No icon

மண் குதிரையும் மாயக் குதிரையும்

பருவ நிலையும், தேர்தல் களமும், வாக்களிப்பு நாளும் கொதி நிலையிலேயே இருந்தன. மக்களோ யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைவிட, யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்கள். தமிழ்நாட்டில்  50 சதவீத வாக்குகள் பெற்று இந்தியா கூட்டணி, முழு வெற்றியைப் பெறும் என்பதே, ஆரம்பம் முதல் தொடர்ந்த வெற்றிக் களிப்புறு நிலை.

சென்னை போன்ற பெருநகர மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை; கள்ளக்குறிச்சி போன்ற கிராமப்புறத் தொகுதிகளை உள்ளடக்கிய மக்கள் அதிகமான சதவீதத்தில் வாக்களித்திருப்பதும்  கவனம்கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே, மாநகரங்களில், அடுத்த தேர்தலுக்கான வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வுப்  பணிகளைத் தேர்தல் ஆணையம் வீரியமாக்க வேண்டும். ‘தேர்தல் நடத்தை விதிகள்என்ற கட்டுப்பாடுகளால், மக்களின் எழுச்சியை எங்கும் காண இயலவில்லை. ஆயினும், காசுக்காகக் கூட்டங்களுக்கும், பேரணிகளுக்கும், வாக்களிக்கவும் செல்லும் மக்கள் குறையவில்லை.

தேர்தல் பணிக்குச் சென்ற பலரும், பொது அரசியல் பார்வையாளர்களும், ஒரு கவனத்திற்குரிய செய்தியைப்   பகிர்ந்தார்கள். அதாவது, பா.. வளர்ந்து விட்டது; .தி.மு.. அழிந்து வருகிறது என்ற செய்தி. உண்மை நிலை, கள எதார்த்தம் எப்படி உள்ளது? தமிழ்நாட்டில் நோட்டாவோடு போட்டி, ஒற்றை ஓட்டு பா... என்று, நாம் பேசிய கேலிகள் பழங்கதையாகி விட்டன. பா... வளர்ந்து வருகிறது என்பதே வருத்தத்திற்குரிய  உண்மை!

தமிழ்நாட்டில் நிற்கிற தொகுதிகளில் டெபாசிட் வாங்குகிற நிலைக்கும், குறைந்தது 5 பாராளுமன்றத் தொகுதிகளில், இரண்டாமிடம்  பெறுகிற நிலைக்கும் உயர்ந்து விட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால்பா...வின் கோட்டை என்கிற கோவை போன்ற நகரங்களில்பூத் கமிட்டிஅமைக்க முடியவில்லை; வாக்குச் சாவடி முகவர்களை நியமிக்க முடியவில்லை. ஏன்? மோடி கலந்து கொண்ட ரோட் ஷோ- விற்கு, ஆள்களைத் திரட்டக் கூட கட்சி ஆள்கள் இல்லை. சின்னஞ் சிறு பள்ளிக்குழந்தைகளை வேடமிட்டு  கொண்டு வந்து நிறுத்தினார்கள். தென் மாவட்டங்களில்  இருந்து கூலிக்கு ஆள் பிடித்துப் போகிற நிலை அண்ணாமலைக்கு இருந்தது. தேர்தல் தினத்தன்றும் பா... கட்சியினர் அவர்களின் தேர்தல் பணிமனைகளில்தான் இருந்தார்கள். அவர்களை வெளியேற்ற தி.மு.., .தி.மு. கொடுத்த அழுத்தங்கள் விழலுக்கு இறைத்த நீரானதுஅதிகாரிகளில் பெரும்பான்மையோர் காவி சிந்தனை கொண்ட ஆர்.எஸ். எஸ்.கள்தானே!

பா...வின் வளர்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்  வெறுப்புப் பிரச்சாரம் அடிநாதமாக முழங்கப்பட்டது. பொதுவானவர்கள் எனக் கருதப்படும், திரைப்பட நட்சத்திரங்கள், பல்துறை பிரபலங்கள், தொழில் அதிபர்கள் ஆர்.எஸ்.எஸ். கொள்கை உடையவர்களாக மாறிவிட்டார்கள். அதன்  அடையாளமாக, தங்கள் நச்சுப் பிரச்சாரத்தைதிராவிட கட்சிகள் இல்லாத தமிழ்நாடு, ஊழல் இல்லாத தமிழ்நாடுஎன்ற கோஷத்தை ஜெயலலிதா, கலைஞர் மறைவிற்குப் பின் வேகமாக அவர்கள் முன்னெடுத்தார்கள். கூடவேமாற்று அரசியல்என்ற வெற்று முழக்கமும் உருவானது. ‘தின மலர்பத்திரிகை தனது முழு நேரப் பணியாக, அதையே திரும்பத் திரும்பக்  கூறியே தமிழர்களை மடை மாற்றுகிறது. மூளைச்சலவை செய்கிறது. தமிழர்கள் தின மலரைப் படிக்காவிடில் விடிவு பெறுவர்; விழிப்பு அடைவர். தின மலர் என்பது தினம் வரும் துக்ளக்; தமிழர்களை அடிமைப்படுத்தும், அதிகாரப்பூர்வ  ஆர்.எஸ்.எஸ். நாளேடு!

இது மட்டுமின்றிச்  சமூக ஊடகங்களில் கூலிக்கு ஆள் வைத்துப் பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுத்ததில், காவிக்கட்சி முன்னிலை பெறுகிறது. இளைஞர்கள் வெறுப்பு மற்றும் பரபரப்பு அரசியலுக்கு உட்படுத்தப்பட்டு, உணர்ச்சிகர, மயக்க நிலையில், மதம் என்ற மதம் ஏற்றப்படுகிறார்கள். இதில் சாதியம் சார்ந்த புது வெறியும் உள்ளடக்கம். குறிப்பாக, “மேற்கு மண்டலங்களில் அதீத சுய சாதி வெறி; அதீத பொருளாதார வளர்ச்சி; சாதிய ஆணவப் போக்குஇருப்பதாகக் குறிப்பிட்டிருந்த பதிவு ஒன்றை என் நண்பர் ஒருவர் அனுப்பினார். அந்தப் பதிவு என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

ஐந்தாண்டுகளுக்கு முன் எடப்பாடி என்றார்கள்; அது மண்குதிரை. தற்போது அண்ணாமலை என்கிறார்கள்இது மாயக் குதிரை. டெல்லி  தலையை அசைத்தால், மறு விநாடியே விலாசம் இல்லாமல் போய் விடுவார். அவரது ஆட்டம் அதிகப்படிதான். தேர்தல் முடிவுகளுக்குப் பின் தி.மு.. என்ற கட்சி இருக்காது என்கிறார் மோடி. அவரது பரமார்த்த சீடன் அண்ணாமலை, .தி.மு.. என்ற கட்சி இருக்காது என்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தமிழ்நாடு சார்ந்த ஒரு வரிச் செயல் திட்டம் இவ்வாறு வெளி வந்து விட்டது. அவர்கள் மடியில் இருந்த பூனைக் குட்டி வெளியே வேகமாகக் குதித்தது. ஆகவே, மாற்றுத் தேட வேண்டியது கட்டாயம்; காலக்கட்டாயம். காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி மீதும், காங்கிரஸ் கட்சி மீதும், ஆயிரம் விமர்சனங்கள், கோபங்கள், தமிழர் நமக்கு இருந்தாலும்எல்லோருக்கும் இராகுலைப் பிடிக்கிறது. காரணம், அவர் மூச்சுக்கு முந்நூறு முறை ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அடித்து விளையாடுகிறார். சமூக நீதி, மாநில உரிமைகள் பற்றிப் பேசுகிறார். இட ஒதுக்கீடு, சாதி வாரிக் கணக்கெடுப்பு, நீட் தேர்வு  ஆகியன மாநில உரிமை என்கிறார்.

திராவிடம் இல்லாத தமிழகம், வேண்டுவோர் சென்று பார்க்க வேண்டிய இடங்கள், தமிழக இரயில் நிலையங்கள். தினமும் சென்னை, சேலம். ஈரோடு, திருப்பூர், கோவை  இரயில் நிலையங்களில், ஆயிரக்கணக்கான  வட இந்திய இளைஞர்கள், வறுமையில் வாடி, பரிதாபமாக, வேலை தேடி  வருவதைப் பார்த்து விட்டு இந்த முழக்கத்தை விட்டொழியுங்கள்.

தமிழ்நாடு கல்வி, பொது சுகாதாரம், அடிப்படை வசதிகள் சார்ந்த தரவுகளில், ஒன்றிய அரசின் தரவுகளுள் முதல் மூன்று இடங்களுக்குள் உள்ளது. ஒன்றிய அரசிற்கு ஜி.எஸ்.டி. வரி அதிகமாகத் தரும் மாநிலங்களில், இரண்டாமிடத்தில் உள்ளது. இப்படி  வாதிட்ட  இடங்களில், பதில் சொல்ல முடியாமல் வைக்கப்படும், எதிர் கேள்வி இதுதான். திராவிட கட்சிகள் தமிழ்நாட்டைக் குடிகாரர்கள் நிறைந்த மாநிலமாக மாற்றிவிட்டார்களே என்பதே. காந்தி பிறந்த குஜராத்தில், இந்தியாவிலே பா...வை அசைக்க  முடியாத அந்த  மாநிலத்தில், மது விலக்கு உண்டு. அங்குப் பாலுக்கு வேண்டுமானால், தட்டுப்பாடு  ஏற்படும். வீதிக்கு வீதி கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது என்பதே எதார்த்த நிலை. போதைப்பொருள்கள் நடமாட்டம், புழக்கம் என்பதின் பட்டியலில் முதல் பத்து இடங்களைப் பாருங்கள். அதில் வட இந்திய மாநிலங்களே உள்ளன. அவை  வளர்ச்சி பெறாத  நிலைக்குப்  போதை பொருள் பழக்கமும் ஒரு காரணமே. வட இந்தியாவில் இரயில் நிலையங்களின் தரையில் கால் வைக்க முடியாத காவி நிற எச்சிலும்... வாய் புற்றும்... கறை படிந்த பல்லுடன் ஆணும், பெண்ணும் இருப்பதும் எதைச் சொல்கிறது?

பா... என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவு. ஆர்.எஸ்.எஸ். என்பது மத தீவிரவாத அமைப்பு. அது மாநிலங்களுக்கு ஏற்பப் பொய் பிரச்சாரங்களை வைக்கும். சமூக, மத, நல்லிணக்கம் கெடுக்கும். மக்களைப் பிளக்கும். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பொய்ப் பிரச்சாரங்களால் தமிழரை ஆளத் துடிக்கிறது. அதன் முதற்படியாக  மண்குதிரையைக் கரைக்கும்; மாயக்குதிரையைப் பறக்கவிடும். அய்யனார் சாமி வழிபாட்டு முறையைக் கொண்ட, மண் குதிரைகளை வழிபடும் தமிழ் மரபின மக்கள் மதவாத சதிகளை முறியடிப்பர்.

Comment