
காசா பங்குத் தந்தைக்குத் திருத்தந்தையின் தொலைபேசி அழைப்பு!
காசா பங்குத் தந்தை கேப்ரியல் ரொமனெல்லி அவர்கள், ஹமாஸ் பயங்கர வாதத் தாக்குதல் மற்றும் இஸ்ரேலியப் படைகளின் எதிர்தாக்குதல்களில் மக்களின் நிலை என்ன என்பதைக் கண்டறிய திருத்தந்தை பிரான்சிஸிடமிருந்து இரண்டு தொலைபேசி அழைப்புகள் பெற்றதாக வத்திக்கான் செய்திக்குத் தெரிவித்துள்ளார்.
காசா கிறிஸ்தவச் சமூகத்தினரிடையே இறப்பு அல்லது சேதங்கள் ஏற்பட்டதாக இதுவரை எந்தத் துல்லியமான அறிக்கையும் வெளியிடப்படவில்லை. ஆனால், இந்தத் தாக்குதலால் காசாவின் முழு பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளதைக் காணும்போது காசா கத்தோலிக்கத் தலத் திரு அவையில் ஏறக்குறைய 150 பேர் வீடுகளை இழந்து, பாதுகாப்பான இடத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று காசா பங்குத் தந்தை கேப்ரியல் ரொமனெல்லி கூறினார்.
காசாவின் நிலைமையை அறியவும், இப்போது காசா தலத் திரு அவையில் அகதிகளாக இருக்கும் மக்களுக்குத் தனது நெருக்கத்தைக் காட்டவும், திருத்தந்தை இந்தத் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
Comment