
போரை நிறுத்த திருத்தந்தையின் தொடர் முயற்சி!
காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவிற்கிடையே போர் மூண்ட நாளிலிருந்து திருத்தந்தை அவர்கள் போரால் பாதிக்கப்பட்டுள்ள அம்மக்களுடன் தன் ஒன்றிப்பை ஏதாவது ஒரு வகையில் வெளிப்படுத்தி வருகின்றார். அவ்வகையில் காசா பங்குத்தந்தை கேப்ரியல் ரொமனெல்லி அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு காசா மக்களின் நிலைமையைக் கேட்டறிந்தார். தற்போது காசாவில் உள்ள திருக்குடும்ப பங்குத்தள மக்களுடன் நேரடியாகவே தொலைபேசியில் தொடர்பு கொண்டு அம்மக்களின் நிலைமையைக் கேட்டறிந்து, அவர்களுக்குத் தனது செபத்தையும், ஆறுதலையும் கூறினார். மேலும், இப்போரினால் அனைத்தையும் இழந்து துன்பப்படும் மக்களுக்காக உதவி வரும் எருசலேமின் செபமாலை அன்னை சபை சகோதரிகளுக்கும் தொலைபேசியில் நன்றி கூறினார்.
மேலும், ‘புனித நாட்டில் அமைதி நிலவ உதவுங்கள்’ என்று அக்டோபர் 22-ஆம் தேதி ஞாயிறு மாலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனுடன் 20 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினார். புனித நாட்டில் அமைதி நிலவ அக்டோபர் 27-ஆம் தேதியை இறைவேண்டல், நோன்பு மற்றும் பரிகார நாளாகக் கடைப்பிடிக்க அகில உலகக் கத்தோலிக்கத் திரு அவையைத் திருத்தந்தை கேட்டுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
Comment