No icon

செயற்கை நுண்ணறிவும் இதயத்தின் ஞானமும்

அன்புள்ள சகோதரர்களே, சகோதரிகளே!

நான் அண்மையில் வெளியிட்டுள்ள உலக அமைதி நாளுக்கான செய்தியில் செயற்கை நுண்ணறிவுச் செயல்பாட்டு முறைகளின் வளர்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இந்தச் செயற்கை நுண்ணறிவு, தகவல் மற்றும் தொடர்பாடல் உலகையும், நாம் வாழும் சமூகத்தின் சில அடித்தளங்களையும் முற்றிலும் பாதிக்கிறது. இம்மாற்றங்கள் இத்துறைகளில் தொழில்புரியும் வல்லுநர்களை மட்டுமல்லாமல், எல்லாரையும் பாதிக்கின்றன. இத்துறைகளின் வியத்தகு புதுமைப்படுத்துதல்கள் மிக விரைவாகப் பரவி வருகின்றன. இவற்றின் ஆற்றலும், செயல்பாடுகளும் நாம் நினைத்துப் பார்க்கக்கூட முடியாத அளவுக்கு மனிதர் பலரின் புரிந்துகொள்ளும், பயன்படுத்தும் எல்லைக்கு அப்பாற்பட்டதாக உள்ளன.

இவை பொதுவாக மக்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் பலரைத் திசைதிருப்புவதாகவும் உள்ளன. மனிதர் ஒவ்வொருவரின் இயல்பு, தனித்தன்மை, அவர்களின் தன்னுரிமை, எதிர்காலத்தில் மனிதரின் அறியும் திறன் போன்ற மானுடத்தின் மிக அடிப்படையான கேள்விகளுக்குச் செயற்கை நுண்ணறிவு நம்மை இட்டுச் செல்கின்றது. முழுமையான மனிதர்களாக இருந்துகொண்டு நல்ல ஒரு நோக்கத்திற்காக இக்கலாச்சார மாற்றத்தை எவ்வாறு வழிநடத்த முடியும் என்பது இன்றைய முக்கிய கேள்வியாகும்.

இதயத்தில் இருந்து தொடங்கி...

அனைத்திற்கும் முன்பு பேரழிவு குறித்த கணிப்புகளையும், அவை விளைவிக்கும் தடுமாற்றங்களையும் நாம் ஒதுக்கி வைக்க வேண்டும். நூறு ஆண்டுகளுக்கு முன் ரோமானோ குவார்தியானி என்பவர் ‘தொழில்நுட்பமும், மானுடமும்’ என்ற பொருளில் சிந்தித்தார். காலப்போக்கில் காணாமல் போவதற்கென்றே குறிக்கப்பட்ட அழகான இன்றைய உலகைப் பாதுகாக்க வேண்டுமென்பதற்காகவே ‘புதிதாகத் தோன்றும் எதையும் மறுத்து ஒதுக்கக்கூடாது’ என்று அவர் நம்மை எச்சரித்தார். அதேவேளையில், அவர் இறைவாக்குத்தன்மையோடு நம்மைப் பின்வருமாறு எச்சரித்தார்: “நாம் அனைவரும் தொடர்ந்து மாற்றத்திற்கான செயல் முறைகளில் ஈடுபட்டுள்ளோம். நாம் ஒவ்வொரு வரும் அவரவருக்கு உரிய விதத்தில் மாற்றத்திற் கான இச்செயல்முறைகளில் திறந்த மனத்தோடும், இவற்றில் உள்ள அழிவுக்கும், மனிதத்தன்மைக்கு மாறானதுமான செயல்பாடுகளை உணர்ந்தவர் களாகவும் இவற்றில் ஈடுபட்டாக வேண்டும்”.

அவர் மேலும் பின்வருமாறு கூறி முடித்தார்: “இவையனைத்தும் அறிவியல், தொழில்நுட்பம், அரசியல் சார்ந்த பிரச்சினைகள் எனினும், மனிதரிட மிருந்தே தொடங்கினாலன்றி இவற்றிற்குத் தீர்வு காண முடியாது. ஆழ்ந்த ஆன்மிகமும், புதிய தன்னுரிமையும், ஆழ்ந்த உள்நோக்கும் கொண்ட ஒரு புதிய மானிடத்தை நாம் உருவாக்க வேண்டும்”.

தொழில்நுட்பத்தில் சிறந்தவர்களாகவும், மனிதத்தன்மையில் ஏழ்மையானவர்களாகவும் மானுடம் மாறிக்கொண்டிருக்கும் ஒரு பெரும் சவாலை இன்றைய நமது வரலாறு சந்திக்கத் தொடங்கியிருக்கிறது. இச்சூழலில், நமது சிந்தனை கள் மனித இதயத்திலிருந்து தொடங்க வேண்டியது மிக அவசியம்.

உலகை ஓர் ஆன்மிகக் கண்ணோட்டத்தில் பார்க்க முற்படுவதாலும், இதயத்தின் ஞானத்தை மீட்டெடுத்தலாலும் மட்டுமே நாம் வாழும் இக்காலத்தின் புதுமைத் தன்மையை எதிர்கொள்ள வும், அதற்கு விளக்கம் கூறவும் இயலும். இவ்வாறு முழுமையான மனித தொடர்பாடலுக்கான வழியை மீண்டும் கண்டுபிடிக்க முடியும்.

திருவிவிலியத்தில் இதயம் என்பது தன்னுரிமை யோடு முடிவெடுக்கும் இடமாகக் காணப்படுகிறது. மனித வாழ்வின் நேர்மை, முழுமை, ஒன்றிப்பு, உள்ளார்ந்த அமைதி ஆகியவற்றின் அடையாள மாகவும் இதயம் அமைந்துள்ளது.

அதேவேளையில், இந்த இதயம் உணர்வுகள், விருப்பங்கள், கனவுகள் ஆகியவற்றில் நம்மை ஈடுபடச் செய்கின்றது. அனைத்திற்கும் மேலாக இந்த இதயம் நாம் உள்ளார்ந்த விதத்தில் கட வுளைச் சந்திக்கும் இடமாகவும் விளங்குகிறது.

உலகின் ஒவ்வொரு பகுதியையும் அதன் முழு மையுடனும், நாம் எடுக்கும் முடிவுகளையும் அவற்றின் பின்விளைவுகளையும், நமது பெருந் தன்மையையும், அதன் தற்காப்பற்ற நிலைமை யையும், நமது கடந்த காலத்தையும், எதிர்காலத் தையும், நமது தனித்தன்மையையும், பரந்துபட்ட சமுதாயத்தில் நாம் உறுப்பினர்களாய் இருப்பதை யும் ஒருங்கிணைக்கும் ஆற்றலே இதயத்தின் ஞானம் எனப்படுகிறது.

இதயத்தின் இந்த ஞானத்தைத் தேடுவோர் அதனைக் கண்டடைவர். ஞானம் ஒளிமிக்கது. மங்காதது. அதன்பால் அன்புகூர்வோர் இதை எளிதில் கண்டுகொள்வர். அதைத் தேடுவோர் கண்டடைவர். தன்னை நாடுவோருக்கு அது தன்னையே விரைந்து வெளிப்படுத்தும் (சால மோனின் ஞானம் 6:12-16). பிறருடைய அறிவுரை களை ஏற்போரிடம் ஞானம் காணப்படும் (நீதிமொழி 3:10). நன்மை-தீமைகளைப் பகுத்தறிய ஞானம் தேவை (1அரசர் 3:9).

ஆவியாரின் கொடை என்ற விதத்தில் ஞானம் இவ்வுலகையும், அதில் உள்ள தொடர்புகளையும், சூழல்களையும், நிகழ்வுகளையும் கடவுளின் பார்வை யில் காணும் ஆற்றலை மனிதருக்குத் தருவதால் மனிதர் மேற்கூறிய அனைத்தின் பொருளையும் உணர்ந்து வாழ இயலும்.

இத்தகைய ஞானம் இல்லாமல் வாழ்வு சுவை யற்றதாகிறது. ஏனெனில், ஞானம் என்பதன் மூல இலத்தீன் வினைச்சொல்லாகிய சப்பேரே என்ப தற்கு ‘அறிதல்’ மற்றும் ‘சுவைத்தல்’ என்றும், ‘சாப் போர்’ என்றப் பெயர்ச்சொல்லுக்கு ‘சுவை’ என்றும் பொருள் கொள்ளலாம். இதனால் ஞானம் வாழ்வை நாம் சுவைக்கச் செய்கிறது எனலாம். 

(தொடரும்)

Comment