலும் உள்ள சமூகங்களின் செல்வத்தையும், வறுமையையும் பகிர்ந்து, தூய ஆவியார் இன்றைய திரு அவைக்கு எடுத்துச் சொல்வதை ஆய்ந்தறிய முயன்றோம். இவ்வாறு நாம் மேற்கு (இலத்தீன்) மரபு மற்றும் கீழ்த்திசை கிறிஸ்தவ மரபுகளுக்கு இடையே உள்ள பரஸ்பரப் பரிமாற்றங்களின் சிறப்பினை உணர்ந்தோம். மற்ற பல திரு அவைகள் மற்றும் துறவற சபைகளிலிருந்து பங்கு கொண்ட சகோதர- சகோதரியரின் பங்களிப்பு நம் உரையாடல்களுக்கு ஆழமான வளமளித்தது.
சிலர் போர் நடக்கும் நாடுகளிலிருந்து வந்து பங்குகொண்டதன் முக்கியக் காரணத்தால், நமது ஒன்றுகூடலில் இன்றைய சிக்கல்கள் நிறைந்த உலகின் காயங்களுக்கும், முறையற்ற ஏற்றத்தாழ்வுகளுக்கும் இடையே, நம் இதயங்கள் நம் பணிகளில் ஒருவித ஈர்ப்பை உண்டாக்கியது. கொடிய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் செபம் செய்தோம். துன்பத்தாலும், ஊழலாலும் கட்டாயப்பட்டு இடம்பெயர்ந்து, அபாயகரமான பாதையில் செல்பவர்களுக்கு நாம் அளிக்கும் நம் உறுதியையும், உடனிருப்பையும் வாக்களித்தோம்.
திருத்தந்தையின் அழைப்பினை முன்னிட்டு, நம்மிடையே பரஸ்பரச் செவிமடுத்தலையும், தூய ஆவியாரின் ஆழ்ந்த உறவை நாடியும் நாம் அமைதிக்கு வேண்டிய இடம் அளித்தோம். துவக்கத்தில் பல்சமயத் திருவிழிப்பின்போது சிலுவையில் பாடுபட்ட கிறிஸ்துவைத் தியானிக்கையில், ஒற்றுமையை முன்னிட்டு நம் தாகம் மேலோங்குவதை நாம் உணர்ந்தோம். “அவர்கள் ஒன்றாய் இருக்கும்படி...” (யோவா 17:21) தம்மையே உலகின் மீட்புக்காகக் கையளித்து, தம் சீடர்களைத் தந்தையிடம் ஒப்படைத்த அவருடைய ஆட்சி சிம்மாசனம், உண்மையில் அந்தச் சிலுவையே. இவ்வுலகமும், அதன் ஏழைகளும் எழுப்பும் அழுகுரலுக்குச் செவி சாய்ப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நம் பணியின் தொடக்கத்தில் திருத்தந்தை நமக்கு நினைவூட்டியதைத் தொடர்ந்து, “கிறிஸ்துவின் உயிர்ப்பு நமக்கு அளித்த எதிர்நோக்கில் உறுதியாய் ஒன்றிணைந்து, நமது பொது வீடாகிய உலகை அவரிடமே ஒப்படைத்தோம் - ‘Laudate Deum!’ (‘கடவுளுக்கே புகழ்!’).
ஒவ்வொரு நாளும், மேய்ப்பு மற்றும் நற்செய்திப் பணிகளில் மாற்றங்களின் தேவை ஆழமாக இருந்ததை உணர்ந்தோம். ஏனெனில், நற்செய்தியை அறிவிப்பதில் தன்னையே மையப்படுத்த அல்ல; மாறாக, இவ்வுலகின் மேல் அன்பு கொண்ட கடவுளின் அளவில்லா அன்பிற்கு (காண்க. யோவா 3:16) பணிவிடை செய்வதற்கே தன்னைக் கையளிக்கத் திரு அவை அழைப்புப் பெற்றிருக்கின்றது. புனித பேதுரு சதுக்கத்தின் அருகில் வீடற்று இருந்தோரிடம், மாமன்றத்தின் போது திரு அவையிடமிருந்து தாங்கள் எதிர்பார்ப்பது என்னவென்ற கேள்விக்கு அவர்கள் அளித்த பதில்: ‘அன்பு!’
நம் ஒன்றுகூடலின் நடுப்பகுதியில், அக்டோபர் 15 அன்று குழந்தை இயேசுவின் புனித தெரேசாவின் பதிவைத் திருத்தந்தை நினைவுபடுத்தியதற்கு ஏற்ப, இந்த மூவொரு இறை அன்பும், நற்கருணை அன்பும் வேறுபாடுகள், ஆவல்கள் மற்றும் வினாக்கள் ஆகியவற்றைச் சுதந்திரமாகவும், தாழ்ச்சியுடனும் தயங்காமல் வெளிப்படுத்த ‘நம்பிக்கையே’ நாம் அனுபவிக்கும் தைரியத்தையும், உள்சுதந்திரத்தையும் தருகின்றது.
மேலும், இப்பொழுது என்ன? அக்டோபர் 2024 இல் நிகழவிருக்கும் இரண்டாம் அமர்வை முன் நோக்கியிருக்கும் இம்மாதங்கள், ‘மாமன்றம்’ என்ற சொல் குறிக்கும் சுறுசுறுப்பும், ஒன்றிய நற்செய்திப் பணி ஆர்வமும் அனைவரையும் உறுதியுடன் பங்களிக்க வைக்கும் என்று நாம் நம்புகிறோம். இது சித்தாந்தம் (சிந்தனையியல்) பற்றியதல்ல; மாறாக, இது திருத்தூதர் மரபில் வேரூன்றிய ஓர் அனுபவம். இச்செயல்முறையின் தொடக்கத்தில் திருத்தந்தை நமக்கு நினைவுபடுத்தியது போல, “ஒவ்வொருவரிடமும், அனைவரிடமும் உண்மையான ஈடுபாட்டைத் தூண்டும் ஒன்றிய மாமன்றத் தன்மையின் உறுதியை வெளிப்படுத்தும் திரு அவையின் செயல்பாடுகளை நாம் பயிற்றுவித்தாலன்றி, ஒற்றுமையும், பணியும் ஏதோ புலப்படாதவைகளாகும் அபாயமாக அமைந்துவிடும்” (அக்டோபர் 9,2021). இதில் பல சவால்களும், எண்ணற்றக் கேள்விகளும் உள்ளன. முதல் அமர்வின் தொகுப்பு அறிக்கை, நாம் மேற்கொண்ட உடன்பாடுகளைக் குறிப்பிட்டு, வினாக்களைக் கோடிட்டு, நம் பணி எவ்வாறு தொடரும் என்பதைச் சுட்டிக்காட்டும்.
தனது தெளிவுகளில் முன்னேற, ஏழைகள் முதல் அனைவருக்கும் கவனமாகச் செவிசாய்ப்பது திரு அவையின் முழுமையான தேவை. இதில் அதன் சார்பாக ஒரு மனமாற்றத்தின் பாதை தேவைப்படுகிறது. இது ஒரு புகழ்ச்சியின் பாதையும்கூட. “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகின்றேன். ஏனெனில், ஞானிகளுக்கும், அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்” (லூக் 10:21). அதாவது, சமூகத்தில் பேச்சுரிமை அளிக்கப்படாதவர்களுக்கும், திரு அவையால் கூட தன்னைப் புறக்கணிக்கப்பட்டவர்கள் என்று உணர்பவர்களுக்கும் காது கொடுத்துக் கவனிப்பது; பல வடிவங்களில் செயல்படும் இனவெறியினால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செவியளிப்பது. குறிப்பாகப் பழங்குடியினரின் கலாச்சாரங்கள் தூற்றப்படும் சில பகுதிகளில், அனைத்திற்கும் மேலாக, இன்றைய திரு அவை மனமாற்றத்தின் மனநிலையில், அதன் உறுப்பினர்களால் தவறிழைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் செவிமடுக்கவும், மீண்டும் இது போன்று நிகழாமல் இருக்க உறுதியான அமைப்புகளை எழுப்பவும் கடமைப்பட்டிருக்கிறது.
தம் திருமுழுக்கின் அழைப்பின் வழியாகப் புனிதத்திற்கு அழைக்கப்பட்ட பொதுநிலையினர் பெண்கள், ஆண்கள் ஆகிய அனைவருக்கும் திரு அவை செவிசாய்க்க வேண்டும். பல நிலைகளில் நற்செய்தியை முதன்முறையாக அறிவிக்கும் மறைபோதகர்களின் சான்றுக்கும், குழந்தைகளின் எளிமை மற்றும் சுறுசுறுப்புக்கும், இளைஞர்களின் உற்சாகத்திற்கும், அவர்களது கேள்விகளுக்கும், முறையீடுகளுக்கும், வயது முதிர்ந்தோரின் கனவுகளுக்கும், ஞானம் மற்றும் ஞாபகத்திறனுக்கும் செவிகொடுக்க வேண்டும். குடும்பங்களுக்கும், அவர்களது கல்வி சார்ந்த கவலைகள் மற்றும் இன்றைய உலகிற்கு அவர்கள் அளிக்கும் கிறிஸ்தவச் சான்றிற்கும் திரு அவை செவிகொடுக்க வேண்டும். பொதுப்பணிகளில் ஈடுபடவும், ஆய்ந்து தெளிதல் மற்றும் நிர்வாக அமைப்புகளில் பங்களிக்கவும் விரும்புபவர்களின் குரலைத் திரு அவை வரவழைக்க வேண்டும்.
மாமன்றத்தின் தெளிவுகளில் தொடர்ந்து முன்னேற, திருநிலைப் பெற்ற பணியாளர்களின் வார்த்தைகளையும், அனுபவங்களையும் ஒன்று சேர்க்கத் திரு அவை குறிப்பாயிருக்க வேண்டும். அருள்பொழிவு பணி பெற்று திரு அவையாகிய உடலனைத்தின் வாழ்வுக்கு இன்றியமையாத ஆயர்களின் முதன்மை உடன்பணியாளர்களாய் இருக்கும் குருக்கள், மிகவும் தாழ்த்தப்பட்டவர்களின் திரு அவை அனைத்தின் பராமரிப்பைத் தன் பணி வழியாகக் குறித்துக் காட்டும் திருத்தொண்டர்கள், துறவற வாழ்வைத் தழுவியோரின் குரலாக வரும் இறைவார்த்தை வழியாகத் திரு அவை தனக்கே கேள்விகள் எழுப்ப வேண்டும். இது தூய ஆவியாரின் அழைப்பின் ஒப்பற்ற காவல். தாய்த் திரு அவையானவள் தன் நம்பிக்கையில் பங்குகொள்ளாதோராயினும், உண்மையை நாடுபவர்களாக, ‘உயிர்ப்பின் மறைபொருளோடு இணைந்திருக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் தூய ஆவியார்’ (மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை: Gaudium et Secs 22, 5) செயல்படுபவர்களாக இருப்பவர்களுக்கும் நுட்பமான கவனம் செலுத்த வேண்டும்.
“நாம் வாழும் இவ்வுலகம், அதன் முரண்பாடுகளிலும், நாம் அன்பும், பணிவிடையும் செய்ய அழைக்கப்பட்டிருக்கும் இவ்வுலகம், அதன் பணிகள் அனைத்திலும் திரு அவை அதற்குத் துணை நிற்க விரும்புகிறது. மூன்றாம் பொற்காலத்தின் திரு அவையிடமிருந்து கடவுள் விரும்பும் மாமன்ற முறை பாதையும் இதுவே” (திருத்தந்தை பிரான்சிஸ், அக்டோபர் 17, 2015). நாம் இந்த அழைப்பிற்குப் பதிலளிக்கப் பயப்படத் தேவையில்லை. இப்பயணத்தில் முதன்மையில் செல்பவராம், திரு அவையின் தாயாகிய மரியா, நம்மோடு உடன் பயணிக்கின்றார். மகிழ்ச்சியிலும், கவலையிலும் அவர் தன் மகனை நமக்குக் காட்டி நாம் நம்பிக்கைகொள்ள அழைக்கிறார். அந்த இயேசுவே, நம் ஒரே நம்பிக்கை!
- வத்திக்கான் மாநகர், அக்டோபர் 25, 2023
Comment